India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே புளிச்சபள்ளம் கிராமத்தில் நேற்று மின்சாரம் பாய்ந்து 2 பெண்கள் பலியாகியுள்ளனர். காற்றுடன் பெய்த மழையால் வயல்வெளியில் இருந்த மின்வேலி அறுந்துள்ளது. இதனை அறியாத, அங்கு வேலை செய்து கொண்டிருந்த சத்யவாணி வேலியை மிதிக்கவே பரிதாபாக உயிரிழந்தார். அவரைக் காப்பாற்ற சென்ற வீரம்மாள் என்ற பெண்ணும் அதே இடத்தில் பலியாகினார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா (எ) அ.சிவசண்முகம் அவர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி மேற்பார்வையில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர் வெற்றி பெற்றதற்கான சான்றிதழினை இன்று (13.07.2024) வழங்கினார்.
விக்கிரவாண்டியில் பாமக செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் பாலு இன்று (ஜூலை 13) செய்தியாளருக்கு பேட்டி அளித்தார்:- விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் பணத்தை வாரி இறைத்து வெற்றி பெற்றுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் அதிகாரத்தை அத்துமீறி செயல்பட்டுள்ளது. இதனால் இத்தேர்தலில் ஜனநாயகம் தோற்றுப் போய் உள்ளது என கூறினார்.
விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1 லட்சத்திற்கு மேல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் சி.அன்புமணி 2வது இடம் பெற்று 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகள் பெற்று டெபாசிட் பெற்றார். இதனையடுத்த நாம்தமிழர் கட்சி உட்பட 27 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்தனர்.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுக்கு வந்தது. பனையபுரம் அரசு பள்ளியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,169 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 20ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள்: திமுக – 1,23,195, பாமக – 56,026, நாதக – 10,479 வாக்குகள் பெற்றுள்ளனர். கடந்தண்ட தேர்தலைத் தொடர்ந்து, இம்முறையும் திமுக வெற்றி வாகை சூட்டியுள்ளது.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் 19வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் திமுக -118637, பாமக- 53438, நாம் தமிழர் கட்சி-10130 வாக்குகள் பெற்றுள்ளன. தொடர்ந்து வாக்கு என்னும் பணி நடைபெற்று வருகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை, பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 18ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், திமுக – 1,13,671, பாமக – 50,454, நாம் தமிழர் கட்சி – 9,740 வாக்குகள் பெற்றுள்ளன. இதனால், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 63,217 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் 17வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் திமுக 1,06,908, பாமக 48,123, நாம் தமிழர் கட்சி 9094 வாக்குகளும் பெற்றுள்ளன. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பணி நடைபெற்று வருகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 16ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில், திமுக – 1,00,177, பாமக – 45,768, நாம் தமிழர் கட்சி – 8,226 வாக்குகள் பெற்றுள்ளன. இதனைத் தொடர்ந்து, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 54,409 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், 15ஆவது சுற்று நிலவரப்படி திமுக வேட்பாளர் – 94,992, பாமக வேட்பாளர் – 43,167, நாதக வேட்பாளர் – 7,699 வாக்குகள் பெற்றுள்ளனர். இதில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 51,825 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
Sorry, no posts matched your criteria.