India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (04.03.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
கஞ்சா விற்பனைக்காக எடுத்து வந்த ஐந்து பேர் கைது செய்து சிறையில் இருந்த நிலையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் இ.கா.ப., அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர ஷேக் அப்துல் ரகுமான் இ.ஆ.ப., அவர்களின் ஆணைக்கிணங்க சிவக்குமார் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவர் இன்று தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம் – செஞ்சி நெடுஞ்சாலையில் ஒரத்தூர் பிரிவு சாலையில் லட்சுமிபுரம் பகுதியில் வேன் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. வேனில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் லேசான காயம் காயமடைந்தனர். அவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆயுர்வேதா, சித்தா, யுனானி ஆகிய இந்திய மருத்துவ துறைகளில் காலியாக உதவி மருத்துவ அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதிகபட்சமாக 59 வயது வரை இருக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரை சம்பளம் வழங்கப்படும். தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் <<-1>>ஆன்லைன் <<>>வழியாக இன்றைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு பின்னர் அறிவிக்கப்படும்.
எஸ்.பி சரவணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மேல்மலையனூர் தேர் திருவிழாவை முன்னிட்டு 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். பக்தர்களுக்கு ஏதேனும் இடையூறுகள் இருப்பின் செஞ்சி உள்கோட்ட காவல் அலுவலகம்-9498100505, மேல்மலையனூர் காவல் நிலையம்- 9488100506, தனிப்பிரிவு அலுவலக எண் 9498100485, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை-9498181229 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் கீரிமேடு கிராமத்தில் ஜெயசூர்யா (24) என்பவருக்கு, டீயில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த விவகாரத்தில் தேடப்பட்டு வந்த ரம்யா(19) என்ற இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். இருவரும் காதலித்த நிலையில், அது தொடர்பான பிரச்னையில் பழிவாங்க இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு, ஜெயசூர்யா சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
கோட்டக்குப்பம் அடுத்த சின்னகாட்ராம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவேல். ஜனவரி 30ஆம் தேதி 8 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் போக்சோவில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின் பேரில், நேற்று கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசார் முருகவேலை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ததற்கான நகலை, கடலுார் மத்திய சிறைச்சாலை அதிகாரியிடம் வழங்கினர்.
விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று (மார்ச் 4) உள்ளூர் விடுமுறை ஆகும். மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை என ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் பிப்.25ஆம் தேதி உத்தரவிட்டார். மறுநாளே, (பிப்.26) மாசிப்பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், இன்று அங்காளம்மன் தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. அதையீடு செய்யும் வகையில் மார்ச் 1ஆம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடூர் அணையிலிருந்து வீடூர், சிறுவை, ஐவேலி, பொம்பூர், கோரக்கேணி, எரையூர், கடகம் பட்டு, நெமிலி, புதுச்சேரி மாநிலம், புதுக்குப்பம், காட்டேரிக்குப்பம், தேத்தம்பாக்கம், சுத்துக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு உட்பட்ட 3,200 ஏக்கர் பாசன நிலங்களுக்கு நேற்று முதல் ஜூலை 15ஆம் தேதி வரை 135 நாட்களுக்கு மொத்தம் 326.56 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 12ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு மையத்தில் மாணவியர்கள் பொதுத்தேர்வு எழுதி வருவதை மாவட்ட ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.