Villupuram

News September 16, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் சுட்டெரித்த வெயில்

image

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (இன்று மற்றும் நாளை) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்தில் வெப்பம் நாளுக்கு நாள் சற்று அதிகரித்து கொண்டு செல்கிறது. அதிகளவில் அனல் காற்று வீசுவதால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், விவசாயிகள் என அனைத்து விதமான மக்களும் அவதிக்கு உள்ளாகுகின்றனர்.

News September 16, 2024

இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதிகளில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. அசம்பாவிதம் ஏதேனும் நடந்தால், உடனே போலீசாரை அழைத்து பயன்பெறுங்கள். ஷேர் பண்ணுங்க.

News September 16, 2024

விழுப்புரத்தில் 331 மனுக்கள் குவிந்தன

image

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட மக்கள் குறைகேட்பு கூட்டம் இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையிலான இந்த கூட்டத்திற்கு, மாவட்ட மக்கள் ஓய்வூதியம், இலவச வீட்டு மனை பட்டா, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 331 மனுக்கள் பெறப்பட்டனர். அதனைப் பெற்ற மாவட்ட ஆட்சியர், விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் மனுக்களை கொடுத்தார்.

News September 16, 2024

காவலர்கள் மீது லாரி மோதல்: அன்புமணி கண்டனம்

image

அரியலூர், அன்னாசிநல்லூர் – அங்கனூர் சாலையில், மணல் கடத்தி சென்ற லாரியை காவலர் தமிழ்ச்செல்வன், ஊர்க்காவல் படைவீரர் வெங்கடேசனும் தடுக்க முயன்றனர். அப்போது, அவர்கள் மீது மோதிவிட்டு மணல் கடத்தல் லாரி தப்பி சென்றுள்ளது. இதில் ஒருவருக்கு கைமுறிந்த நிலையிலும், மற்றொருவர் காயமடைந்த நிலையிலும் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர். இச்செயல் கண்டித்தக்கது என அன்புமணி தெரிவித்துள்ளார்.

News September 16, 2024

தனியார் பள்ளி பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்து

image

விக்கிரவாண்டி தாலுகா அலுவலகம் எதிரே, இன்று காலை பொதுமக்கள் சாலையை கடந்து கொண்டிருந்தனர். அப்போது, காத்துக் கொண்டிருந்த தனியார் பள்ளி பேருந்தின் பின்பக்கம், விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி சென்ற அரசு பேருந்து வேகமாக மோதி விபத்துகுள்ளானது. இதில், தனியார் பேருந்தில் பயணித்த 2 மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்னர். மற்றவர்கள் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினர்.

News September 16, 2024

ஜெர்மனியில் எம்.பி. ரவிக்குமாரின் கவிதை

image

ஜெர்மனி நாட்டில் உள்ள எர்லாங்கன் நகரில், ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் மனித உரிமைகளுக்கான கவிதைத் திருவிழா நடைபெற்றது. அதில், விசிக பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார், ஜனவரி 2020இல் தமிழில் எழுதி முகநூலில் பதிவிட்ட கவிதைகள் மொழியாக்கம் செய்யப்பட்டு பதாகையிலும், பிரசுரங்களிலும், ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழியில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. பரட்டலாமே!

News September 16, 2024

ஜெர்மனியில் எம்பி து.இரவிக்குமாரின் கவிதை

image

ஜெர்மனியில் உள்ள எர்லாங்கன் என்னும் நகரில் ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் சார்பில் மனித உரிமைகளுக்கான கவிதைத் திருவிழா நடந்தது. இதில், ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு விழுப்புரம் எம்.பி., ரவிக்குமாரின் கவிதை பதாகையிலும், பிரசுரங்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு ஏற்பாடு செய்த மனித உரிமை செயற்பாட்டாளர் ஜோர்ஜ் பொப்போவிக் மின்னஞ்சல் மூலம் இதனை தெரிவித்ததாக விழுப்புரம் எம்பி கூறினார்.

News September 16, 2024

மேல்மலையனூரில் 120 ஆண்டுக்கு பின் நடைபெற்ற கும்பாபிஷேகம்

image

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் வட்டம், செவலபுரை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரஹன் நாயகி சமேத அருள்மிகு அகஸ்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து, மகா அபிஷேகமமும், அன்னதானம் மற்றும் சுவாமி திருக்கல்யாணம், திருவீதியுலா ஆகியவை நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்தக் கோயிலில் சுமாா் 120 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

News September 16, 2024

Dr. மீனா முத்தையாவிடம் ஆசிபெற்ற பாமக தலைவர்

image

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிறுவனர் டாக்டர் ராஜா சர் முத்தையா செட்டியாரின் பெயர்த்தியும் கல்வியாளர் மற்றும் கொடையாளருமான டாக்டர் மீனா முத்தையாவின் 90-வது பிறந்தாள் வரும் 22 ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தனது குடும்பத்துடன் சந்தித்து வாழ்த்து தெரிவித்து ஆசி பெற்றார்.

News September 16, 2024

விழுப்புரத்தில் குழந்தை திருமணத்தில் மூவர் கைது

image

விழுப்புரம் பி.நத்தமேடு பகுதியை சேர்ந்த கணபதி(27) புதுவையை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி திருமணம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் மகளிர் போலீசார் கணபதி, மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த கணபதியின் தாய் காவேரி, சிறுமியின் தாய் ஆகிய மூவர் மீதும் போக்சோ மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

error: Content is protected !!