India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம் வரும் 9ஆம் தேதி விழுப்புரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னர், கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டு வரும் 13ஆம் தேதி அன்று நடைபெறும் என்றும், இதில் தமிழக காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு சிறப்புரை ஆற்ற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை விழுப்புரம் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, விக்கிரவாண்டி, பொன்னங்குப்பம், கொட்டியாம்பூண்டி, சித்தனி, பேரணி, ஆவுடையார்பட்டு, பாப்பனபட்டு, முண்டியம்பாக்கம், சாத்தனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். உங்க ஏரியாவில் மழை பெய்ததா?
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை பணியாற்றி வந்த 23 உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நிர்வாக காரணங்களுக்காக இந்த பணியிட மாற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தீபக் சிவாச் உத்தரவிட்டார். பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவலர்கள் விரைந்து பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், தமிழ்ப்புதல்வன் திட்டம் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ராஜேஷ்வரன் என பலர் கலந்துகொண்டனர்.
தமிழக கடலோர பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விழுப்புரத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர மேல் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஒரு சில மாவட்டங்களில் மழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் குடையுடன் வெளியே செல்லுங்கள்.
விழுப்புரம் மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 7) பல இடங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், நாளை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை ஜானகிபுரம், கண்டப்பாக்கம், கண்டமானடி, கன்னிமடை, மரகதபுரம், பிடாகம், நத்தமேடு, அரியலூர் திருக்கை, கக்கனூர், போரூர், அனுமந்தபுரம், மங்கலாபுரம், அரசூர், ஆலங்குப்பம், தென்மங்கலம், மாமந்தூர், அரும்பட்டு, பழையபட்டினம், ஆணைவாரி ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும்.
திண்டிவனம் அருகே சிங்கனூரைச் சேர்ந்தவர் விவசாயி முருகன். இவர் தன்னுடைய இடத்திற்கு பட்டா வாங்குவதற்காக அனுகியபோது, விஏஓ தனவேல் மற்றும் உதவியாளர் ஏழுமலை ஆகியோர் முருகன் என்பவரிடம் இருந்து ரூபாய் 5000 லஞ்சம் வாங்கியுள்ளனர். இதையடுத்து இருவரையும் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்யராஜ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் வருவாய் துறையில் நிர்வாக காரணங்களுக்காக தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது. அந்த வகையில், விழுப்புரம் மாவட்டத்தில் 23 துணை தாசில்தார்கள் இடமாற்றம் மற்றும் 12 பேருக்கு பதவி உயர்வு அளித்து ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து இன்னும் சில மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் வருவாய் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் உள்ள கடலோர பகுதியில் வளிமண்டல சுழற்சி காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு,காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.விழுப்புரத்தில் நாளையும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் காற்று 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என தகவல்.
Sorry, no posts matched your criteria.