India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் ஜூலை 10இல் நடைபெற இருக்கும் நிலையில், இன்று காலை 11 மணிமுதல் விக்கிரவாண்டி வட்டாட்சியரகத்தில் வேட்புமனு தாக்கல் துவங்குகிறது. தினந்தோறும் காலை 11 முதல் பிற்பகல் 3 மணிவரை தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வருகின்ற ஞாயிறு, திங்கள் தவிர்த்து 21ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூலை 13ல் நடைபெறும்.
விக்கிரவாண்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பாஜக மாவட்ட பொருளாளர் குமாரசாமி இல்லத்தில், விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக மாவட்ட தலைவர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கலிவரதன் தலைமையில் நேற்று (ஜூன் 13) நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இடைத்தேர்தலில் ஆற்றவுள்ள பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திமுக எம்எல்ஏ புகழேந்தி மறைந்ததை தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டப்பேரவை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தலைமை தேர்தல் அதிகாரிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம், மனு ஒன்றை வழங்கியுள்ளார். அதில், ஈவிஎம் இயந்திரங்கள் விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூருக்கு மாற்றி உள்ளனர். இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் விழுப்புரத்திலேயே வைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தொடர்பாக திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவா அறிமுக கூட்டமும் இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டமும் நாளை விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் கௌதம சிகாமணி, அமைச்சர் பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், அமைச்சர்கள் நேரு ஏ.வ வேலு, தாமோ அன்பரசன், அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்ளுகின்றனர்.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் 10ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் நடத்துவது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட அலுவலர்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான பழனி ஆய்வு மேற்கொண்டார். தேர்தல் தொடர்பாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நியமன அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி, தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) தமிழரசன், உட்பட பலர் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி கண்காணிப்பில் இருந்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் குறித்த பாஜக செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை (ஜூன் 14) காலை 10 மணியளவில் விக்கிரவாண்டி சுபம் திருமண மண்டபத்தில், பாஜக மாநிலச் செயலாளரும், விழுப்புரம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான வினோஜ் பி.செல்வம் முன்னிலையில் நடைபெறும் என விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக மாவட்டத் தலைவர் கலிவரதன் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கலிவரதன் நேற்று (ஜூன் 12) டெல்லியில் மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற சிவராஜ் சிங் சவுக்கானை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். உடன் விழுப்புரம் மாவட்டத்தை சார்ந்த பாஜக நிர்வாகிகள் இருந்தனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் ஜூலை மாதம் பத்தாம் தேதி நடைபெற இருப்பதால் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பட்டு அறையை மாவட்ட ஆட்சியர் பழனி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஒவ்வொரு நிகழ்வும் கணினி மூலமாக கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.