India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்ற வாக்குப்பதிவு இயந்திரங்கள் முழுவதும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் 30 நிமிடம் வேலை செய்யாததால் பரபரப்பு உண்டானது.மேலும் தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் யூ.பி.எஸ்-ல் ஏற்பட்ட மின்தடை சரிசெய்யப்பட்டு சிசிடிவி கேமராக்கள் செயல்பட தொடங்கியது என ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் 6 சிசிடிவி கேமராக்கள் அரை மணி நேரம் இயங்காததை தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினரும் தற்போதைய விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளர் ரவிக்குமார் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து விளக்கம் கோரினார். ஆட்சியர் மின்னழுத்தம் தான் காரணம் என்று விளக்கம் அளித்ததாக ரவிக்குமார் தெரிவித்தார்.

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள, அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி பகுதியில் நடைபெற்ற தேர்தலின்போது வாக்கு பதிவு செய்யப்பட்ட பெட்டிகள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு திடீரென இன்று (மே 3) யுபிஎஸ் பேட்டரிகள் பழுதானதால், சுமார் 20 நிமிடங்கள் சிசிடிவி கேமராக்கள் செயல் இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மாவட்ட விளையாட்டு விடுதிகளில் சேர்ந்து படிப்பதற்கான தோ்வு போட்டிகள் விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கத்தில் வரும் 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 6, 7, 8, 9, 11ஆம் வகுப்பு சேர்க்கைக்கான தோ்வு 10ஆம் தேதி காலை 7 மணிக்கு மாணவர்களுக்கும், 11ஆம் தேதி காலை 7 மணிக்கு மாணவிகளுக்கும் விழுப்புரம் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. தகுதியுள்ள மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இன்று (மே 3) சுபமுகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்கள் என்பதால் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய ஊர்களுக்கு ஏராளமான பொதுமக்கள் செல்ல இருக்கின்றனர். இந்நிலையில், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து இன்று 200 பேருந்துகளும், நாளை 250 பேருந்துகளும் இயக்கப்படும் என விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதனை கண்காணிக்கும் பொருட்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த கேமராவின் படக் காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து மாவட்ட ஆட்சியர் பழனி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அதனை கண்காணிக்கும் பொருட்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த கேமராவின் படக் காட்சிகளை கட்டுப்பாட்டு அறையில் இருந்து மாவட்ட ஆட்சியர் பழனி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

விழுப்புரத்தில் அமைந்துள்ளது செஞ்சி கோட்டை. மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய மலைகள், 12 கி.மீ நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்து, முக்கோண வடிவமாக அமைந்துள்ளது இக்கோட்டை. பல போர்களை சந்தித்த செஞ்சிக் கோட்டையை பல்லவர்கள் வழிவந்த காடவ மன்னன் செஞ்சியர் கோன் காடவன் கட்டியதாகவும், இடையர் குலத்தைச் சார்ந்த அனந்தக்கோன் என்பவர் கட்டியதாகவும் இருவேறு கருத்துகள் உள்ளன.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் குரு பரிகார ஸ்தலமான முன்னூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ பிரகன் நாயகி சமேத ஸ்ரீ ஆடவல்லீஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி முன்னிட்டு தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். தட்சணாமூர்த்தி மேற்கு திசை நோக்கி அமைந்திருப்பது தனி சிறப்பு.

திண்டிவனம் சர்வீஸ் லயன்ஸ் சங்கம், லயன்ஸ் சர்வீஸ் ட்ரஸ்ட்
Ln. ஸ்மைல் ஆனந்த் ஏற்பாட்டில் இன்று (மே 1) கண் தானம் வழங்கப்பட்டது.
திண்டிவனம் நல்லியகோடன் நகர் உமாபதி தெரு விரிவாக்கத்தில்
வசித்து வந்த
சென்னம்மாள் என்பவர் இயற்கை எய்தியதை   தொடர்ந்து,
அம்மையாரின் கண்கள்
பார்வை குறைபாடுள்ள நாலு நபர்கள் பயன்பெறும் வகையில் புதுவை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு கண் தானமாக வழங்கப்பட்டது.  
Sorry, no posts matched your criteria.