India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தீபாவளி பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் தற்காலிக பட்டாசு விற்பனை செய்ய உரிமம் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் அரசு பொது இ-சேவை மையத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நேரடி விண்ணப்பங்கள் ஏற்கப்படமாட்டாது. எனவே, உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள் நாளைக்குள் (அக்.19) விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். உடனே ஷேர் பண்ணுங்க
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (17.10.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
செஞ்சி தொகுதி திமுக தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ள மாநில இளைஞரணி துணை செயலாளர் அப்துல் மாலிக் மற்றும் தொகுதி நிர்வாகிகள் அறிமுகம் கூட்டம் இன்று (அக்.17) செஞ்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செஞ்சி எம்.எல்.ஏ மஸ்தான், திமுக மாவட்ட பொருளாளர் சேகர் உட்பட ஒன்றிய நகர பொது குழு உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் 53ஆவது ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் அளித்த பேட்டியில், “நேற்று வரை குறை கூறிக் கொண்டு இருந்த ஆளுநர் இன்று வானளவு பாராட்டிக் கொண்டிருக்கிறார். முதலமைச்சர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்த பின் கதையே மாறிவிட்டது” என்று கூறினார்.
வானூர் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாமக நிறுவனர் ராமதாஸ், “விழுப்புரம் மாவட்டத்தில் கொந்தமூர் மற்றும் நல்லாவூர் கிராமப்பகுதியில் புதிய மதுபானக்கடைகளை திறக்கும் முடிவை தமிழக அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். முடிவை கைவிடாவிட்டால் நானே என் தலைமையில் அரசு மதுபானக்கடைகளுக்கு பூட்டுபோட்டு போராட்டம் நடத்துவேன்” என்று தெரிவித்தார்.
திண்டிவனத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மழைநீர் கால்வாய்கள் மற்றும் சிறு பாலங்கள் மேற்கொள்ளபடுகின்ற சிறப்பு தூர்வாரும் பணிகளை மாவட்ட ஆட்சியர், சார்ஆட்சியர் ,தாசில்தார் ஆய்வு மேற்கொண்டார்கள் .மேலும் நகரமன்ற தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஆணையாளர், நகராட்சி அனைத்து துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 10 மணி அளவில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறுகிறது , இதில் 8வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, பிடெக், நர்சிங், பார்மசி போன்ற கல்வி தகுதிஉடையவர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளது.
திருவெண்ணெய்நல்லூர் வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் உங்களைத்தேடி உங்கள் ஊரில் திட்டத்தினை செயல்படுத்திட நாளை (அக்.18) அனைத்து கிராமங்களிலும் விழுப்புரம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் அனைத்துதுறை உயர் அலுவலர்கள் பல்வேறு கிராமங்களில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் பொதுமக்கள் பயன்படுத்தும் பொதுசேவைகள் மற்றும் அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்கிறார்.
திண்டிவனம் அருகே 13 வயது சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் வழியே பழகி, தனியே அழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட 4 பேர் கைது.தந்தையின்றி தாயின் வளர்ப்பில் உள்ள அச்சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட அப்பகுதியைச் சேர்ந்த முரளி (23), தனசேகர் (20), பிரகலாதன் (21), திருநாவுக்கரசு (21) ஆகிய நால்வரும் இன்று போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிரதமரின் கௌரவ நிதி உதவி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை 2000 ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் பிரதமரின் கெளரவ நிதியுதவித் திட்டத்தின் கீழ் ஊக்கத் தொகை பெற்று, விவரங்களை பதிவு செய்யாமல் உள்ள விவசாயிகள், வட்டார வேளாண் அலுவலா்களை அணுகி பதிவு செய்துகொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.