India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
75.விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, தென்னமாதேவி (பூத்தமேடு அருகில்) தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக பறக்கும்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் யுவராஜ் உள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுகவை தொடர்ந்து தேமுதிகவும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ள தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, “இன்றைய ஆட்சியாளர்களின் கரங்களில் தேர்தல் என்கிற ஜனநாயகம் மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. இடைத்தேர்தல் மீதான நம்பிக்கை குறைந்துள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் நேற்று (ஜூன் 15) வெளியிட்ட அறிக்கையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணிக்கு புநீக நல்லாதரவினை தெரிவித்துக் கொள்கிறேன். கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணியை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி பெற செய்யும் வகையில் தேர்தல் பணியாற்ற வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
விழுப்புரம் ஏழுமலை பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சந்திராயன்- 3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் அவர்கள் கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தில் மரக் கன்றுகளை நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்
விழுப்புரத்தில் இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள் கூட்டம் மற்றும் விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளா் அறிமுகக்கூட்டம் நேற்று (ஜூன் 15) நடைபெற்றது. இக்கூட்டத்தில், கட்சியின் தலைவா் அா்ஜூன் சம்பத் பங்கேற்று வேட்பாளா் எம்.முத்துக்குமாரை அறிமுகம் செய்து வைத்தாா். தொடா்ந்து, விக்கிரவாண்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கான இடைத் தோ்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட நேற்று மேலும் ஒரு சுயேட்சை வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். வேலூர் மாவட்டம் நெல்லூர் பேட்டை பகுதியைச் சேர்ந்த முனியப்பன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இவர் அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் அமைப்பை சார்ந்தவர் என்று குறிப்பிட்டுள்ளார். இத்துடன் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் 6 சுயேட்சைகள் மனு செய்துள்ளனர்.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பாமக போட்டியிடும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், பாமக சார்பில் சி.அன்புமணி என்பவர் விக்கிரவாண்டியில் போட்டியிடுவார் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் இன்று அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று (ஜூன் 14) தமிழக முதல்வர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். விழுப்புரம் மாவட்டத்தில் 100% வெற்றி பெற்று பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா சென்னையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்றது. விழாவில் 10-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
அரசு போக்குவரத்து கழக கடலூர் மண்டல தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், விழுப்புரம் கோட்டத்தில் உள்ள கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் மண்டலங்களை சேர்ந்த தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலாளர், நிர்வாகிகள் மற்றும் இதர தொழிற்சங்கங்களுடன், போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் ஆலோசனை மேற்கொண்டார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, விக்கிரவாண்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், இன்றைய தினம் வேட்பு மனு தாக்கல் செய்தவர்களின் விவரம் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி, இன்று நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். உடன் பல்வேறு அலுவலர்கள் பங்கேற்றனர்.
Sorry, no posts matched your criteria.