India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 லட்சம் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. எஸ்.பி சமய்சிங் மீனா உத்தரவின் பேரில் கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா தலைமையிலான போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது போலீசார் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டிவனத்தில் நேற்று (ஏப்ரல்.13) வரும் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டி பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் விநியோகித்த லயன் சங்க உறுப்பினர்கள். திண்டிவனம் உழவர் சந்தையில் பொதுமக்களிடம் “தேர்தல் தேசத்தின் பெருவிழா”என திண்டிவனம் லயன் சங்கம் மற்றும் கல்லூரி மாணவிகள் இணைந்து நடத்திய பேரணியில் நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்களிக்க வேண்டி பொதுமக்களிடம் நோட்டீஸ் விநியோகித்தனர்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் எதிர்வரும் ஏப்ரல்.19 அன்று நடைபெறுகிறது. இதையொட்டி, (ஏப்ரல்.17) காலை 10 மணி முதல் (ஏப்ரல்.19) நள்ளிரவு 12 மணி வரை மற்றும் (ஜூன்.4) ஆகிய தினங்களில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட வேண்டும் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கீழ் புத்துப்பட்டு கிராமத்தில் இன்று (ஏப்.13) காலை பானை சின்னத்திற்கு மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன் வாக்கு சேகரித்தார். விசிக வேட்பாளர் ரவிக்குமாருக்காக மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன் கீழ்புத்துபட்டு கிராமத்தில் இன்று காலை வீடு வீடாக வாக்கு சேகரித்தார். இளைஞர் ஒருவர் தலையில் பானையை சுமந்தபடி சுற்றி வருவது வேடிக்கையாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா கிளியனூர் அருகே கொடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம், இவரது மகள் சகிலா (22). இவர் கடந்த 4 நாள்களாக காணவில்லை என அவரது தந்தை ராமலிங்கம் நேற்று (ஏப்ரல் 12) புகார் அளித்துள்ளார். 4 நாள்களுக்கு முன்பு கடை வீதிக்கு சென்றவர் வீடு திரும்பாததால், பல இடங்களில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் ராமலிங்கம் கிளியனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் , விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாக்யராஜ் இன்று (ஏப்ரல் 12) தீவிரவாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார். அப்பொழுது அங்கிருந்த டீ கடைக்கு சென்று டீ போட்டு வாக்கு சேகரித்தார். இந்த நிகழ்வில் அதிமுக நகர செயலாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் தலைமையில் ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி சமத்துவ நாள் உறுதிமொழி அனைத்து துறை அலுவலர்களுடன் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் சாதி வேறுபாடுகளுக்கு எதிராகவும், சாதிகளின் பெயரால் நடக்கும் சமூக அடக்குமுறைகளுக்கு எதிராகவும், வேறுபாடுகள் ஏதுமில்லாத சமத்துவ சமுதாயத்தை அமைக்க நாம் அனைவரும் பாடுபடுவோம் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் அசம்பாவிதங்களை தவிர்க்க அனைத்து தொகுதிகளிலும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதை முன்னிட்டு திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தி.தேவனூர் ஊராட்சியில் அழகன் நல்லூர் காவல் நிலைய உதவியாளர் லியோ சார்லஸ் தலைமையில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தினர்.

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள, திமுக மாவட்ட அலுவலகத்தில், விழுப்புரம் தொகுதி உள்ள விசிக மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு தலைமையில் நேற்று (ஏப்.11) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார்.

நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 19ஆம் தேதி நடைபெறும் நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர் மற்றும் அலுவலர்கள் தங்களது வாக்கினை நாளை 12ம் தேதியும் 14ம் தேதியும் திண்டிவனம், வானூர், விழுப்புரம். விக்கிரவாண்டி,திருக்கோயிலூர்,உளுந்தூர்பேட்டையும்
ஆரணி தொகுதிக்கு மைலம் மற்றும் செஞ்சி ஆகிய இடங்களில் தங்களது தபால் வாக்கை செலுத்தலாம் என கலெக்டர் பழனி கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.