India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் 21 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்தவகையில், விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (15-07-2024) இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 1,25,712 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். பாமக வேட்பாளரைவிட 69,000 வாக்குகள் அதிகம் பெற்றார். இந்நிலையில், நாளை அவர் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்கிறார். சபாநாயகர் அப்பாவு, நாளை அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க உள்ளார். மேலும், விக்கிரவண்டியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெருமையை பெற்றார் அன்னியூர் சிவா.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பெண்களை அடைத்து வைத்ததால் தான் திமுக வெற்றி பெற்றதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார். திருச்சியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “மக்கள் ஒரு நிமிடம் சிந்தித்திருந்தால், பாமக வேட்பாளர் வெற்றி பெற்றிருப்பார். திமுக அமைச்சர்கள் 23 பேர், தேர்தலின் போது தெரு தெருவாக பட்டியைப் போட்டு பெண்களை அடைத்து வைத்தனர். இப்படி தான் அவர்கள் வெற்றி பெற்றனர்” என்றார்.
நடந்து முடிந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், பாமக வேட்பாளர் சி,அன்புமணி 18 பூத்துகளில் 20க்கும் குறைவான ஓட்டுகளே வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த விவரம் வாக்கு எண்ணிக்கை முடிவில் தெரிய வந்துள்ளது. ஆனாலும், பாமக டெபாசிட் பெற்றது குறிப்பிடத்தக்கது. திமுக முதலிடமும் (124053 வாக்குகள்), பாமக 2ஆவது இடமும் (56296 வாக்குகள்), நாம் தமிழர் கட்சி 3ஆவது இடமும் (10,602 வாக்குகள்) பெற்றது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிகார பலத்தால் திமுக வெற்றி பெற்றுள்ளது என எடப்பாடி பழனிசாமி கூறினார். காட்பாடியில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “இடைத்தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெறவில்லை. இதனால் தான் அதிமுக போட்டியிடவில்லை. அதிமுகவுக்கு தோல்வி பயம் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். எம்.பி. தேர்தலில் அவருடைய சொந்த தொகுதியில் அதிமுகவுக்குத்தான் அதிக வாக்குகள் கிடைத்துள்ளன” என்றார்.
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நிறைவடைந்த பிறகும் கூட தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காரணத்தால் வாரந்தோறும் திங்கள்கிழமை நடைபெறும் மாவட்ட ஆட்சியரின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெறாது. எனவே பொதுமக்கள் வருகின்ற ஜூலை 22-ஆம் தேதி நடைபெறும் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் அன்புமணி அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அவருடன் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த தங்க ஜோதி பழனிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.
விழுப்புரம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு அபார வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா இன்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வில் அவருடன் உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி, நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் கௌதம சிகாமணி ஆகியோர் உடன் இருந்தனர்.
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தோல்வி அடைந்தது. இதை தொடர்ந்து கானை ஒன்றியம் கல்பட்டு நத்தமேடு பகுதியைச் சேர்ந்த குணா என்கிற பாமகவை சேர்ந்த இளைஞர், தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தோல்வி அடைந்தால் மொட்டை அடித்துக் கொள்வதாக நணபரிடம் சபதம் அளித்துள்ளார். இதனை ஏற்று தற்போது மொட்டை அடித்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பேசுபொருளாகி உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை நேற்று(ஜூலை 13) பனையபுரம் அரசு பள்ளியில் நடைபெற்றது. இந்நிலையில் 29 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுக வேட்பாளர் சிவா வெற்றி பெற்றார். யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை என கூறப்படும் நோட்டாவிற்கு 859 வாக்குகள் இந்த தேர்தலில் பதிவாகி உள்ளது.
Sorry, no posts matched your criteria.