Villupuram

News August 13, 2024

திண்டிவனம் அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை

image

திண்டிவனம் ஆ.கோவிந்தசாமி அரசு கலைக் கல்லூரியில் 2024 -2025 ஆம் கல்வியாண்டின் முதுநிலை மாணவர் சேர்க்கைக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு 13/08/2024 மற்றும் 14/08/2024 ஆகிய இரண்டு நாட்களில் காலை 10.00 மணிக்கு நடைபெறும். இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் பங்கேற்குமாறு கல்லூரி முதல்வர் அறிவித்துள்ளார்.

News August 13, 2024

திண்டிவனத்தில் காய்கறி கடைகள் இன்று அடைப்பு

image

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள காய், கனி வியாபாரிகள் சங்கத்தினர் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துகின்றனர். காய்கறி மார்க்கெட்டில் செயல்படாத கழிவறையை சீரமைக்க வேண்டும். மார்க்கெட்டில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியாக மார்க்கெட் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கடைகளை அடைத்து போராட்டம் நடத்துகின்றனர்.

News August 13, 2024

திண்டிவனம் காவல் நிலையம் அருகே கத்திக்குத்து

image

திண்டிவனம் அடுத்த பூதேரி பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் நேற்று மாலை கிடங்கல் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, காவல் நிலையம் அருகே மறைந்திருந்த மர்ம கும்பல் சந்தோஷை வழிமறித்து சரமாரியமாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றது. கொலை வெறித்தாக்குதல் நடத்திய கும்பலை சேர்ந்த ரிஸ்வான், சன உல்லா ஆகிய இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 12, 2024

விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் (16.08.2024) அன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறுகிறது. (கல்வி தகுதிகள்: 8th Pass, 10th, 12th, Diploma, Any Degree, Nursing, I.T.I, B.E, B.Tech.,) வயது வரம்பு: 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 12, 2024

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ஆட்சியர் ஆய்வு

image

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில், கடந்த சில நாட்களாக பெய்த திடீர் கனமழையின் காரணமாக தேங்கியிருந்த மழைநீர் வெளியேற்றப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி, இ.ஆ.ப., இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் மோகன், நீர்வளத்துறை செயற்பொறியாளர் ஷோபனா உட்பட பலர் உள்ளனர்.

News August 12, 2024

விழுப்புரத்தில் ஆய்வுக் கூட்டம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விழுப்புரம் நகராட்சி பகுதிகளில் மழைநீர் தேங்காத வண்ணம் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன் முன்னிலை வகித்தார்.

News August 12, 2024

பணி நியமன ஆணை வழங்கிய ஆட்சியர்

image

வானூர் சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் அலுவலகத்தில், முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்த போது ஷா.அப்துல்யாகூப் என்பவர் உயிரிழந்தார். இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரது மனைவி அ.பாத்திமா என்பவருக்கு இளநிலை வருவாய் ஆய்வாளராக பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சி.பழனி இன்று (12.08.2024) வழங்கினார்.

News August 12, 2024

உலக சாதனை விக்கிரவாண்டி மாண்வர்கள்

image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த பனையபுரத்தில், சஞ்சய் மல்லன் ஸ்போர்ட்ஸ் எனும் சிலம்பம் அகாடமி இயங்கி வருகிறது. இந்த அகாடமியைச் சேர்ந்த 7 மாணவர்கள், நேற்று திருச்சியில் நடைபெற்ற ராயல் புக் ஆஃப் உலக சாதனையில் பங்கேற்றனர். அதில், 2 மணி நேரம் இடைவிடாமல் தொடர்ந்து சிலம்பம் சுற்றி உலகச் சாதனை படைத்துள்ளனர். அவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

News August 12, 2024

விழுப்புரத்தில் 13 செ.மீ. மழைப்பதிவு

image

விழுப்புரத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கனமழை கொட்டித் தீர்த்தது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் விழுப்புரம் 13 செ.மீ., மரக்காணம் 6 செ.மீ., கோலியனூர் 5 செ.மீ., வளவனூர் 4 செ.மீ., கெடார் மற்றும் முண்டியம்பாக்கம் தலா 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

News August 12, 2024

விழுப்புரத்தில் விடிய விடிய கனமழை

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்றிரவு பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை பெய்தது. விக்கிரவாண்டி, திருவெண்ணைநல்லூர், கருவேப்பிலைபாளையம், அரசூர், பேரங்கியூர், இருவேல்பட்டு, காந்தலவாடி, சித்தானாங்கூர், திண்டிவனம், மரக்காணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. விடாமல் பெய்த கனமழையால், தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியது. உங்கள் பகுதியில் மழை பெய்ததா?

error: Content is protected !!