India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் (Strong Room) வைக்கப்பட்டுள்ள 06 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு மையத்திலிருந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி நேற்று (மே 13) நேரில் பார்வையிட்டார்.

அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. விழுப்புரம் வி.ஆர்.பி. மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சிவகுருநாதன் தலைமை தாங்கினார். இதில் கிளை ஆண்டு விழா கொண்டாடுவது குறித்து ஆலோசனை நடைபெற்றது.

தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் மாணவர்கள் 85.12% பேரும், மாணவியர் 93.51% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 89.41% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாநில அளவில் 26வது இடம். மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகே நள்ளிரவில் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக நின்றுகொண்டிருந்த டாட்டா ஏசி வாகனம் மீது கார் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காவலர் உட்பட நான்கு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தால் திண்டிவனம்-சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அடுத்த வளத்தி மரக்கோணம் மாரியம்மன் கோயில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு வளத்தி காவல் நிலையம் அனுமதி மறுத்தது. இந்நிலையில் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் வளத்தி காவல் நிலையத்தின் காரணங்களை ஏற்று ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடை விதித்தது.

கீழ்புத்துப்பட்டு அய்யனார் கோயில் அருகே பட்டாசு ஆலை நடத்தி வந்த ராஜேந்திரன் வயது 56 கடந்த 9ம் தேதி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் படுகாயம் அடைந்தார். கௌரி மற்றும் ஆண்டாள் ஆகியோரும் காயம் அடைந்தனர். உடல் முழுவதும் 80 சதவிகித தீக்காயத்துடன் ராஜேந்திரன் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்தார். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், கோடை வறட்சியால் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நிலுவையில் உள்ள குடிநீர் பணிகளை விரைந்து முடிப்பது குறித்து நடைபெற்ற 12-வது மாவட்ட அளவிலான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டியளித்தார். அப்போது, மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆவார். தமிழகத்தில் போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தமிழக அரசு காலம் கடத்தி வருகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பாமக பேச்சுவார்த்தை நடத்தும் என்றார்.

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (மே.13) நண்பகல் 1 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கூச்சி குளத்தூர் கூட்ரோட்டில் இன்று சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென சாலையின் பக்கவாட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 60-க்கும் மேற்பட்டோர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.