India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வடகிழக்கு பருவமழை 2024 முன்னேற்பாடுகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி இ.ஆ.ப., தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன் பங்கேற்றனர்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சியில் நடைபெற்று வரும் ஊரகப்பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி., அவர்கள் இன்று (02.08.2024) நேரில் பார்வையிட்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வழங்கல் அலுவலர் மு.சந்திரசேகர், விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் இருந்தனர்.
விழுப்புரத்தில் புதிய பேருந்து சேவையை, விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன் இன்று (ஆகஸ்ட் 2) வைத்தார். மக்களின் கோரிக்கைகளை ஏற்று, பள்ளி மாணவ, மாணவிகளுக்காக கல்லப்பட்டு – வளவனூர் மார்க்கமாக விழுப்புரம் வரை செல்லும் கூடுதல் பேருந்து வழிதடத்தை கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதில், ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி, ஒன்றிய குழு பெருந்தலைவர் சச்சிதானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
பாக்கம், மேட்டுப்பாளையம், ஆரோபுட் ஆகிய மின்பாதைகளில் இன்று (ஆகஸ்ட் 2) மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், கண்டமங்கலம், நவமால்மருதூர், கோண்டூர், பள்ளிப்புதுப்பட்டு, ஆர்.ஆர்.குளம், மண்டகப்பட்டு, வடுக்குப்பம், வெள்ளாழங்குப்பம், ஆலமரத்துக்குப்பம், பரசுரெட்டிபாளையம், பூவரசங்குப்பம், ஆண்டிப்பாளையம், புளிச்சம்பள்ளம், காட்ராம்பாக்கம் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.
கண்டமங்கலம், வளவனூர் துணை மின் நிலையங்களில் நாளை (ஆகஸ்ட் 3) மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நவமால்மருதுார், கோண்டூர், பள்ளிப்புதுப்பட்டு, ஆர்.ஆர்.குளம், பாக்கம் கூட்ரோடு, மண்டகப்பட்டு, வடுக்குப்பம், மேட்டுப்பாளையம், ஆண்டிப்பாளையம், செங்காடு, இளங்காடு, தனசிங்குபாளையம், பெத்தரெட்டிக்குப்பம், நரையூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட பசுமைக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி, அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன், விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காஜா சாகுல் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான இறுதிக்கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் இரா.சிவக்குமாா் , பி.ஏ. வரலாறு, பொருளியல் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி (தகுதி மதிப்பெண்கள் 299 முதல் 250 வரை), 6-ஆம் தேதி ஏழு மற்றும் எட்டாம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக பொதுமேலாளராக சதிஷ்குமார் பொறுப்பேற்றார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின், விழுப்புரம் மண்டல பொது மேலாளராக பணிபுரிந்த அர்ஜூனன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, விழுப்புரம் மண்டல பொது மேலாளராக சதிஷ்குமார் நியமிக்கப்பட்டார். அவருக்கு அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மது விலக்கு அமல் பிரிவில் பணியாற்றிய காவலர்களின் பணிக்காலம் முடிவடைந்ததையடுத்து, 56 காவலர்கள் தாலுகா காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டனர். அதேபோல், தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்த 65 காவலர்கள், சீனியாரிட்டி அடிப்படையில் மதுவிலக்கு அமல் பிரிவுக்கு மாற்றப்பட்டனர். இதற்கான உத்தரவை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் சிவாச் நேற்று (ஜூலை 31) பிறப்பித்தார்.
அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் உள்ள பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அப்போதைய விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரஜேந்திர நவநீத் ஐ.ஏ.எஸ். குவாரி டெண்டர் தொடர்பாக சாட்சியம் அளிக்க விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
Sorry, no posts matched your criteria.