Villupuram

News October 19, 2024

விழுப்புரத்தில் இன்று தனியார் பள்ளிகளுக்கும் விடுமுறை

image

கனமழை காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளுக்கு ஏற்கெனவே சனிக்கிழமை வாரஇறுதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருவதால், இந்த விடுமுறையானது அளிக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 19, 2024

மரக்காணத்தில் 4 மாத குழந்தை உயிரிழப்பு

image

திண்டிவனம் ஓமந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் கோகிலன் (28). அவரது மனைவி ராஜேஸ்வரி, தனது 4 மாத குழந்தையுடன் மரக்காணம் செட்டிகுப்பத்தில் உள்ள தாய் வீட்டில் தங்கியிருந்தார். நேற்று அதிகாலை தூங்கிக் கொண்டிருந்த குழந்தை, அசைவின்றி கிடந்ததால் மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மரக்காணம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News October 18, 2024

விழுப்புரத்தி இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (18.10.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 18, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று 31 மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே தெரிவிக்கவும்.

News October 18, 2024

எனக்கு சீட் கிடைக்காமல் கூட போகலாம்: பொன்முடி

image

வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில், எனக்கு கூட சீட் கிடைக்காமல் போகலாம் என அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தில் இன்று நடந்த திமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், வாக்குச் சாவடி முகவர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். வரும் சட்டசபை தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் யார் வேண்டுமானாலும் நிறுத்தப்படலாம் எனத் தெரிவித்தார்.

News October 18, 2024

விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் ஆஜரான சீமான்

image

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விழுப்புரம் மாதம் விக்கிரவாண்டி உரிமையியல் நீதிமன்றத்தின் முன் இன்று ஆஜரானார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பற்றி அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளத. வழக்கை விசாரித்த விக்கிரவாண்டி உரிமையியல் நீதிமன்றம், அடுத்த மாதம் 4ஆம் தேதி மீண்டும் ஆஜராக உத்தரவிட்டது. நீதிபதி சத்யநாராயணன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

News October 18, 2024

தீயணைப்பு வீரர் பணிக்கு தேர்வான வாலிபர் கார் மோதி பலி

image

செஞ்சி, ஆத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அசோக்குமார். இவர், தமிழ்நாடு தீயணைப்பு வீரர் பணிக்கு தேர்வாகி இருந்தார். நேற்று, கொழும்பலூர் கிராமத்தைச் சேர்ந்த விநாயகசுந்தரம் என்பவருடன் வேலன்தாங்கல் கூட்டுரோட்டிலிருந்து கடலாடிக் குளம் நோக்கி நடந்து சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, திருவண்ணாமலையிலிருந்து செஞ்சி நோக்கி வந்த கார் மோதி அசோக் சம்பவ இடத்திலேயே பலியானார். விநாயகசுந்தரம் படுகாயமடைந்தார்.

News October 18, 2024

திமுக அரசு தோல்வியடைந்துவிட்டது: ராமதாஸ்

image

விழுப்புரம் மாவட்டம், வானூர் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் நேற்று பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழக அரசு வரும் நிதியாண்டில் கல்விக்கான நிதி ரூ.1 லட்சம் கோடியும், சுகாதாரத் துறைக்கு ரூ.50 ஆயிரம் கோடியும் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனவும், சென்னையில் மழைநீர் வடிகால் உள்ளிட்ட வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்வதில் திமுக அரசு தோல்வியடைந்துவிட்டது எனவும் தெரிவித்தார்.

News October 18, 2024

குழந்தை மீது டிவி விழுந்து உயிரிழப்பு

image

திண்டிவனம் அடுத்த கிடங்கல்-1 பகுதியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரது குழந்தை தஸ்வின் (2), கடந்த 11ஆம் தேதி வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக குழந்தை மீது டிவி விழுந்தது. பெற்றோர், உடனடியாக ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து திண்டிவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News October 18, 2024

அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் மழை பெய்யும்

image

விழுப்புரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு (காலை 10 மணி வரை) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை கரையை கடந்த நிலையில், நேற்று மழை குறைவாகவே பெய்தது. இந்நிலையில், வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. எனவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருங்கள்.