India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்து இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று வரும் 98 பேரின் வங்கி கணக்குகளை முடக்கியுள்ளதாக தமிழ்நாடு வடக்கு மண்டல காவல்துறை தலைவர் அஷ்ரா கார்க் தெரிவித்துள்ளார். மேலும், அவர்களின் நடவடிக்கைகளையும் கவனித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விழுப்புரம் பார்சல் சாப்பாட்டுக்கு ஊறுகாய் தராத உணவகத்திற்கு, ஊறுகாய் விலையுடன் சேர்ந்த மொத்தமாக ரூ.35,025 அபராதம் வித்தது நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 2022ல் ஆரோக்கியசாமி என்பவர் 25 சாப்பாடு ஆர்டர் செய்துள்ளார். பார்சலில், ஊறுகாய் இல்லாததால் வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில், மனஉளைச்சலுக்கு ரூ.30,000, வழக்கு செலவு ரூ.5000, ஊறுகாய் ரூ.25 என ரூ.35,025 வழங்க உத்தரவிடப்பட்டது.
வானூர் வட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்புத் திட்டமான ‘உங்களைத்தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் தென்கொடிப்பாக்கம் ஊராட்சியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், தென்கொடிப்பாக்கம் – கொந்தாமூர் இடையே நரசிம்மா நதியின் குறுக்கே உயர்மட்டப்பாலம் கட்டப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி நேரில் ஆய்வு செய்தார்.
வன்னியர்களின் எதிர்காலம் விளையாட்டா என தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கான 10.5% இடஒதுக்கீட்டுக்கு பரிந்துரைக்க மேலும் ஓராண்டா எனக் கேட்டுள்ள ராமதாஸ், வன்னியர்களுக்கான சமூகநீதியை பெற்றுத்தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
விழுப்புரம் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கை 25ஆம் தேதி நாளை நடைபெறுகிறது. பி.காம் உள்ளிட்ட இளநிலை பட்டப் படிப்புக்கான சேர்க்கை நாளை காலை 10 மணிக்கு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து மீதமுள்ள துறைகளிலும் சேர்க்கை நடைபெறுகிறது. இந்த வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி, அவர்கள் தலைமையில், விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ரெட்டணை ஊராட்சியில், முதல்வரின் முகவரித்துறை சார்பில், ஊரக பகுதிகளுக்கான “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாமில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அதிமுக அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம் இன்று ஆஜரானார். இன்று விசாரணைக்கு வந்த வழக்கில் தங்கள் வழக்கின் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள தடை ஆணை ஆவணங்களை விழுப்புரம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
மின் கட்டண உயர்வை கண்டித்து பல்வேறு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். அதில் ஒரு பகுதியாக விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் நகராட்சி திடலில் அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வு மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்ட அனைத்து வரிகள் உயர்த்தப்பட்டதை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிமுகவினர் கலந்துகொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் அம்பேத்கர், கலைஞர் பிறந்த நாளை முன்னிட்டு பேச்சுப்போட்டி விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஜூலை 30, 31 ஆகிய நாட்களில் காலை 10 மணிக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது. இதில் மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5,000 , இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 வழங்கப்படும் என ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் அதிமுக சார்பில் தொடர்ந்து மூன்றாவது முறையாக கடுமையான மின் கட்டண உயர்வு மற்றும் அத்தியாவசிய விலைவாசி உயர்வை காரணமாக திமுக அரசை கண்டித்து நாளை காலை 9 மணி அளவில் புதிய பேருந்து நிலையம் நகராட்சி மைதானம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் முன்னாள் அமைச்சர் விழுப்புரம் மாவட்ட செயலாளருமான சிவி சண்முகம் தலைமையில் நடைபெற உள்ளது என அதிமுக சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.