India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி மூன் டிவி உரிமையாளரும், ஸ்கேட்டிங் சங்கப் பொறுப்பாளருமான ஸ்ரீராம் பிரசாத்ராவ் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது திருவுடலுக்கு, விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிக்குமார் இன்று நேரில் சென்று மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்தார். பின்னர், திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.
விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் TNPSC Group 2 – தேர்வினை மாவட்ட ஆட்சியர் சி. பழனி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விழுப்புரம் மாவட்டத்தில நடைபெற்ற குரூப்-2 எழுத்து தேர்வினை 15,708 பேர் கலந்து கொண்டு எழுதினார்கள். 5,372 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான அனைத்து இளநிலை பாடப்பிரிவுகளுக்கான இறுதிக்கட்ட மாணவர் சேர்க்கை வரும் செப்.19-ஆம் தேதி காலை 10 மணியளவில் நடக்க உள்ளதாக கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். அனைத்து பிரிவுகளிலும் காலியாக உள்ள இடங்களுக்கு மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என்றும், இக்கலந்தாய்வில் டி.சி உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி எனவும் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் வேளாண் இணை இயக்குனர் (பொ) சீனிவாசன் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், விழுப்புரம் மாவட்டத்தில் நடப்புப் பருவத்துக்குத் தேவையான உரங்கள் கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை நிலையங்களில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளுக்கு மானிய விலை உரங்களோடு இணை பொருள்களைக் கட்டாயப்படுத்தி, விநியோகம் செய்வது தெரிய வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என கூறப்பட்டுள்ளது.
திருவெண்ணெய்நல்லூர் அருகே நிலத்தகராறில் மூதாட்டி நசரம்மாள்(65) என்பவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று நள்ளிரவு ஏற்பட்ட தகராறில் குமரவேல் என்பவர் மூதாட்டி நசரம்மாளை தடியால் தாக்கியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த மூதாட்டியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எதிர்வரும் 17.09.2024 அன்று (செவ்வாய்கிழமை) மிலாடி நபி DRY DAY ஆக அனுசரிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் (FL1, FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL1) மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
அன்னபூர்ணா குழுமத்தின் உரிமையாளரை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தது மிகவும் கண்டித்தக்கது என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் து.ரவிக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், அதை வீடியோவாக வெளியிட்டதும், உச்சநீதிமன்ற நீதிபதி வீட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டதை வீடியோ வெளியிட்டதும் கடும் கண்டனத்திற்கு உரியது. இதன் மூலம் பாஜகவினர் விளம்பரத்திற்காக எதையும் செய்வார்கள் என்பது தெளிவாகிறது என்றார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (செப்.13) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் நடந்தால், உடனே போலீசாருக்கு அழையுங்கள். ஷேர் பண்ணுங்க.
எதிர்வரும் 17.09.2024 அன்று (செவ்வாய்கிழமை) மிலாடி நபி DRY DAY ஆக அனுசரித்து விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் (FL1, FL2, FL3, FL3A, FL3AA மற்றும் FL1) மூடப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி, இ.ஆ.ப. அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம், மருதூர் பகுதியில் உள்ள இடுகாட்டை ஆக்கிரமித்து பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இருப்பதை கைவிடவும், நகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகள் மற்றும் நிர்வாக சீர்கேடுகளுக்கு காரணமான நகராட்சியை கண்டித்து வரும் செப்.20ஆம் தேதி முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அறிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.