Villupuram

News May 17, 2024

விழுப்புரம்: 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

image

விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இன்று (மே 17) மதியம் 1 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News May 17, 2024

விழுப்புரம்: அம்மன் கோவில் திருவிழாவில் அமைச்சர் பங்கேற்பு

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த கீழ அருங்குணம் கிராமத்தில் நேற்று (மே 16) அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவில் தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் திமுக மரக்காணம் ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், தயாளன் தென்களவாய் பழனி உள்பட ஏராளமான அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாட்டினை ஊர் பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

News May 17, 2024

விழுப்புரம்: விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்

image

விழுப்புரத்தில் நேற்று (மே 16) இந்திய கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் விவசாயிகள் சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் சகாப்தின் தலைமை வகித்தார். கூட்டத்தில் விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான கிடப்பில் உள்ள நந்தன் கால்வாய் திட்டத்தை முடிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை மனு கொடுப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் ஏராளமான கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

News May 16, 2024

முக்கிய நபர் மறைவு: அமைச்சர் நேரில் அஞ்சலி

image

விழுப்புரத்தில், விழுப்புரம் விஸ்வகர்மா சங்கத்தின் செயலாளரும், விழுப்புரம் தெற்கு மாவட்ட தொழிலாளர் அணி துணை அமைப்பாளருமான சித்திரைவேல் மறைவுக்கு இன்று (மே 16) உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரைப் பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். உடன் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் ம.ஜெயச்சந்திரன், மாவட்ட பொருளாளர் விழுப்புரம் இரா.ஜனகராஜ் உள்ளிட்டோர் இருந்தனர்.

News May 16, 2024

புதிய கிணறு கட்டடப்பணி:  ஆட்சியர் பழனி ஆய்வு

image

விழுப்புரம் அருகே முகையூர் கிராமத்தில் அருகில் உள்ள வீரங்கிபுரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் புதிய கிணறு அமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த கிணறு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.

News May 16, 2024

விழுப்புரம் மழைக்கு வாய்ப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (மே.16) நண்பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழைப்பொழிவு பதிவாககூடும் எனத் தெரிவித்துள்ளது.

News May 16, 2024

விழுப்புரத்தில் மழை பெய்யும்

image

தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 16, 2024

விழுப்புரம்: மோர், வாழைப்பழம், வெள்ளரிக்காய் வழங்கல்

image

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பேருந்து நிலையம் பகுதியில், மரக்காணம் ஒன்றிய திமுக சார்பில் பொதுமக்களுக்கு ஒன்றிய செயலாளர், ஒன்றிய பெருந்தலைவர் தயாளன் ஏற்பாட்டில் பொதுமக்களுக்கு வெயிலை ஒட்டி வெள்ளரிக்காய், மோர், வாழைப்பழம் உள்ளிட்ட பொருட்களை விழுப்புரம் வடக்கு திமுக மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார் நேற்று (மே 15) வழங்கினார்.

News May 15, 2024

தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஆய்வு

image

விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஊராட்சி ஒன்றியம், பில்ராம்பட்டு முதல் அருணாபுரம் வரை பிரதம மந்திரி கிராம சாலை திட்டத்தின்கீழ், தார் சாலை மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பழனி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா உட்பட பலர் உள்ளனர்.

News May 15, 2024

விழுப்புரத்தில் ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட நரசிங்கபுரம் பகுதியில் அமைந்துள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியினை தூய்மைப்பணியாளர்கள் மூலம் தூய்மை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், செயற்பொறியாளர் மோகன் ஆகியோர் உடனிருந்தனர்.

error: Content is protected !!