Villupuram

News August 11, 2024

மாணவியை சந்தித்து ஆறுதல் கூறிய எம்எல்ஏ

image

விழுப்புரம் மாவட்டம் கக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த சன்மதி(14) பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று இரவு மின்னல் தாக்கி மாணவியின் கண் பார்வை மங்கிய நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த தகவலறிந்து விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா நேரில் சென்று அந்த மாணவியை பார்த்து இன்று (ஆகஸ்ட் 11) ஆறுதல் கூறினார்.

News August 11, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் பதிவான மழையளவு

image

விழுப்புரம் மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. விழுப்புரம் 220 மி.மீ, கோலியனூர் 72 மி.மீ, வளவனூர் 64 மி.மீ, கெடார் 90 மி.மீ, சூரப்பட்டு 85 மி.மீ, வானூர் 51 மி.மீ, திண்டிவனம் 127 மி.மீ, மரக்காணம் 108 மி.மீ, செஞ்சி 142 மி.மீ, வல்லம் 77 மி.மீ, முகையூர் 105 மில்லி மீட்டரும் பதிவாகியுள்ளது. மாவட்டத்தின் சராசரி மழைபெழிவு 76 மில்லி மீட்டராக பதிவாகியுள்ளது.

News August 10, 2024

விழுப்புரம் மாவட்டத்தின் மழை அளவு

image

விழுப்புரம் மாவட்டத்தின் நேற்றைய மழை அளவு விவரம் வெளியாகியுள்ளது. விழுப்புரம் 22 மி.மீ, கோலியனூர் 20 மி.மீ, வளவனூர் 40 மி.லி, கெடார் 65 மி.மீ, முண்டியம்பாக்கம் 56 மி.மீ, சூரப்பட்டு 60 மி. மீ, வானூர் 25 மி.மீ, திண்டிவனம் 22 மி.மீ, மரக்காணம் 39 மி. மீ, செஞ்சி 21 மி. மீ, வல்லம் 53 மி. மீ, அவலூர்பேட்டை 92 மி.மீ பதிவாகியுள்ளது.

News August 10, 2024

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

image

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு 2024 -25ஆம் கல்வியாண்டு நாட்காட்டியில் 2 மற்றும் 4-ஆவது சனிக்கிழமை வேலைநாள் என அறிவிக்கபட்டிருந்தது. இதனை திரும்பப் பெற்று வேலை நாள் அறிவிப்பை ரத்து செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மட்டும் இன்றும் (ஆகஸ்ட்10), ஆகஸ்ட் 24-ஆம் தேதியும் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 9, 2024

விழுப்புரத்தில் போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

image

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் 12.08.2024 அன்று சென்னையில், போதை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறுவதையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் போதை ஒழிப்பு பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் அரசு துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

News August 9, 2024

விழுப்புரத்திற்கு மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் தென் மேற்கு பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று இரவு 10 மணி வரை தமிழகத்தின் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 10 மணி வரை விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 9, 2024

விழுப்புரத்தில் பாரம்பரிய விதை திருவிழா தொடங்கியது

image

விழுப்புரம், ஜெயசக்தி திருமண மண்டபத்தில் பாரம்பரிய விதை திருவிழா ஆகஸ்ட் 9,10,11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன. இந் நிலையில் இன்று காலை முதல் விழா தொடங்கியது. இதில் 1000-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல், காய்கறி, கீரை விதைகள், 100-க்கும் மேற்பட்ட பாரம்பரிய அரிசி வகைகள், இயற்கை மூலிகை பொருட்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இதை பொதுமக்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டு பார்வையிட்டு வருகின்றனர்.

News August 9, 2024

BREAKING: விழுப்புரம் போலீஸ் அதிகாரிக்கு பதவி உயர்வு

image

விழுப்புரம் மாவட்டத்தின் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளராக இருப்பவர் தேவநாதன்.இவர் தற்போது சென்னை மேற்கு சரகத்தின் லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் காவல் கண்காணிப்பாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

News August 9, 2024

கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழை அளவு

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரத்தில் 18 செ.மீ., திண்டிவனம் 7 செ.மீ., வளவனூர் 6 செ.மீ., சூரப்பட்டு, வானூர் மற்றும் செஞ்சியில் தலா 5 செ.மீ., முகையூர், கண்டியம்பாக்கம், கஞ்சனூரில் தலா 4 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இதனால் தாழ்வான இடங்கள் மற்றும் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது.

News August 9, 2024

விழுப்புரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை

image

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது. இதனால், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் அவதி அடைந்தனர். குறிப்பாக, விழுப்புரம், விக்கிரவாண்டி, முண்டியம்பக்கம் ஆகிய பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்ததால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மாலையில் பெய்ய தொடங்கிய மழை, விடிய விடிய பெய்தது. உங்க ஏரியாவில் மழை பெய்ததா?

error: Content is protected !!