Villupuram

News October 10, 2025

புற்றுநோய் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்த ஆட்சியர்

image

இந்திய மருத்துவ சங்கம் விழுப்புரம் கிளை மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி இன்று (அக்.10) விழுப்புரத்தில் நடைபெற்றது. ஆட்சியில் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணியை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரகுமான் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.சரவணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

News October 10, 2025

விழுப்புரம் : மத்திய அரசு வேலை, ரூ.92,000 வரை ஊதியம்

image

தேசிய அருங்காட்சியகத்தில் காலியாக உள்ள உதவியாளர், டெக்னீஷியன், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th, ஐடிஐ, Visual Art / Fine Arts / Commercial Arts) டிகிரி முடித்த 19 முதல் 35 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். பணிக்கு ஏற்ப மாதம் ரூ. 19,900 – ரூ. 92,000 வரை ஊதியம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்க கிளிக் செய்து<<>> வரும் அக்.20க்குள் விண்ணப்பிக்கலாம்.

News October 10, 2025

விழுப்புரம்: EB கட்டணத்தை குறைக்க சூப்பர் ஐடியா!

image

விழுப்புரத்தில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், பிரதான் மந்திரி மானியத்துடன் வீடுகளுக்கு சோலார் மின் இணைப்பு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மின்சார செலவை குறைக்கவும், மின் சிக்கனத்தை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் <>ஆன்லைன்<<>> மூலம் விண்ணப்பித்து இந்த மானிய சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். TANGEDCO இணையதளத்தையும் பார்வையிடலாம். ஷேர்!

News October 10, 2025

விழுப்புரம்: கடன் தொல்லை நீங்க இங்கு போங்க!

image

விழுப்புரம் அருகே திருநகரில் அமைந்துள்ள மகாலட்சுமி குபேரர் கோவில், செல்வம் பெருக்கும் சக்திவாய்ந்த தலமாக விளங்குகிறது. இங்குள்ள செல்வத்திற்கு அதிபதியான லட்சுமி மற்றும் குபேரனை சனிக்கிழமைகளில் வழிப்பட்டால், கடன் தொல்லைகள் நீங்கி, வாழ்வில் செல்வம் செழிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பணக்கஷ்டத்திலும், கடனிலும் வாடும் உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் இதனை ஷேர் பண்ணுங்க!

News October 10, 2025

விழுப்புரம்: லைசன்ஸ் இல்லையா? NO PROBLEM

image

விழுப்புரத்தில் போலீசார் வாகனங்களை சோதனை செய்யும்போது லைசென்ஸ் கையில் இல்லை என்ற கவலை வேண்டாம். DigiLocker, M parivaahan போன்ற அரசின் செயலிகளில் RC புக், லைசென்ஸ் போன்ற ஆவணங்களை வைத்து கொண்டு, அதை சோதனையின்போது காண்பிக்கலாம். இந்த செயலி மூலம் காண்பிக்கும் ஆவணங்களை, காவல்துறையினர் ஏற்க முடியாது என்று சொல்ல முடியாது. சொல்லவும் கூடாது. ஷேர் பண்ணுங்க.

News October 10, 2025

விழுப்புரம்: SIM கார்டால் வரும் ஆபத்து-உஷார்!

image

விழுப்புரம் மக்களே, இணையதள பயன்பாடு அதிகரிக்க ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கிறது. மோசடிக்கு மூலப்பொருள் சிம் கார்டுதான். மோசடியாளர்கள் மற்றவர்கள் பெயரில் உள்ள சிம் கார்டுகளைதான் மோசடிக்கு பயன்படுத்துகின்றனர். இந்த <>லிங்க் <<>>மூலம் நீங்கள் உங்கள் பெயரில் உள்ள சிம் கார்டு விவரங்களை பெற்று, உபயோகத்தில் இல்லாத சிம் கார்டுகளை நீக்கலாம். உங்கள் சிம் கார்டுகளை மற்றவர்கள் பயன்படுத்துவதை தடுக்கலாம். ஷேர்.

News October 10, 2025

விழுப்புரம் எம்.பி மத்திய அமைச்சருக்கு கடிதம்!

image

விழுப்புரம் எம்பி ரவிகுமார், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நேற்று (அக்.09) கடிதம் எழுதியுள்ளார். அதில், மாற்றுத் திறனாளிகள் சிறுரக கார் வாங்க 10% GST வரி சலுகை வழங்கப்பட்டு வந்தது. 28% GST வரி இருந்தபோது அவர்களுக்கு 18% விதிக்கப்பட்டது. தற்போது GST வரிகளில் மாற்றம் செய்யப்பட்டு சிறுரக கார்களுக்கு 18% வரி விதிக்கப்பட்டுள்ளதால், மாற்றுத்திறனாளிகளுக்கு 10% GST வரி விதிக்க வலியுறுத்தியுள்ளார்.

News October 10, 2025

விழுப்புரம் மக்களே ஹோட்டலில் தரமற்ற உணவா?

image

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை பல இடங்களில் தீவிர சோதனையில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மறுபக்கம் தரமற்ற உணவு, கலப்படப் பொருட்களை கொண்டு சமைத்தல் போன்ற புகார் தொடர்ந்து எழுகிறது. சமீப காலமாக உணவில் தேரை, பல்லி, பாம்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக 9444042322 என்ற Whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

News October 10, 2025

விழுப்புரம்: டிகிரி போதும், ரயில்வேயில் நிரந்தர வேலை!

image

தமிழக ரயில்வேயில் Seclection controller பணிக்கான வேலை வாய்ப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எதாவது ஒரு டிகிரி முடித்த 20-30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 368 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாத சம்பளம் ரூ.35,400 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்க <>கிளிக்<<>> செய்து அக்.14க்குள் விண்ணப்பிக்கவும். சந்தேகம் இருப்பின்: 9592001188 என்ற எண்ணை அழைக்கலாம். ஷேர் பண்ணுங்க.

News October 10, 2025

விழுப்புரம்: 12 வட்டாச்சியர்கள் இடமாற்றம்: ஆட்சியர் அதிரடி!

image

விழுப்புரம் மாவட்டத்தில் 12 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் கனிமொழி, திண்டிவனம் தனி வட்டாட்சியராகவும், திண்டிவனம் சிப்காட் தனி வட்டாட்சியர் வேலு, மேல்மலையனூர் வருவாய் வட்டாட்சியராகவும், திருவெண்ணெய்நல்லூர் தனி வட்டாட்சியர் கண்ணன், விழுப்புரத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!