Villupuram

News September 19, 2024

அர்ச்சகர்களுக்கு அவமரியாதை: ராமதாஸ் கண்டம்

image

அனைத்து சாதி அர்ச்சகர்கள் திட்டத்தின்படி, தமிழகத்தின் பல கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அவமதிக்கப்படுவதாகவும், வழிபாடு நடத்துவதற்கு பதிலாக கோயில்களை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுத்தப்படுவதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. அரசு இந்த அநீதியை ஊக்குவிப்பது கண்டித்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

News September 19, 2024

விசிக மாநாடு நடைபெறும் இடத்தில் எம்.பி ஆய்வு

image

உளுந்தூர் பேட்டையில் விசிக சார்பில் வரும் அக்டோபர் 2ம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடைபெற உள்ளது. மாநாடு நடைபெற உள்ள இடத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து இன்று காலை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் விசிக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

News September 19, 2024

விழுப்புரத்தில் நெல் பயிர் மகசூல் போட்டி

image

விழுப்புரம் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சீனிவாசன் நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில் வேளாண் மற்றும் உழவா் நலத்துறை சாா்பில், நெல் பயிா் மகசூல் போட்டி நடைபெற உள்ளது. மாநில அளவில் அதிக மகசூல் பெரும் விவசாயிகளுக்கு ரொக்கப் பரிசு சான்றிதழ் மற்றும் விருது வழங்கப்பட உள்ளது. இப்போட்டியில் பங்கேற்க விரும்பும் விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் தங்கள் பகுதி வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை அணுகலாம் என அறிவிப்பு

News September 19, 2024

ஊராட்சியில் வரிகளை செலுத்த சிறப்பு முகாம் கலெக்டர் தகவல்

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு ஊராட்சி பகுதியில் உள்ள கட்டிடங்களுக்கு வீட்டு வரி, சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் வழி உள்ளிட்ட பல்வேறு வரி இனங்களை நிலுவையின்றி செலுத்த வருகின்ற செப். 20, 21,23 ஆகிய மூன்று நாட்கள் சிறப்பு முகாம் நடக்கிறது,இதில் வரி செலுத்தாதவர்கள் வரி செலுத்தி பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் பழனி விடுத்துள்ள செய்தி குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.

News September 19, 2024

விழுப்புரத்தில் நாளை தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

image

விழுப்புரம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் 8-ஆம் வகுப்பு முதல் ஐடிஐ, டிப்ளமோ, பி.இ.,பி.டெக்., செவிலியா், மருந்தியல் போன்ற கல்வித்தகுதிகளைக் கொண்ட இளைஞா்கள், பெண்கள் பங்கேற்று பயன்பெறலாம். முகாமில் பங்கேற்க விரும்பும் நபர்கள் கல்விச்சான்றிதழ், ஆதார், மற்றும் சுயவிவர குறிப்புகளுடன் பங்கேற்கலாம். ஷேர் செய்யவும்

News September 19, 2024

திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

image

விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு நவம்பர் மாதம் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக திருச்சி கோட்ட ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது,இந்த ரயில் விழுப்புரத்திலிருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு திருவண்ணாமலை இரவு 10.45 மணிக்கு சென்றடையும், இதேபோன்று காலை 3.30 மணிக்குதிருவண்ணாமலையிலிருந்து -விழுப்புரத்திற்கு காலை 5 மணிக்கு வந்து சேரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News September 19, 2024

இன்று ஆய்வு செய்கிறார் மாவட்ட ஆட்சியர்

image

விழுப்புரம் வட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் இன்று நடைபெற உள்ளது. அனைத்து கிராமங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில், அனைத்து துறை உயர் அலுவலர்கள் காலை 8.30 மணி முதல் அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் பொது சேவைகள் மற்றும் அரசின் திட்டங்களை குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். பொதுமக்கள் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்ளப்பட உள்ளது.

News September 18, 2024

நகராட்சி திடலில் காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம்

image

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியைப் பற்றி இழிவாக பேசியதாக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜாவை கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று விழுப்புரம் நகராட்சி திடலில் விழுப்புரம் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.

News September 18, 2024

இரவு நேர ரோந்து காவல் அதிகாரிகள் விவரம்

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம். அசம்பாவிதம் நடக்கும்முன், போலீசாரை தொடர்பு கொண்டு பயனடையுங்கள். ஷேர் பண்ணுங்க.

News September 18, 2024

செஞ்சி கோட்டை பாரம்பரிய சின்னமாக தேர்வு செய்ய ஆய்வு

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி வெளியிட்ட செய்திக்குறிப்பில், செஞ்சி பேரூராட்சியில் உள்ள செஞ்சி கோட்டையை யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னமாக தேர்வு செய்வதற்கு, யுனெஸ்கோ குழுவினர் வரும் செப்டம்பர் 27ஆம் தேதி செஞ்சிக்கு வருகை புரிந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகள் பத்திரிக்கையாளர்கள் பொதுமக்கள் ஆகியோருடன் கலந்துரையாடல் நடத்த இருப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!