India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இளநிலைப் பட்டப்படிப்புகளுக்கான இறுதிக்கட்ட மாணவா் சோ்க்கை கலந்தாய்வு வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 2) தொடங்குகிறது. இதுகுறித்து கல்லூரி முதல்வா் இரா.சிவக்குமாா் , பி.ஏ. வரலாறு, பொருளியல் படிப்புகளுக்கு ஆகஸ்ட் 5-ஆம் தேதி (தகுதி மதிப்பெண்கள் 299 முதல் 250 வரை), 6-ஆம் தேதி ஏழு மற்றும் எட்டாம் தேதி கலந்தாய்வு நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக பொதுமேலாளராக சதிஷ்குமார் பொறுப்பேற்றார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின், விழுப்புரம் மண்டல பொது மேலாளராக பணிபுரிந்த அர்ஜூனன் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனையடுத்து, விழுப்புரம் மண்டல பொது மேலாளராக சதிஷ்குமார் நியமிக்கப்பட்டார். அவருக்கு அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் மது விலக்கு அமல் பிரிவில் பணியாற்றிய காவலர்களின் பணிக்காலம் முடிவடைந்ததையடுத்து, 56 காவலர்கள் தாலுகா காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டனர். அதேபோல், தாலுகா காவல் நிலையத்தில் பணிபுரிந்த 65 காவலர்கள், சீனியாரிட்டி அடிப்படையில் மதுவிலக்கு அமல் பிரிவுக்கு மாற்றப்பட்டனர். இதற்கான உத்தரவை விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் சிவாச் நேற்று (ஜூலை 31) பிறப்பித்தார்.
அமைச்சர் பொன்முடி விழுப்புரம் மாவட்டம் வானூர் பகுதியில் உள்ள பூத்துறை கிராமத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் அள்ளியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அப்போதைய விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த பிரஜேந்திர நவநீத் ஐ.ஏ.எஸ். குவாரி டெண்டர் தொடர்பாக சாட்சியம் அளிக்க விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
வார இறுதி நாட்களில் மக்கள் கிளாம்பாக்கத்திலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், தி.மலை மற்றும் போளூர் ஆகிய ஊர்களுக்கு அதிக அளவில் பயணம் செய்வார்கள். இந்த நிலையில், அதற்கு எதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக ஆகஸ்ட் 2, 165 பேருந்துகள் மற்றும் ஆகஸ்ட் 3ஆம் தேதி 165 என மொத்தம் 330 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல்மலையனூர் அருகே உள்ள அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவிலில், ஆடி அமாவாசை திருவிழா மற்றும் திருவக்கரை சந்திர மௌலீசுவரர் திருக்கோயிலில் பௌர்ணமி திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்த முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் பழனி தலைமையில் நடைபெற்றது.
பழத்தோட்டங்களில் பசுந்தீவனப் பயிரை ஊடுபயிராகப் பயிரிடும் விவசாயிகளுக்கு, மானியம் வழங்கப்படும் என விழுப்புரம் ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். 2024-25ஆம் ஆண்டிற்கான பசுந்தீவன உற்பத்தியினை அதிகரிக்க, பசுந்தீவனப் பயிரை ஊடுபயிராகப் பயிரிடுவதை ஊக்குவிக்கும் திட்டம் 50 ஏக்கர் பரப்பளவில் 1 ஏக்கருக்கு ரூ.3000 வீதம் அரசு மானியத்துடன் நடப்பாண்டில் விழுப்புரத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.
பாமக நிறுவனர் ராமதாஸ், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 2 மாதங்களுக்கு ஒருமுறை அப்போலோ மருத்துவமனையில் அவர் வழக்கமாக சிகிச்சை பெறுவது வழக்கம். அந்த வகையில், இன்று சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், சிகிச்சை முடிந்ததும் அவர் வீடு திரும்புவார் எனக் கூறப்படுகிறது.
தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம், சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் உதவித்தொகை, இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை, ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, போன்ற திட்டங்களில் நலத்திட்ட உதவிகள் பெற சீர்மரபினர் இனத்தைச் சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என விழுப்புரம் ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.