India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் (Strong Room) வைக்கப்பட்டுள்ள 06 சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு மையத்திலிருந்து கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் பழனி இன்று (ஏப்ரல் 21) நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில், நேற்று (ஏப்.20) மேம்பால பணியில் ஈடுபட்டிருந்த பீகார் இளைஞர் ராஜேஷ்குமார்(23) என்பவர் பைப் விழுந்து உயிரிழந்தார். கடந்த 4 மாதங்களாக மரக்காணம் பக்கிம்காம் மேம்பால பணி நடைபெற்று வருகிறது. இதில் இரவு பகலாக வெளிமாநில தொழிலாளர்கள் வேலை புரிந்து வரும் நிலையில், ராஜேஷ்குமார் மீது எதிர்பாராத விதமாக இரும்பு பைப் விழுந்ததில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ளே உள்ள அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் இயக்கம் /பயண அட்டை வழங்கும் இடம் உள்ள அலுவலகம் இரவு நேரத்தில் குடிகாரர்களின் கூடாரமாக மாறி வருகிறது, காலையில் பேருந்து நிலையம் வரும் பயணிகள் முகம் சுழிப்போடு செல்கின்றனர் தொடரும் இந்த அவலத்தை தடுத்திட நடவடிக்கை எடுக்குமா காவல்துறை ?நகராட்சி நிர்வாகம்? என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.
திண்டிவனம் மரகதாம்பிகை அரசு பள்ளி வாக்கு சாவடி மையத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பாராளுமன்ற தேர்தலில் தனது ஜனநாயக கடமையான வாக்குபதிவினை இருமகள்கள் சம்யுக்தா, சஞ்சித்ரா, சங்கமித்ரா ஆகியோருடன் இணைந்து வாக்கினை செலுத்தி ஜனநாயக கடமை ஆற்றினார்.அதனை தொடர்ந்து பேட்டியளித்த அன்புமணி ராமதாஸ், மூன்றாவது முறையாக மிகப்பெரிய வெற்றி பெற்று பிரதமராக மோடி தொடர்வார் என தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், தேவனூர் ஊராட்சியில், நேற்று நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி விசிக மற்றும் பாமக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை ஒட்டி கலவரம் ஏதும் ஏற்படாத வண்ணம், அதனை தடுக்கும் விதமாக வரும் வாகனம் அரகண்டநல்லூர் காவல் நிலையம் அருகே இன்று (ஏப்ரல் 20) நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் (Strong Room) பாதுகாப்பாக வைக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி,நேற்று (ஏப். 19) இரவு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்ற நிலையில் 76.47% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. தமிழகத்தில் நடைபெற்ற 18வது நாடாளுமன்ற தேர்தலில் திண்டிவனம், வானூர், விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை உட்பட மொத்தமாக 11 லட்சத்து 49 ஆயிரத்து 407 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. மொத்தமாக 76.47% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் வானூர், கிளியனூர் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் இன்று காலை வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. மதிய நேரத்தில் வெயில் தாக்கம் காரணமாக வெறிச்சோடி காணப்பட்டது. வாக்குச்சாவடி மையங்களில் 4 மணிக்கு மேல் வாக்காளர்கள் குவிந்ததால் வாக்குச்சாவடிகள் நிரம்பியது. குறைவான நேரம் என்பதால் வாக்குச்சாவடி ஊழியர்களும் முகவர்களும் திணறினர்.
விழுப்புரம் தொகுதி நடுக்குப்பம் கிராம மக்கள் காலையில் தேர்தலை புறக்கணித்த நிலையில் தற்போது வாக்களிக்க திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திரவுபதி அம்மன் கோயில் பிரச்னையால் தேர்தலை புறக்கணித்த மக்கள் வாக்களிக்க திரண்டனர். மேலும், ஒரே நேரத்தில் 1,500க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் தேர்தல் அலுவலர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த விளங்கம்பாடி ஊராட்சியில் (ஏப்ரல் 19) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட விளங்கம்பாடியில் காலை முதல் வாக்குப்பதிவு சுறுசுறுப்பாக நடைபெற்றது. 11 மணிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் வாக்களிக்க வரவில்லை. ஒன்று அல்லது இரண்டு நபர்கள் அவ்வப்போது வாக்களிக்க வந்தனர்.
Sorry, no posts matched your criteria.