India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் இன்று புதிதாக 25 வழித்தட பேருந்து சேவையினை தமிழக அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து அரசு பேருந்தில் அமைச்சர்கள் பொன்முடி மற்றும் செஞ்சி மஸ்தான் ஆகியோர் பயணம் மேற்கொண்டனர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தின் 6 வடமாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த 6 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. பொதுமக்கள் குடை எடுக்க மறக்காதீங்க.
விழுப்புரம் தாலுகா போலீசார் நேற்று, புதிய பேருந்து நிலையப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கிடமாக நின்ற நபரிடம் விசாரித்தபோது, அவா் போலீசார் ஒருவரைத் தாக்கி, தடுக்க முயன்ற உதவி ஆய்வாளரையும் கத்தியால் வெட்ட முயன்றுள்ளார். விசாரணையில் அவர் பாலாஜி (28) என்பதும், குற்றச்சரித்திர பதிவேடு ரவுடி என்பதும் தெரியவர, போலீசார் அவர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனா்.
டெல்லியில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில், விழுப்புரம் மாணவர்கள் தங்கம், வெண்கல பதக்கங்களை வென்றனர். ஆக.1 முதல் 4ஆம் தேதி வரை ஜீனியர், சீனியர் என 3 பிரிவுகளில் போட்டிகள் நடந்தன. இதில், கோலியனுாரில் உள்ள ‘செய்கோ சாயி கராத்தே’ பயிற்சி மையத்திலிருந்து 11 மாணவர்கள் கலந்து கொண்டனர். சீனியர் பிரிவில் தருண், தேவநாதன் முதலிடமும், கேடட் பிரிவில் யுகேஷ், சசிதரன், விஷ்ணுகுமார் 3ஆம் இடம் பிடித்தனர்.
கோனேரிகுப்பம் கிராமத்தில் இன்று நாவல் பழம் பறிக்க அப்பகுதியிலுள்ள ஓடையை கடந்து செல்ல முயன்ற 3 குழந்தைகள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அப்பகுதியைச் சேர்ந்த விஜயகுமாரின் மகன் சஞ்சய் மற்றும் மாரிமுத்து என்பவரின் மகள்கள்
பிரியதர்ஷினி, சுபஸ்ரீ ஆகிய மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ஒலக்கூர் போலிசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் டவுன் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர், ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்துள்ளனர். அதில் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை மீறி வருவதாகவும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பிட்டுள்ளனர். இப்புகார் மனுவை ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கத்தின் தலைவர் ஜெய்கணேஷ் தலைமையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நேரில் மனு அளித்தனர்.
விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான ரவிக்குமார் இன்று (ஆகஸ்ட் 7) டெல்லியில் உள்ள கலைஞரின் படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 6 ஆவது நினைவுநாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள திமுக தலைமையகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பங்கேற்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மரியாதை செலுத்தினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்ட சுழற்சி காரணமாக கடந்த சில நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை விக்கிரவண்டி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இன்று மழை பெய்யுமா?
பூத்தமேடு துணை மின் நிலையத்திற்குட்பட்ட கொய்யாதோப்பு மின்னூட்டியில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் நாளை காலை 09.00 மணி முதல் 12.00 மணி வரை பூத்தமேடு, கொய்யாதோப்பு, அய்யன்கோவில்பட்டு, சுப்பன்பேட்டை, திருவாமத்தூர், தென்னமாதேவி, அய்யூர் அகரம், மேட்டுப்பாளையம், சானாங்தொப்பு ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படும் என விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. நேற்றைய மழை அளவு விவரம்: விழுப்புரம் 10 மி.மீ., கோலியனூர் 72 மி.., வளவனூர் 65 மி.மீ., திண்டிவனம் 59 மி.மீ., மரக்காணம் 19 மி.மீ., செஞ்சி 83 மி.மீ., வல்லம் 69 மி.மீ., அரசூர் 61 மி.மீ., திருவெண்ணைநல்லூர் 19 மி.மீ. என சராசரியாக 39 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.