India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் மார்ச் 20ஆம் தேதி தொடங்கியது. இருப்பினும் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை மார்ச் 25ஆம் தேதி தாக்கல் செய்தனர். இந்த நிலையில் இன்றுடன் (மார்ச் 27) வேட்புமனு தாக்கல் நிறைவுபெறுகிறது. வேட்புமனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் இன்று தாக்கல் செய்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நேற்று (மார்ச் 26) தொடங்கியது. விழுப்புரம் மற்றும் திண்டிவனம் கல்வி மாவட்டங்களில் மொத்தம் 126 தோ்வு மையங்களில் 12,617 மாணவா்கள், 11,911 மாணவிகள் என மொத்தமாக 24,528 போ் தோ்வு எழுதினா். முதன்மைக் கண்காணிப்பாளா்கள், அறைக் கண்காணிப்பாளா்கள் உள்ளிட்ட பொறுப்புகளில் மொத்தம் 2021 போ் தோ்வுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு விழுப்புரத்தில் வேட்பாளர்கள் பலரும் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்று விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் களஞ்சியம், இன்று (மார்ச் 26) மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பழனியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். உடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
திண்டிவனம் அடுத்த சலவாதியை சேர்ந்த ஐயப்பன், சத்தியமூர்த்தி இருவரும் நேற்று (மார்ச்.25) மொளசூர் அருகே பைக்கில் சென்ற போது, எதிரே வந்த கண்ணன், வசந்தகுமார் ஆகியோரது பைக் இவர்களது பைக் மீது மோதுவது போல் சென்றுள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இச்சம்பவம் குறித்து கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் திண்டிவனம் போலீசார் ஐயப்பன் சத்தியமூர்த்தி இருவரையும் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட, கீழ்ப்பெரும்பாக்கம் அரசு அறிஞர் அண்ணா கலைக்கல்லூரியில், விழுப்புரம் பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவாகும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்க பாதுகாப்பு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் இன்று (மார்ச் 26) ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பழனி, எஸ்பி தீபக் சிவாஜ் ஆகியோர் பாதுகாப்பு அறைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பாா்வை மாற்றுத் திறனாளிகளுக்கான இலவசப் பேருந்து பயண அட்டை புதுப்பித்தல் முகாம் செவ்வாய், புதன்கிழமைகளில் (மாா்ச் 26, 27) நடைபெறவிருந்த நிலையில், தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததன் காரணமாக முகாம்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சியர் பழனி நேற்று (மார்ச் 25) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அறிவித்துள்ளார்.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று (மார்ச் 25) விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி ஆஜராகவில்லை மேலும் அரசு தரப்பு சாட்சிகளும் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து வழக்கை இன்றைக்கு (மார்ச் 26) ஒத்திவைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.
திண்டிவனம் தீர்த்தகுளத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் மனைவி கௌசல்யா, மாமியார் பாக்கியலட்சுமியுடன் நேற்று (மார்ச் 24) பைக்கில் விக்கிரவாண்டி அருகே சென்று கொண்டிருந்தார். வழியில் எதிர்பாராமல் வேன் மோதி 3 பேரும் படுகாயமடைந்தனர். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பாக்கியலட்சுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸார் விசாரிக்கின்றனர்.
சென்னை, பெரியார் நகரை சேர்ந்தவர் பாரதி கண்ணன். இவர், நேற்று தனது மகன் ராபின்(6)-னுடன், விழுப்புரம், ஆரோவில் அருகே திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்றார். அங்குள்ள நீச்சல் குளத்தில் ராபின் குளித்தபோது திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 100% வாக்களிப்பதை வலியுறுத்தி திருநங்கையர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று (மார்ச் 25) நடைபெற்றது.இதில்
திருநங்கையர்களின் கரங்களில் 100% வாக்களிப்போம்,100% Vote , Myvote my pride,My vote my right, 19.04.2024 போன்ற விழிப்புணர்வு வாசகங்களை மெஹந்தி மூலம் எழுதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் .
Sorry, no posts matched your criteria.