Villupuram

News May 25, 2024

திண்டிவனத்தில் கையெழுத்து இயக்கம்

image

திண்டிவனம் அடுத்த வட ஆலப்பாக்கத்தில் திண்டிவனம் நகரத்தின் ஒட்டுமொத்த நிலத்தடி நீர் ஆதாரத்தை பாதிக்கும் தனியார் மினரல் வாட்டர் கம்பெனியின் அனுமதியை ரத்து செய்யக்கோரி மே 27ஆம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் கையெழுத்து இயக்கம் நடைபெறுகிறது என அக்கட்சி அறிவித்துள்ளது. இதில் மு.சட்டமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

News May 25, 2024

விழுப்புரம்: முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம்

image

விழுப்புரம் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி வரும் ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கையின்போது, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான பழனி தலைமையில் ஆட்சியர்க கூட்டரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

News May 24, 2024

விழுப்புரம் ஆட்சியர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மரக்காணம் வட்டம், கீழ்புத்துப்பட்டு ஊராட்சியில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள மஞ்சுனேஷ்வர அய்யனாரப்பன் கோயிலைச் சுற்றியுள்ள காட்டினை பல்லுயிர் பாரம்பரிய தளமாக அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

News May 24, 2024

விழுப்புரத்தில் 6 செ.மீ மழைப்பதிவு!

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று (மே.23) பதிவான மழைப்பொழிவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திண்டிவனம் பகுதியில் 6 செ.மீ, அரசூரில் 3 செ.மீட்டரும், முகையூர், மணம்பூண்டி ஆகிய பகுதிகளில் 2 செ.மீட்டரும், விழுப்புரம், scs மில் திருவெண்ணெய்நல்லூர் ஆகிய பகுதிகளில் 1 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

News May 24, 2024

விழுப்புரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (மே.24) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரத்தில் இடி மின்னலுடன் மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 24, 2024

சப்-இன்ஸ்பெக்டரை கட்டையால் தாக்க முயன்ற ரவுடி கைது

image

கோட்டக்குப்பம் போலீஸ் எஸ்ஐ திவாகர் ஈ.சி.ஆர் சாலை பொம்மையார்பாளையத்தில் நேற்று போலீசாருடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பொம்மையார்பாளையத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி ரமேஷ் (50), போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். கோபத்தின் உச்சத்துக்கு சென்ற ரமேஷ் மரக்கட்டையை எடுத்து எஸ்ஐ திவாகரை தாக்க முயன்றார். இதையடுத்து போலீசார் ரமேஷை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

News May 23, 2024

கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட அமைச்சர்

image

மயிலம் ஒன்றியம், வெங்கந்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு திருமகள் மலர்மகள் சமேத அருள்மிகு ஶ்ரீ சீனுவாசப் பெருமாள் திருக்கோயில் கும்பாபிஷேக விழா இன்று (மே 23) நடைபெற்றது. இதில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கே.எஸ் மஸ்தான் கலந்து கொண்டார். உடன் ஒன்றிய செயலாளர் L.P.நெடுஞ்செழியன் மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

News May 23, 2024

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து, வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள 06 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் CCTV மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி அவர்கள் இன்று ஆய்வு செய்தார்.

News May 23, 2024

விழுப்புரம்: ஆட்டோ டிரைவர் வீட்டில் திருட்டு

image

விழுப்புரம் மாவட்டம் மண்டகப்பட்டுவைச் சேர்ந்தவர் கன்னியப்பன் (34), ஆட்டோ டிரைவர். இவர் வழக்கம்போல் நேற்று ஆட்டோ ஓட்ட சென்றுவிட்டார். அவரது மனைவி விவசாய வேலைக்காக வீட்டை பூட்டி சாவியை படியில் மறைத்து வைத்துவிட்டுச் சென்றார் 3 மணியளவில் திரும்பிவந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பெட்ரூமில் வைத்திருந்த ஆறரை சவரன் நகைகள் திருடுபோனது தெரியவந்தது.

News May 23, 2024

விழுப்புரம்: திமுக நிர்வாகி இல்ல விழாவில் அமைச்சர்

image

விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மயிலம் ஊராட்சியில் திமுக நிர்வாகி சந்தோஷ் இல்ல புதுமனை புகு விழாவில் நேற்று (மே 22) சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் கலந்துகொண்டு வாழ்த்தினார். இந்த நிகழ்வில் மயிலம் திமுக ஒன்றிய செயலாளர் மணிமாறன் உள்ளிட்ட திமுகவினர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!