India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் பழனி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை பார்வையிட்டார்.

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் பகுதியில் உள்ள,இ. எஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் எட்டாம் ஆண்டு விழா நேற்று (ஏப்ரல் 30) முதல்வர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் வேல்முருகன் வரவேற்றினார், சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி பல்கலைக்கழகம் சுப்பிரமணிய பாரதி தமிழ் மொழி மற்றும் இலக்கிய பள்ளித் துறை தலைவர் கருணாநிதி கலந்து கொண்டார்.

விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், வானூர் அடுத்த பூத்துறை கிராமத்தில், செம்மண் குவாரியில் விதிகளை மீறி அதிக அளவில் செம்மண் அள்ளியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி எம்பி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று (ஏப்.30) நடைபெற்ற விசாரணையை தொடர்ந்து வழக்கினை வரும் ஜூன் 3ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

கடும் கோடை வெப்பத்தின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்படும் நீர்ச்சத்து குறைபாட்டை போக்கும் விதமாக, மேல்மலையனூர் வட்டம், வளத்தி ஊராட்சியில் சுகாதாரத் துறை சார்பில் ORS கரைசலை பொதுமக்களுக்கு திமுக ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் இன்று (ஏப் 30) வழங்கினார்.
இந்நிகழ்வில் வட்டார மருத்துவ அலுவலர் வெங்கடேசன், வளத்தி ஊராட்சி மன்ற தலைவர் விஜயலட்சுமி ஜெயக்குமார், துணைத் தலைவர் கோவிந்தன் உள்ளிடோர் உடனிருந்தனர். 

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட விளையாட்டரங்கில் நேற்று முதல் மே 13ஆம் தேதி வரை கோடை கால பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது. இந்த பயிற்சி முகாமில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும். தடகளம், கபடி, கைப்பந்து, மல்லர்கம்பம், வாலிபால் ஆகிய விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படுவதாக ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

ஆரோவில் அடுத்த குயிலாபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (39). பிரபல ரவுடியான இவர் மீது 9 கொலை வழக்கு உள்ளிட்ட 24 வழக்குகள் உள்ளன. பாளையங்கோட்டை சிறையிலிருந்து கடந்த மாதம் வெளியே வந்த ரவுடிராஜ்குமார் விழுப்புரம் நீதிமன்றத்தில் கையெழுத்திட்டு வந்தார். இந்நிலையில் நேற்று ஆரோவில் இன்ஸ்பெக்டர் தேவேந்திரன் விசாரணைக்காக அழைத்தபோது அவர் குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.

மே ஒன்றாம் தேதி தொழிலாளர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் மதுபான கடைகள் மற்றும் மதுபான விடுதிகள் ஆகியவற்றை நாள் முழுவதும் அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது சட்டப்பிரிவுகளுக்கு கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு மையத்திலிருந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் இன்று (ஏப்.29) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் மாவட்ட (கள்ளக்குறிச்சி உள்பட) நீதித்துறையில் 124 காலியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி. வயது வரம்பு: ஜூலை 1ஆம் தேதி 2024 அன்று 32 வயதுக்குள் இருக்க வேண்டும். பணி இடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mhc.tn.gov.in/recruitment/notification_dist தளத்தில் மூலம் அறிந்து கொள்ளலாம். இதற்கான விண்ணப்பங்களை மே 27ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

விழுப்புரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டார்
Sorry, no posts matched your criteria.