India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சிங்கவரம் அருள்மிகு ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோவிலுக்கு புதிய சாலை அமைக்கப்பட்டு வருவதை நேற்று முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் R.விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி மஸ்தான், மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விருதுநகரைச் சேர்ந்த மணிகண்டன், கடந்த மார்ச் மாதம் வீட்டிலிருந்து வெளியேறி விழுப்புரம் ரயில் நிலையத்தில் தங்கியிருந்தார். இந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். பின்னர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விழுப்புரம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில், வரும் 27ஆம் தேதி த.வெ.க. மாநில மாநாடு நடைபெற உள்ளது. மாநாடு நடக்கும் பகுதியில், வாகனங்கள் நிறுத்த தேர்வு செய்யப்பட்ட இடங்களில் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் நேற்று ஆய்வு செய்தார். பிரமாண்டமாக நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பந்தல்கால் நடுதல் நேற்று காலை கட்சியின் பொதுச்செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மாலையில் அப்பகுதியில் எஸ்.பி. ஆய்வு செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பெருவாரியாக பனை விதைகள் நடும் விழா நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் வரும் 8ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், விவசாய பெருமக்களின் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
செஞ்சி வேலந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அலாவுதீன் இருவரும், குறைந்த விலைக்கு தங்கம் தருவதாகக் கூறி இப்ராஹிம் என்பவரை ஏமாற்றியுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் இருவரையும் கைது செய்த நிலையில், இவர்களது தொடர் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி. பரிந்துரையின் பெயரில், ஆட்சியர் பழனி உத்தரவின்படி போலீசார் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த ஆரோவில் பகுதியிலுள்ள சர்வதேச நகரத்துக்கு பல்வேறு நாடுகளின் தூதர்கள், உயர்நிலை ஆணையர்கள் நேற்று வந்தனர். அனைவரையும் வரவேற்ற ஆரோவில் அறக்கட்டளையின் துணைச் செயலரும், இயக்குநருமான சுவர்ணாம்பிகா, ஆரோவில்லின் செயல்பாடுகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார். தொடர்ந்து, அனைவரும் மாத்திா்மந்திா் தியானத்தில் பங்கேற்றனா்.
சென்னை – தூத்துக்குடி இடையே, ஆயுத பூஜை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. வரும் 8ஆம் தேதி (செவ்வாய்) இரவு 11:45 மணிக்கு, சென்னை சென்ட்ரலில் இருந்து (06186) புறப்பட்டு விழுப்புரம், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு மறுநாள் மதியம் 12:30 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக, 9ஆம் தேதி (புதன்கிழமை) மதியம் 3:30 தூத்துக்குடியில் புறப்பட்டு சென்னைக்கு மறுநாள் காலை 5:55க்கு சென்றடையும்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மாலை கனமழை கொட்டித் தீர்த்தது. விக்கிரவாண்டி, பொன்னங்குப்பம், செஞ்சி, காந்தி பஜார், தேசூர்பேட்டை, பீரங்கிமேடு, மேலச்சேரி, ஈச்சூர், ஈயக்குனம், நெகனூர் புதூர், தேசூர், சொக்கநந்தல், கெங்கவரம், அப்பம்பட்டு, பாடிபள்ளம், பெரியமூர், பங்களாபேட்டை, தேவதனாம்பெட்டை, பள்ளியம்பட்டு, சேரானூர், சிட்டாம்பூண்டி, மீனம்பூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. உங்க ஏரியாவில்?
அரசு மருத்துவக் கல்லூரியில் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்ற 6 மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ மாணவராக சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர்களுக்கான சேர்க்கை ஆணைகள் நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்பட்டன. அரசுப் பள்ளிகளில் +2 பயின்று, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப்படிப்புக்கு இடம் வழங்கப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.