Villupuram

News July 16, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் இன்று (16-07-2024) இரவு 7 மணி வரை 17 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 16, 2024

2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே கடந்த 2019ஆம் ஆண்டு 2 சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டத்தில் ஒரு சிறுமி உயிரிழந்தார். இந்த வழக்கில் கைதான பிரபா, அருண், துரைராஜ், ரவிக்குமார், மகேஷ் உட்பட 15 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.37,000 அபராதம் விதித்து விழுப்புரம் போக்சோ நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

News July 16, 2024

பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்ற அமைச்சர்

image

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சியில் ஊரக பகுதிகளில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை, இன்று (ஜூலை 16) அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார். இதில், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைளை மனுக்களாக வழங்கினர். இதில், மாவட்ட ஆட்சியர், எம்.பி. தரணிவேந்தன், கூடுதல் ஆட்சியர், சார் ஆட்சியர், ஒன்றிய பெருந்தலைவர், வட்டாட்சியர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தனர்.

News July 16, 2024

மக்கள் எங்களை கோட்டைக்கு அனுப்பாமல் விட்டனர்

image

பாமகவை கோட்டைக்கு அனுப்பாமல் மக்கள் தவறி விட்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் ஆதங்கமாக தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழக மக்களுக்காக போராடி கொண்டிருக்கும் பாமகவின் பின்னால் மக்கள் முழுவதுமாக வர மறுத்து தயங்குகின்றனர். அது ஏனோ தெரியவில்லை, மக்களுக்காக எத்தனை போராட்டங்கள் செய்தாலும் தேர்தல் நேரத்தில் நாணயமான வித்தியாசமான பாமக மக்கள் கைவிடுகின்றனர்” என்றார்.

News July 16, 2024

அன்னியூர் சிவா பதவியேற்றார்

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட அன்னியூர் சிவாவுக்கு, இன்று தலைமை செயலகத்தில் ,முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார். பாமக வேட்பாளரவிட 67,000 வாக்குகள் அதிகம் பெற்று அன்னியூர் சிவா அமோக வெற்றி பெற்றார். இந்நிலையில், சட்ட்டப் பேரவையில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினரின் எண்ணிக்கை 134ஆவது தொடர்கிறது.

News July 16, 2024

விழுப்புரத்தில் காலை முதல் மழை

image

விழுப்புரம் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முதலே வானம் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசி வந்த நிலையில், நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக விட்டு விட்டு லேசாக தூறல் பெய்து வந்தது. இந்நிலையில், இன்று காலை பரவலாக மாவட்டம் முழுவதும் மழை பெய்ய தொடங்கியது. ஆனால், பள்ளிகளுக்கு விடுமுறை எதுவும் அறிவிக்கப்படவில்லை. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

News July 16, 2024

விக்கிரவாண்டி வெற்றிக்கு திமுக கொடுத்த பரிசு

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் முடிவடைந்த பிறகு இப்போது மின்சாரக் கட்டணத்தை உயர்த்தியிருப்பதன் மூலம், திமுக மக்களை முட்டாள்களாக்கி முதுகில் குத்தியிருப்பதாக அன்புமணி கடுமையாக சாடியுள்ளார். விக்கிரவாண்டி வெற்றிக்காக மக்களுக்கு திமுக அளித்துள்ள பரிசுதான் இந்த கட்டண உயர்வு என்றும், ஏற்கனவே, உயர்த்தப்பட்ட மின்சாரக் கட்டணங்களால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News July 16, 2024

அன்னியூர் சிவா இன்று பதவியேற்கிறார்

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா வெற்றி பெற்ற நிலையில், இன்று அவர் பதவி ஏற்க உள்ளார். பாமக வேட்பாளரை விட சுமார் 67,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இன்று சபாநாயகர் அப்பாவின் இல்லத்தில் முதலமைச்சர் மற்றும் மற்ற எம்எல்ஏக்கள் முன்னிலையில், இன்று அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்பட உள்ளது.

News July 15, 2024

நரிக்குறவர் இன மக்கள் ஆட்சியரிம் கோரிக்கை

image

விழுப்புரம் நரிக்குறவர்கள் மற்றும் பழங்குடியின மக்களுக்கு மாதத்தில் ஒரு நாள் தனியாக மாவட்ட ஆட்சியரகம் குறைதீர்ப்பு நாள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி நரிக்குறவர் இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். தங்களுக்கான வாழ்வாதாரத்தை மற்றும் பள்ளி பொருளாதாரத்தை மேம்படுத்த தனியாக ஒரு நாள் மாதத்தில் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

News July 15, 2024

ரூ.70 லட்சம் கையாடல்: பெண்கள் புகார்

image

விழுப்புரம் மாவட்டம் சிறுவாக்கூர் கிராமத்தைச் சேர்ந்த சுய உதவிக் குழு பெண்கள் இன்று ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். அதில் தங்கள் பகுதியில் DRDA மூலம் அரசு வங்கி வழங்கிய ரூ.1 கோடியே 20 லட்சம் கடனை, 11 மகளிர் சுய உதவி குழு ஒன்றுக்கு தலா 5 லட்சம் வீதம் 55 லட்சம் பணம் மட்டும் வழங்கி, மீதமுள்ள 70 லட்சத்தினை PLF ஊழியர்கள் கையாடல் செய்து விட்டார்கள் என ஆட்சியரிடம் புகார் மனு வழங்கியுள்ளனர்.

error: Content is protected !!