India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்களின் மகனும், கள்ளக்குறிச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளருமான கௌதம சிகாமணியின் சொத்துக்களை வருமானவரித் துறையினர் இன்று முடக்கினார்கள். முடக்கிய சொத்துக்களின் மதிப்பு ரூபாய் 14.21 கோடி ஆகும். இதனால் அரசியல் சுற்று வட்டாரங்களில் சற்று பதற்றம் ஏற்பட்டுள்ளது.
விழுப்புரம் அடுத்த காணை குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பாத்திர வியாபாரி செந்தில் என்பவர் வசித்து வந்த வீடு இன்று காலை திடீரென தீப்பற்றி எரிந்தன. அக்கம் பக்கத்தினர் உடனே தண்ணீரைக் கொண்டு அணைக்க முயற்சி செய்தனர். மேலும் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக விழுப்புரத்தில் இருந்து தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர்.
திருவெண்ணெய் நல்லூர் வட்டத்தில் உள்ள ஆனத்தூர் ஊராட்சியில் 20க்கும் மேற்பட்டோர் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி கள்ளக்குறிச்சி அ.தி.மு.க மாவட்ட செயலாளர் ரா.குமரகுரு அவர்களின் தலைமையில் தங்களை அ.தி.மு.க-வில் இணைத்துக் கொண்டனர். உடன் அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை நடைபெறுகிறது. 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை முடித்தவர்கள், ஐடிஐ, பட்டயப்படிப்பு முடித்தவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். ரூ.10 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்படும் என தொழில்நெறி வழிகாட்டும் மைய இயக்குநர் பால முருகன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய ரெய்டில், கணக்கில் வராத ரூ.42 ஆயிரம் பணம் சிக்கியது. பத்திரங்களை பதிவு செய்ய லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புக்கு தகவல் வந்தது. தொடர்ந்து 8 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு துறை குழுவினர் நேற்று இரவு திரு.வி.க., வீதியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் நுழைந்து, சோதனை செய்தனர். சோதனையில் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம்-புதுச்சேரி நான்கு வழிச்சாலை காவணிப்பாக்கம் மேம்பாலத்தில் கார் மற்றும் ஆம்னி கார் இன்று ஒரே சாலையில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 வாகனத்தில் வந்தவர்கள் படுகாயமடைந்தனர். இதில் ஒரு பெண்மணிக்கு கால் உடைந்தது. அப்பகுதியில் உள்ளவர்கள் 108 ஆம்புலன்ஸ்கு தகவல் கொடுத்து, காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வானூர் வட்டத்தில் சிறப்புத் திட்டமான “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், திருவக்கரை கல்மரப் பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன், திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம் உட்பட பலர் உள்ளனர்.
விழுப்புரம் காவல் சரகத்திற்குட்பட்ட கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் உள்ள கோட்டகுப்பம், விழுப்புரம், சேத்தியாதோப்பு மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் உள்பட 33 காவல் ஆய்வாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஆய்வாளர் அம்பேத்கர் அண்ணாமலை நகர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்து விழுப்புரம் டிஐஜி திஷா மிட்டல் உத்தரவிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்துள்ள கோனேரி குப்பம் பகுதியில் அமைந்துள்ள சரஸ்வதி கலைக் கல்லூரி வளாகத்தில் இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் தனது 86ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மரக்கன்று நட்டார். இந்நிகழ்வில், பாமக கௌரவ தலைவர் மணி, மயிலம் சட்டமன்றம் உறுப்பினர் சிவகுமார் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்தில், “உங்களைத்தேடி, உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், பொம்மையார்பாளையம் அரசு துவக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின்கீழ், மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி இன்று நேரில் பார்வையிட்டதுடன், உணவினை உண்டு தரம் குறித்து ஆய்வு செய்தார். உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்ருதஞ்ஜெய் நாராயணன் இருந்தார்.
Sorry, no posts matched your criteria.