Villupuram

News May 15, 2024

விழுப்புரம் கலெக்டருக்கு எம்பி பாராட்டு

image

“கஞ்சனூர் அருகில் குடிநீர் கிணற்றில் கிடந்தது மலம் அல்ல; தேனடை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரைந்து நடவடிக்கை எடுத்து விளக்கம் அளித்த ஆட்சியருக்கு பாராட்டுகள். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் சமூகப் பதற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வுகளை எச்சரிக்கையாக கையாள வேண்டும் என ஊடகங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரையும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்” என ரவிக்குமார் எம்பி தெரிவித்துள்ளார்.

News May 15, 2024

குடிநீர் கிணற்றில் மலமா? வதந்திக்கு முற்றுப்புள்ளி

image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் கஞ்சனூர் ஊராட்சிக்குட்பட்ட கே.ஆர்.பாளையத்தில் உள்ள குடிநீர் திறந்தவெளி கிணற்றில் மலம் கிடப்பதாக இன்று காலை சுமார் 9 மணி அளவில் வதந்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட துறையினர் நேரடி ஆய்வு செய்ததில் அது மலம் அல்ல; தேனடை என கண்டறியப்பட்டது. அதனை கிராம மக்கள் அனைவருக்கும் காண்பித்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர்.

News May 15, 2024

விழுப்புரம்: நாளை இங்கெல்லாம் மின்தடை

image

ஜானகிபுரம் துணைமின் நிலையத்தில் நாளை  பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் விழுப்புரம் பெரியார் நகர், பாண்டியன் நகர், எத்திராஜ் நகர், இந்திரா நகர், இந்திரா பிரியதர்ஷினி நகர், அன்னை தெரசா நகர்,டி.எஸ். ஆர்.நகர், அரசு ஊழியர் நகர், மஞ்சு நகர், ஆடல் நகர், வளவனுார் அடுத்த மூங்கில்பட்டு, மாத்துார், வாக்கூர், முதலியார்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News May 15, 2024

விழுப்புரம்: ஆதிதிராவிடர் பள்ளி 100% தேர்ச்சி!

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சிங்கனூர் அரசு ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளியில் 100% மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தலைமை ஆசிரியை மணிமேகலை மாணவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் வெகுவாகப் பாராட்டினார்.

News May 14, 2024

விழுப்புரம் அருகே ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் அருகே ஏனாதிமங்கலம் கிராமத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் புதிய அணைக்கட்டு பகுதியில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி நீரில் பணிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்து விரைவில் பணிகளை முடிக்க கோரி ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார். மேலும், பணிகள் நலமாக இருக்க வேண்டும் என்று எச்சரித்தார்.

News May 14, 2024

விழுப்புரம்: ஆதிதிராவிடர் பள்ளி 100% தேர்ச்சி!

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சிங்கனூர் அரசு இன்று (மே 14) பதினொன்றாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதில் ஆதிதிராவிட நல மேல்நிலைப் பள்ளியில் 100% மாணவர்கள் தேர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தலைமை ஆசிரியை மணிமேகலை மாணவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களையும் வெகுவாக பாராட்டினார்.

News May 14, 2024

விழுப்புரம் அருகே விபத்து: லாரி ஓட்டுநர் பலி

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த அண்ணமங்கலம் கூட்டு சாலை அருகே தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து செஞ்சி வழியாக சேத்பட் மார்க்கமாக திராட்சை ஏற்றி சென்ற லாரியும், மேல்மலையனூரில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில், தேனி மாவட்டம் கம்பம் அடுத்த பூசாணம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் நாகராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

News May 14, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் மழை

image

குமரிக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி மாலை 4 மணி வரை விழுப்புரம் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 14, 2024

விழுப்புரம்: 30 கிமீ துரத்தி சென்று ரவுடியை பிடித்த போலீஸ்

image

திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெரால்ட் ராபின்சன்னுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் நேற்றிரவு புதுச்சேரியிலிருந்து சென்னை ஆலந்தூருக்கு காரில் மதுபாட்டில் கடத்திய தூக்கணாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடி பிரதாப்பின் (24) காரை 30 கிமீ பின் தொடர்ந்து மரக்காணத்தில் சுற்றி வளைத்து கைதுசெய்தனர். அவர் கடத்திய 1440 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

News May 14, 2024

விழுப்புரம் : அரசு பள்ளி தேர்ச்சி விகிதத்தில் 18 ஆவது இடம்

image

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் விழுப்புரம் மாவட்டம் 18 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 87.06% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 81.25 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 92.03 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

error: Content is protected !!