India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வந்தவாசி அருகே பெரியப்பாக்கம் கிராமத்தில் இருந்து விக்கிரவாண்டி அருகே உள்ள மாம்பாக்கம் கிராமத்திற்கு தனியார் பேருந்தில் 40 பேர் சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்தனர். அப்போது, ரெட்டணை அருகே தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
விழுப்புரத்தில் நேற்று கூட்டுறவு வார விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று பேசிய பாமக எம்.எல்.ஏ. சிவக்குமார், தமிழக அரசின் திட்டங்களை பாராட்டி பேசினார். அவர் பேசி முடித்த பிறகு அமைச்சர் பொன்முடி அவருக்கு கை கொடுத்து பாராட்டு தெரிவித்தார். பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழக அரசை விமர்சித்து வரும் நிலையில், எம்.எல்.ஏ. சிவக்குமாருக்கு பொன்முடி பாராட்டு தெரிவித்தது பேசு பொருளாகியுள்ளது.
விழுப்புரம் வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன். கடலூர் ஆயுதப்படை பிரிவில் பணிபுரியும் காவலரான இவர், திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்த தம்பத்திடம், அவரது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.4,50,000 பணத்தைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசார் நேற்று பாண்டியனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
விழுப்புரம் மாவட்டம் கண்டமானடி கிராமத்தில், வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் உள்ளிட்டோர் அண்மையில் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, முற்கால பல்லவர் காலத்தைச் சேர்ந்த (கி.பி. 7ஆம் நூற்றாண்டு) மூத்ததேவி சிற்பம் அங்கு இருந்தது கண்டறியப்பட்டது. பலகை கல்லில், அழகிய தலை அலங்காரத்துடன் இந்தச் சிற்பத்தில் மூத்த தேவி மார்பு, வயிற்றுடன் கால்கள் தொங்கியபடி காட்சியளிக்கிறார்.
கண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் கருணாமூர்த்தி. இவரது மனைவி சுவேதா தனது மாமியார் ரமணியுடன் வீட்டில் வசித்து வந்தார். ரமணி கடந்த அக்.30ஆம் தேதி சேலையில் தீப்பற்றி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இவர் சாவில் சந்தேகம் இருப்பதாக மற்றொரு மகன் அளித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை செய்து சுவேதா கள்ளக்காதனுடன் சேர்ந்து ரமணியை பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைத்தளத்தில், 2023இல் உளுந்தூர்பேட்டை சிப்காட்டில், தைவானைச் சேர்ந்த காலணி நிறுவனம், ரூ.2,302 கோடி முதலீடு செய்வதாகப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக தமிழக அரசு அறிவித்தது. சுமார் 20 மாதங்கள் கடந்தும், அந்தத் தொழிற்சாலை கட்டுமானத்துக்காக ஒரு செங்கல்கூட எடுத்து வைக்கப்படவில்லை என்று தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரூ.23.50 கோடியில் உள்கட்டமைப்பை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 4 லிப்டுகள், முகப்பு பகுதிகளில் பூங்கா, நகரப் பேருந்துகள் வந்து செல்ல 2 நுழைவாயில்கள், இடவசதிகளுடன் கூடிய பயணச்சீட்டு வழங்கும் மையம், அனைத்து வசதிகளுடன் கூடிய ஓய்வறை, நகரும் நடைமேடைகள், பயணிகள் தகவல் காட்சி அமைப்பு, CCTV கேமராக்கள், குளிர்சாதன வசதியுடன் தங்கும் ஓய்வறை அமைக்கப்பட உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டான் விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்து அரசு நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான விழா மேடை அமைப்பதற்கான இடத்தேர்வு குறித்து வழுதரெட்டியில் மாவட்ட ஆட்சியர் சி.பழனி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் பொதுப்பணித்துறை, கண்காணிப்பு பொறியாளர் பரிதி, செயற்பொறியாளர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கண்டாச்சிபுரம் வட்டம், வீரப்பாண்டி கிராமத்தில் எழுந்தருளும் பழமையான அருள்மிகு சௌந்தர்ய கனகாம்பிகை உடனுறை அதுல்ய நாதேஸ்வரர் திருக்கோயிலில், இன்றைய கிருத்திகை நாளில் பால் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகம் முருகப் பெருமானுக்கு செய்யப்பட்டு, முருகனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
விழுப்புரம் பூந்தோட்டம் நகராட்சி உயர்நிலைப் பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மருத்துவம் படிப்பதற்கு தேவையான நீட் (NEET) தேர்விற்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் சி.பழனி இன்று துவக்கி வைத்தார். உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.அறிவழகன் உட்பட பலர் இருந்தனர். இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.
Sorry, no posts matched your criteria.