India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியம் சிறுவாடி அடுத்த வைடப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் (36) தனது மாடுகளை ஓட்டி வரும்போது இன்று (செப் 24) மாலை பெய்த மழையில் இடி மின்னல் தாக்கி சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பொதுமக்கள் அவரை திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மழை பெய்துவரும் நிலையில் உளுந்தூர்பேட்டையில் மது – போதைப்பொருள் ஒழிப்பு மகளிர் மாநாடு நடைபெறும் திடலை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் துரை. ரவிக்குமார் அவர்கள் இன்று பார்வையிட்டார். உடன் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பெரியார், ஒன்றியச் செயலாளர் சங்கத் தமிழன் மற்றும் விசிக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
திண்டிவனம் ஆ. கோவிந்தசாமி கலைக் கல்லூரியில் இளங்கலை இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் சேர விருப்பம் உள்ள மாணவர்கள் தங்களுடைய 10 மற்றும் 12ம் வகுப்பு மதிப்பெண், மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்ட தேவையான சான்றிதழ்களுடன் நாளை முதல் கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம். ஏற்கனவே ஆன்லைனில் விண்ணப்பிக்காத மாணவர்களும் சேர்ந்துகொள்ளாலம் என கல்லூரி முதல்வர் இன்று அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாக ஆங்காங்கே அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இன்று காலை 12 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில், மேல்மலையனூர் அடுத்த வளத்தியில் 2 சென்டிமீட்டர் மழை மற்றும் செஞ்சியில் 1 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்துள்ளது.
அரகண்டநல்லூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகில் சாலை விரிவாக்கப் பணி நடைபெற உள்ளது. இதற்காக வெட்டப்படும் மரங்களை காக்கும் வகையில், வெட்டப்பட்ட மரங்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தினை வேறு இடத்தில் நடவு செய்ய திட்டமிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், விழுப்புரம் மத்திய மாவட்ட செயலாளர் பாலசக்தி, பசுமை தாயகம் மாநில துணை செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் மீதான வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணைக்கு சி.வி சண்முகம் நேரில் ஆஜரான நிலையில், அவர் தரப்பு வழக்கறிஞர்கள் சி.வி.சண்முகம் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, வழக்கை அக்.23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 காலாண்டு தேர்வு கணித பாட வினாத்தாள் வெளியானதாக, சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. விசாரணையில், தவறான தகவல் என தெரிய வந்தது. சமூக வலைதளத்தில் பரவிய வினாத்தாள் குறித்து கல்வித் துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, “நேற்று காலை மாணவர்களுக்கு தேர்வு எழுத வழங்கிய கணித பாடத்திற்கான வினாத்தாள், சமூக வலைதளத்தில் பரவிய வினாத்தாள் அல்ல” என அவர் விளக்கம் அளித்துள்ளார்.
விழுப்புரம் – சென்னை ரயில் தடத்தில் அதிவேக ரயில்கள் செல்வதால், பாதுகாப்பாக செல்வதற்காக அதற்கேற்ற வகையில் தண்டவாளங்களும் கூடுதல் கிலோ கணக்கில் மாற்றி பொருத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், விழுப்புரம் ரயில் நிலையத்தில் சென்னை மார்க்க ரயில்கள் செல்லும் பாயிண்டில், 52 கிலோ எடையுள்ள தண்டவாளத்தை மாற்றி, 60 கிலோ எடையுள்ள தண்டவாளத்தை பொருத்தும் பணிகள் நேற்று நடைபெற்றது.
விக்கிரவாண்டி, காரணை பெரிச்சானூர், கெடார், அரசூர் துணை மின் நிலையங்களில் இன்று (செப்.24) பராமரிப்புப் பணி நடைபெற உள்ளது. அதனால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேற்கண்ட துணை மின் நிலையங்களின் கீழ் மின் வசதி பெறும் அனைத்து பகுதிகளிலும் மின்தடை இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுங்கள். பராமரிப்பு முடிந்ததும், மின் விநியோகம் வழங்கப்படும். ஷேர் பண்ணுங்க.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகக் கூட்டங்கள் வரும் செப்டம்பர் 26 ஆம் தேதி காலை சுமார் 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் மாவட்ட விவசாயிகளின் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும் என்றும், கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த கோரிக்கைகளை மனுவாக கொடுத்து பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் பழனி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.