India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம் ஊரல் கிராமத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல். 11ஆம் வகுப்பு படித்து வந்த இவர், தனது பெற்றோரிடம் விலை உயர்ந்த செல்போனை வாங்கி கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதற்கு பெற்றோர் மறுத்துள்ளனர். மனமுடைந்த வெற்றிவேல் இன்று தனது தோட்டத்தில் உள்ள மாட்டுக்கொட்டகையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, ரோசனை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தவெக கட்சியின் முதல் மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள், மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இச்சூழலில், விழுப்புரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், விக்கிரவாண்டியில் தாங்கள் தேர்வு செய்த இடம் நிச்சயமாக தேர்வாகவுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும், மாநாட்டுக்கான விளம்பர போஸ்டர்கள், பேனர்களை அடித்து வைத்து கொண்டு தயார் நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய் மாநாடு நடக்குமா? நடக்காதா?
விழுப்புரம் அருகே லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புருஷானூரைச் சேர்ந்த 17 பேர், துக்க நிகழ்ச்சிக்காக சென்னை நோக்கி வேனில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே உள்ள அழுக்கு பாலம் அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது வேன் கட்டுப்பாட்டை இழந்து பலமாக மோதியது. இதில், வேனில் பயணித்த 15 பேர் காயம் அடைந்தனர்.
விக்கிரவாண்டி உள்ளிட்ட 25 சுங்கச்சாவடிகளில் வரும் செப்.1ஆம் தேதி முதல் 5 – 7% வரை கட்டணம் உயர்கிறது. இதனால், ஏற்கனவே இருக்கும் கட்டணத்தை விட சுமார் ரூ.5 முதல் ரூ.150 வரை கூடுதலாக செலுத்த வேண்டியது வரும். வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதற்கு, லாரி உரிமையாளர்கள், வாகன ஓட்டிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு அரசை பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி மாபெரும் கோரிக்கை பேரணி 29.08.2024 அன்று காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. விழுப்புரம் நான்கு முனை சந்திப்பு இருந்து புதிய பேருந்து நிலையம் அருகில் நகராட்சி திடல், வரை நடைபெறுகிறது. இந்நிகழ்வில் விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் துவக்கி வைக்கிறார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (CPM) இராமமூர்த்தி சிறப்புரையாற்றுகிறார்.
தற்போது வளர்ந்து வரும் நவீன காலத்தில் பலரும் காடுகளையும் மரங்களையும் அழித்து வரும் நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த சசிகுமார் என்பவர் தனி ஆளாக ஒரு வனத்தை உருவாக்கியுள்ளார். பானாம்பட்டு ஏரி பகுதியில் சுமார் 400 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு அவற்றை தொடர்ந்து பராமரித்து பெரும் வனத்தையே உருவாக்கியுள்ளார். இவரது இச்செயல் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (26.08.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர உதவிக்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் – புதுச்சேரி சாலை ரயில்வே மேம்பாலம் 2 நாட்களுக்கு மூடப்படுகிறது. அதாவது ஆக.31 மற்றும் செப்.2 ஆகிய தேதிகளில் மூடப்படவுள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மேம்பாலம் மூடப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. எனவே வழக்கமாக மேம்பாலத்தை பயன்படுத்தும் மக்கள் குறிப்பிட்ட தேதிகளில் மாற்று பாதைகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது
விழுப்புரம் மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம் வரும் செவ்வாய்கிழமை (27.08.2024) நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முகாம் நடைபெறும் இடங்கள்: திருவெண்ணெய்நல்லுார் ஒன்றியம் பொய்கைஅரசூர் ஊராட்சி, காணை ஒன்றியம் கருவாட்சி ஊராட்சி, மரக்காணம் ஒன்றியம் சிங்கனூர் ஊராட்சி, வானுார் ஒன்றியம் கழுப்பெரும்பாக்கம் ஊராட்சி மற்றும் விக்கிரவாண்டி ஒன்றியம் நகர் ஊராட்சி.
தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் ஆவணங்களை தயாரித்து வழங்குவதற்கான ஆவண எழுத்தர் உரிமம் வழங்குவதற்கான தேர்வுகள் 1998-ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 26 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. தமிழ்நாட்டில் 26 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆவண எழுத்தர் உரிமத் தேர்வை வயதுவரம்பு இல்லாமல் உடனடியாக அரசு நடத்த வேண்டும் என பா.ம.க. நிறுவனர் இராமதாசு வலியுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.