India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் புதுப்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி பிரதாப். கடந்த ஜனவரி மாதம் சென்னையை சேர்ந்த 16 வயது சிறுமியை திருமணம் செய்த நிலையில் நேற்று முன்தினம் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசார் நேற்று பிரதாப், அவரது தாய், சிறுமியின் தாய் மற்றும் தந்தை நான்கு பேர் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தேசிய கால்நடைகள் நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் 4ஆவது சுற்று கன்று வீச்சு நோய் தடுப்பூசி திட்டம் 4 மாதங்களுக்கு ஒரு முறை வருடத்தில் 3 முறை போடப்பட்டு வருகின்றது. விழுப்புரம் மாவட்டத்தில், 4ஆவது சுற்று தடுப்பூசி வரும் அக்.15ஆம் தேதி வரை நடைபெறும். எனவே, இந்த முகாம்களில் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை அழைத்து வந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கலெக்டர் கேட்டுக் கொண்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் கெடார் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு பிரசாத், கடந்த 2018ஆம் ஆண்டு 21 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியுள்ளார். இதுதொடர்பான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கியஜோதி, விஷ்ணு பிரசாத்திற்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து விஷ்ணு பிரசாத் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு வழிகாட்டும் மையத்தில், தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இதில், 20க்கும் மேற்பட்ட தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று 500க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளன. 8ஆம் வகுப்பு தோ்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ., பி.டெக்., செவிலியா், மருந்தியல் படிப்பு முடித்தவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். ஷேர் பண்ணுங்க.
விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று (19.09.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம்.
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் வட்டார கல்வி அலுவலர் ரவிசந்திரன் சஸ்பெண்ட் செய்து, தொடக்கக்கல்வி இயக்குனர் நரேஷ் நடவடிக்கை எடுத்துள்ளார். கோலியனூரில் உள்ள ஸ்ரீ நடராஜா நிதியுதவி பெரும் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும், ஆசிரியர் விகிதத்தை தவறாகவும் காட்டியுள்ளார். இதுதொடர்பான புகாரின் அடிப்படையில், அவரை சஸ்பெண்ட் செய்து இதுதொடர்பான அறிக்கையை பள்ளிக்கல்வித்துறையிடம் அளிக்கப்பட்டது.
விழுப்புரம் கோட்ட அளவிலான (செப்டம்பர் மாத) விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 24ஆம் தேதி காலை 11 மணியளவில் விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. கோட்டாட்சியர் தலைமையிலான இந்தக் கூட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானூர், திருவெண்ணெய்நல்லூர் மற்றும் கண்டாச்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாய பிரதிநிதிகள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
TNPSC தேர்வை 16 லட்சம் பேர் எழுதுகிறார்கள் என்பதிலிருந்தே, தமிழ்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் எந்த அளவுக்கு தலைவிரித்தாடுகிறது என்பதை புரிந்து கொள்ளலாம் என ராமதாஸ் கூறியுள்ளார். திண்டிவனத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று TNPSC நடத்திய தேர்வின் மூலம் நிரப்பப்படவுள்ள 4ஆம் தொகுதி பணியிடங்களின் எண்ணிக்கையை 15,000 ஆக அரசு உயர்த்த வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 6 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். திண்டிவனத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “2 லட்சம் பணியிடங்கள் 4ஆம் தொகுதியைச் சேர்ந்தவை ஆகும். இவற்றை நிரப்புவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக, இதுவரை செய்யவில்லை. TNPSC 4ஆம் தொகுதித் தேர்வு 2 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் நடக்கிறது. 7,024 பணியிடங்களை மட்டும் நிரப்புவது நியாயமல்ல” என்றார்.
விழுப்புரத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “போதைப் பொருள் கடத்தலுக்கு 10% போலீசாரை தவிர மற்ற அனைவரும் உடந்தையாக இருக்கின்றனர். தங்களுக்கு வர வேண்டிய லஞ்ச பணம் வந்தால் போதும் என்று நினைக்கின்ற போலீசாருக்கு, எதற்கு தொப்பி? எதற்கு சீருடை? லஞ்சம் வாங்குபவர்களை தண்ணீர் இல்லாத காட்டிற்கு மாற்ற வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?
Sorry, no posts matched your criteria.