Villupuram

News October 16, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை

image

விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், வானூர், மரக்காணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 19 மீன கிராமங்களில் உள்ள மீனவர்கள் இன்று கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்டம் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், தாழ்வா பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கும் என்பதால், வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுங்கள்.

News October 16, 2024

இணைய வழியில் பெண்ணிடம் ரூ.6.24 லட்சம் மோசடி

image

திண்டிவனம் சாலையைச் சேர்ந்தவர் சசி (22). கடந்த சில தினங்களுக்கு முன்பு, இவரை தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர் ஒருவர் சிறிய தொகை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறியுள்ளார். அதை நம்பிய சசி, முதலில் ரூ.1,000 முதலீடு செய்து ரூ.1300 பெற்றுள்ளார். பின்னர், பல தவணைகளாக ரூ.6.24 லட்சம் செலுத்தியுள்ளார். ஆனால், பணம் வரவில்லை. இதுகுறித்து விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News October 16, 2024

விழுப்புரத்தில் வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர்

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், வருகின்ற அக்டோபர் 18ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த வேலையில்லா இளைஞர்கள், தங்களது சுயவிவர குறிப்பு மற்றும் கல்விச் சான்றிதழ்களுடன் பங்கேற்று பயன்பெறலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News October 16, 2024

TNPSC குரூப் 2, 2A MAINS இலவச வழிகாட்டுதல் வகுப்பு

image

TNPSC குரூப் 2, 2A MAINS தேர்வுக்கான இலவச வழிகாட்டுதல் வகுப்பு, விழுப்புரம் நகரில் உள்ள வெராண்டா ரேஸ் அகாடமியில் வரும் அக்.20ஆம் தேதி காலை 10 மணியளவில், நடைபெற உள்ளது. இதில், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் குரூப் 2A வெற்றியாளர்கள் நேரில் வந்து கலந்துரையாடல் செய்து, குரூப் 2 குரூப் 2ஏ தேர்வு குறித்து மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டுதல்களை வழங்க உள்ளனர். அனைவரும் கலந்து கொள்ளலாம். அனுமதி இலவசம்

News October 16, 2024

விழுப்புரத்தில் இன்று மின்தடை அறிவிப்பு

image

மரக்காணம் & முருக்கேரி துணை மின் நிலையத்தில், இன்று மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் காலை 9 மணி – மாலை 4 மணி வரை மரக்காணம், ஆச்சிக்காடு, முட்டுக்காடு, அசப்பூர், கந்தாடு, வடஅகரம், திருக்கனூர், ஆ.புதுப்பாக்கம், அனுமந்தை, முருக்கேரி, கிலாப்பாக்கம், ராயநல்லூர், நடுக்குப்பம், பிரம்மதேசம், ஆலங்குப்பம், பெருமுக்கல், ஆவணிப்பூர், ஆட்சிப்பாக்கம், கருவம்பாக்கம் பகுதிகளில் மின்தடை ஏற்படும். ஷேர்

News October 16, 2024

உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியினை அமைச்சர் ஆய்வு

image

விழுப்புரம் மாவட்டம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தை இணைக்கும் காணிமேடு To கந்தாடு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணியினை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் வெள்ள நீர் வெளியேற்ற படுவதையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட பொறுப்பாளர் Dr.ப.சேகர், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், ஒன்றிய பெருந்தலைவர், துணை பெருந்தலைவர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

News October 16, 2024

விழுப்புரம் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று (15.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட காவல் அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.

News October 16, 2024

விழுப்புரத்தில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

image

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திற்கு நாளை (16.10.24) ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.

News October 15, 2024

அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு ஒத்திவைப்பு

image

வானூர் பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மணல் எடுத்ததாக, வனத்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று இந்த வழக்கு மீதான விசாரணையில், 4 பேர் மட்டுமே ஆஜரான நிலையில், அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் ஆஜராகவில்லை. இதனை அடுத்து, வழக்கை வருகின்ற நவ.6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி இளவரசன் உத்தரவிட்டார்.

News October 15, 2024

அவசரகால தொடர்பு அதிகாரிகள் மொபைல் எண்கள் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின் போது ஏற்படும் மின் ஆபத்துகளை உடனுக்குடன் தொடர்பு கொண்டு தெரிவித்து சரி செய்து கொள்ள விழுப்புரம் 9445855738, கண்டமங்கலம் 9445855769, திண்டிவனம் 9445855835, செஞ்சி 9445855784 ஆகிய மின்வாரிய செயற்பொறியாளர்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நாகராஜகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.