India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகளிர் உரிமைத் தொகை வழங்குவதிலும் விழுப்புரத்திற்கு திமுக அரசு அநீதி செய்துள்ளது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில் பதிவிட்ட அவர், விழுப்புரத்தில் 60,000 பேருக்கு மட்டுமே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. சராசரியாக 1 மாவட்டத்திற்கு 3.05 லட்சம் பேருக்கு உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும். ஆனால், விழுப்புரத்தில் 5இல் 1 பங்கினருக்கு மட்டும் தான் வழங்கப்படுகிறது” என்றார்.
தமிழ்நாடு போதை பொருளின் சந்தையாக மாறிக் கொண்டிருக்கிறது என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். பாமக வேட்பாளரை ஆதரித்து விக்கிரவண்டியில் பிரசாரம் மேற்கொண்ட அவர், “கஞ்சா போன்ற போதைப் பழக்கத்தால் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி கூலிப்படையாக மாறுகின்றனர். அனைத்து தரப்பினரையும் ஏமாற்றும் ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தாலே காவிரி பிரச்சினை வந்துவிடும்” என்றார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இதனால், வேட்பாளர்கள் தற்போது இறுதிக்கட்ட பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே வாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரப்படுத்தியுள்ளது. வரும் 13ஆம் தேதி வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் வாக்குகள் எண்ணப்படும்.
விக்கிரவாண்டியில் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர் உயநிதி பரப்புரை மேற்கொண்டு வருகிறார். அவர் பேசுகையில், விழுப்புரத்தில் மட்டும் 60,000 மகளிர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மக்களின் மகிழ்ச்சியும் எழுச்சியும் திமுக வெற்றியை காட்டுகிறது என்றார். மேலும், திருவாமத்தூர், காணை பனமலைப் பேட்டை, அன்னியூரில் இன்றும், ராதாபுரம், விக்கிரவாண்டி பேரூராட்சி பகுதியில் நாளை பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேமுதிக தொண்டர்கள் வாக்களிக்க மாட்டோம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டோம் என்பதும் வாக்களிக்க மாட்டோம் என்பதும் ஒன்று தான். தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதில்லை என்றார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கு தீவிர பிரச்சாரம் நடைபெற்று வந்த நிலையில், நாளை (ஜூலை 8) மாலை 6 மணியுடன் பிரச்சாரம் முடிவடைகிறது. தொகுதிக்கு வெளியே இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சிப் பணியாளர்கள் மாலை 6 மணிக்குமேல் தொகுதிக்குள் இருக்கக் கூடாது. அவர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்று மாநில தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாஹூ அறிவுறுத்தியுள்ளார்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளா் அன்னியூா் சிவாவை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்றும், நாளையும் பிரச்சாரம் செய்யவுள்ளாா். முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் வீடியோ பதிவு மூலம் பிரச்சாரம் செய்தார். நாளை மாலை 6 மணியுடன் பிரச்சாரம் நிறைவடைய உள்ளதால், பிற கட்சிகள் முழுவீச்சில் பிரச்சாரம் செய்து வருகின்றன. இடைத்தேர்தல் வரும் 10ஆம் தேதியம், வாக்கு எண்ணிக்கை 13ஆம் தேதியும் நடைபெற உள்ளது
பாமகவின் 2ஆம் கட்டத் தலைவர்கள் பழைய முகங்களாகிப் போனதால், மருமகளையும் பேத்தியையும் ராமதாஸ் பிரச்சாரத்தில் இறக்கியுள்ளார் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் விமர்சித்துள்ளார். நேற்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பதிவாகும் வாக்குகளில் 80% திமுக வேட்பாளருக்கு கிடைக்கும். மகளிர் உரிமைத்தொகை புதுமைபெண் திட்டம் மூலம் பயன்பெறுவோர்களின் வாக்குகளும் திமுகவுக்குதான் கிடைக்கும்” என்றார்.
மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டியது அரசின் கடமை என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். விக்கிரவண்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இருந்த ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளாா். தமிழகத்தில் அரசியல் தலைவா்களுக்கு கூட பாதுகாப்பு இல்லை. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை சீா்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முதல்வா் மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிவித்தார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையிலிருந்து பறக்கும் படையினர் வாகன சோதனை மேற்கொள்ளும் பகுதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலராகிய மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Sorry, no posts matched your criteria.