India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் நகராட்சி பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளதாவது; 2009 -ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்தவர்கள் தங்களது பிறப்புச் சான்றிதழில் தங்கள் பெயரை பதிவு செய்ய 31.12.2024 ம் தேதி கடைசி நாளாகும். அதன் பின்னர் பிறப்பு சான்றிதழ் பெயர் பதிவு செய்ய இயலாது. ஆதலால் ஏற்கனவே பிறப்பு சான்று பெற்ற அலுவலகத்தை நேரில் அணுகி, விண்ணப்பித்து பெயர் பதிவேற்றம் செய்யுமாறு தெரிவித்துள்ளது.
27.09.2024 மற்றும் 28.09.2024 ஆகிய வார இறுதி நாட்களில் மக்கள் கிளாம்பாக்கத்திலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாச்சலம், திருவண்ணாமலை மற்றும் போளூர் ஆகிய ஊர்களுக்கு அதிக அளவில் பயணம் செய்வார்கள் என்பதால் அதற்கு ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக வெள்ளிக்கிழமை 125 மற்றும் சனிக்கிழமை 125 என மொத்தம் 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (25.09.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் நகராட்சியில் உள்ள வருவாய் பிரிவில் வரி வசூல் பணியில் குணா என்பவர் காலி மனைக்கு வரி விதிக்க ரூ.10000 லஞ்சம் கேட்டு பெரும்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி அழகேசன் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதையடுத்து விழுப்புரம் நகராட்சியில் உள்ள வருவாய் பிரிவில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் விழுப்புரம் நகராட்சி ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், காவல்துறை அனுமதி அளிக்கவில்லை என்ற செய்தி பரவி வந்தது. இதுகுறித்து பேசிய விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. தீபக், “த.வெ.க. மாநாட்டிற்கு அனுமதி மறுப்பு என்ற செய்தி தவறானது. அக்டோபர் 27 மாநாடு நடத்த அனுமதி கேட்டிருந்த நிலையில், நிபந்தனைகள் குறித்து பேசி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டியில், வரும் அக்.27ஆம் தேதி த.வெ.க. கட்சியின் முதல் மாநாடு நடத்த கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. அதற்காக, விழுப்புரம் மாவட்ட காவல்துறையிடம் அனுமதி கேட்டு மனு அளித்து 4 நாட்கள் ஆகியும், இதுவரை காவல்துறை எந்த பதிலும் அளிக்கவில்லை. தேவர் ஜெயந்தி விழாவிற்காக ராமநாதபுரத்திற்கு 3 நாட்கள் பாதுகாப்பு பணிக்கு செல்ல வேண்டும் என்பதால், மாநாட்டிற்கு பாதுகாப்பு மேற்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டத்தூர் கிராமத்தில், இன்று அதிகாலையில் சுற்றுலா வேன் ஒன்று சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த 2 பெண்கள் உட்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள். படுகாயமடைந்த 14 பேர் விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நாளை (செப்.26) காலை 11 மணியளவில் விவசாயிகள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாகவோ அல்லது நேரிலோ தெரிவித்து பயன்பெறலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க.
விழுப்புரம் மாவட்டத்தில், பள்ளியில் தன்னுடன் படிக்கும் மாணவியின் வீட்டின் மீது சக மாணவர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் குண்டு வீசியதோடு கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலின் பேரில், 4 சிறுவர்களையும் போலீசார் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்துள்ளனர். இச்சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் நகரில் விதிகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள், ஷோ் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தெரிவித்துள்ளது. நேற்று நடைபெற்ற முத்தரப்புக் கூட்டத்தில், இடையூறு ஏற்படாத வகையில் பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும். வண்டியின் பின்புறக்கதவை திறந்து வைத்து பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடாது. முன்னுரிமை அடிப்படையில் ஆட்டோக்களை நிறுத்த வேண்டும் என அறிவுரைகள் வழங்கப்பட்டன.
Sorry, no posts matched your criteria.