Villupuram

News June 21, 2024

கள்ளச்சாராயம் தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம், போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தடுப்பது குறித்த ஆய்வு கூட்டம் ஆட்சியர் சி.பழனி  தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம், உதவி ஆணையர் (கலால்) முருகேசன் ஆகியோர் உடனிருந்தனர்.

News June 21, 2024

விழுப்புரத்தில் உலக யோகா தினம்

image

விழுப்புரம் மாவட்ட யோகா சங்கத்தின் சார்பில், உலக யோகா தினம் கொண்டாடப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள காவல்துறை அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பதஞ்சலி யோகா, ஈஷா யோகா, மனவளக்கலை இயற்கை வாழ்வியல் முறை உள்ளிட்ட யோகா மையங்களின் சார்பாகவும், மாவட்ட யோகா ஆசிரியர்கள் சார்பாகவும் சுமார் 714 மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் இளைஞர்கள் என அனைவரும் பங்கேற்றனர்.

News June 21, 2024

JUSTIN: சாராய வியாபாரி கைது

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த சம்பவம், தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில், அந்த பகுதிக்கு சாராயம் வழங்கிய, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த கரிபாளையம் பகுதியைச் சேர்ந்த மதன்குமார் என்பவரை சிபிசிஐடி போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். ஏற்கெனவே, 5 பேர் கைதான நிலையில், போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News June 21, 2024

BREAKING: விழுப்புரத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு

image

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த விவகாரத்தில், விழுப்புரத்தில் தற்போது பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளது. நேற்று ஒருவர் மட்டும் உயிரிழந்த நிலையில், இன்று காலை மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட மருத்துவமனையில் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால், மொத்த பலி எண்ணிக்கை 49ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News June 21, 2024

இடைத்தேர்தல்: இன்றுடன் வேட்புமனு நிறைவு

image

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ளது. கடந்த 14ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல், இன்றுடன் நிறைவு பெறுகிறது. பாமக சார்பில் சி.அன்புமணியும், திமுக சார்பில் அன்னியூர் சிவா, நாதக சார்பில் அபிநயா உள்ளிட்ட 24 பேர் இதுவரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். கடைசி நாளான இன்று சுயேச்சை வேட்பாளர்கள் சிலர் வேட்புமனு தாக்கல் செய்யக்கூடும் என தெரிகிறது.

News June 20, 2024

விக்கிரவாண்டி: வீடு வீடாக சென்று வழங்கிய ஆட்சியர்

image

75.விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முன்னிட்டு அய்யூர் அகரம் ஊராட்சியில் 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களான வாக்காளர்கள் விருப்பத்தின் அடிப்படையில் வீட்டிலிருந்தபடியே வாக்கு செலுத்துவதற்கான 12-D படிவத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி இன்று வீடு, வீடாக சென்று நேரில் வழங்கினார். விக்கிரவாண்டி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்/வருவாய் வட்டாட்சியர் யுவராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

News June 20, 2024

விழுப்புரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

image

தி.மலை கிரிவலத்தை முன்னிட்டு நாளை விழுப்புரம், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, விருத்தாச்சலம், ஆற்காடு, திட்டக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிதம்பரத்திற்கு 340 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதேபோன்று சென்னை கேளம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், தி.மலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 640 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது என விழுப்புரம் போக்குவரத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

News June 20, 2024

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாதக வேட்புமனு தாக்கல்

image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா தேர்தல் அலுவலர் சந்திரசேகரிடம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஜூலை 10ஆம் தேதி நடைபெறும் இந்தத் இடைத்தேர்தலானது, மும்முனை போட்டியாக தான் இருக்கப்போகிறது. நேற்று திமுக மற்றும் பாமக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ததையடுத்து, தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதாகத் தெரிகிறது.

News June 20, 2024

கள்ளச்சாராயம்: விழுப்புரத்தில் ஒருவர் பலி

image

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து விவகாரத்தில், விழுப்புரத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். துக்க நிகழ்வில் பங்கேற்ற 90க்கும் மேற்பட்டோர் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்ததால், உடல்நலம் பாதிக்கப்பட்டு சேலம், புதுச்சேரி, விழுப்புரத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 37 பேர் உயிரிலாந்த நிலையில், எஞ்சியுள்ளவர்கள் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News June 20, 2024

விழுப்புரம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்தது

image

தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து, விழுப்புரம் அருகே ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புறவழிச் சாலையில் நடந்த இந்த விபத்தில், பேருந்து சாலையோரத்தில் உள்ள மரத்தின் மீது மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பேருந்தில் பயணம் செய்த 12க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!