Villupuram

News August 28, 2024

தைலாபுரம் தோட்டத்தில் பாமக கலந்தாய்வு கூட்டம்

image

விழுப்புரம் கிழக்கு மாவட்டம் திண்டிவனம் மற்றும் வானூர் சட்டமன்ற தொகுதியின் 2026 சட்டமன்ற தேர்தலின் வெற்றி செயல் திட்டத்திற்கான கலந்தாய்வு கூட்டம் இன்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் முன்னிலையில் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன், மாவட்ட செயலாளர் சர்வம் ஜெயராஜ் உள்ளிட்ட மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

News August 28, 2024

விழுப்புரம் அருகே நாளை மின் தடை 

image

அரசூர் துணை மின் நிலையத்தில் எதிர்வரும் பருவ மழை முன்னிட்டு பராமரிப்பு பணியால் நாளை காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை அரசூர், ஆனத்துர் , சேமங்கலம், T. குமாரமங்கலம், பேரங்கியூர், இருவேல்பட்டு, மாமந்தூர்,ஆலங்குப்பம், தென்மங்கலம், கரடிப்பாக்கம் , மேலமங்கலம், மாதம்பட்டு, இருந்தை, அரும்பட்டு , மேட்டத்தூர் காரப்பட்டு செம்மார் , கிராமம், வி, பி, நல்லூர் ஆகிய பகுதிகளில் மின் தடை ஏற்படும்.

News August 28, 2024

விழுப்புரத்தில் சாலை மறியல்: 350 பேர் கைது

image

அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சார்பில், ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று விழுப்புரம் – திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள புதிய பேருந்து நிலையம் மற்றும் எல்லீஸ்சத்திரம் அருகே சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், போக்குவரத்திற்கு இடையூறாக சாலை மறியலில் ஈடுபட்ட 350 பேரை போலீசார் கைது செய்தனர்.

News August 28, 2024

30ஆம் தேதி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

image

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வரும் 30ஆம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்நடைபெற உளள்து. மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையிலான இந்தக் கூட்டத்தில், அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயப்பெருமக்கள் பங்கேற்று விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை மனுவாக கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. ஷேர் பண்ணுங்க.

News August 28, 2024

திண்டிவனம் அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவி பலி

image

திண்டிவனம் அருகே உள்ள ஏரியில் மூழ்கி, பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டிவனம் அடுத்த மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல் மகள் தேவஸ்ரீ(11). இவர், வைலாமூரில் அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை மணியளவில் அவரது தம்பிகளுடன் குளிக்கச் சென்ற அவர், நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து, போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News August 28, 2024

விழுப்புரத்தில் இடியுடன் கூடிய கனமழை

image

விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. குறிப்பாக, கோலியனூர், பிடாகம், சிந்தாமணி, அகரம், உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும், சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. எனவே, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பணிக்கு செல்வோர் குடையுடன் செல்லுங்கள்.

News August 28, 2024

முண்டியம்பாக்கம் GHயில் ஒரே இரவில் 11 செல்போன்கள் திருட்டு

image

விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பகுதியில் இரவில் வெளியில் படுத்து உறங்குபவர்களிடம் நேற்று ஒருநாள் இரவில் மட்டும் 11 தொலைபேசிகள் திருடப்பட்டுள்ளது. தொலைபேசியை பறிகொடுத்தவர்கள் எல்லோரும் புகார் கொடுக்க வாய்ப்பு குறைவு எனவே காவல்துறை சார்பில் ஒரு புகார் பெட்டி வைக்க நடவடிக்கை எடுத்தால் உதவியாக இருக்கும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News August 27, 2024

மக்களிடம் முதல்வர் திட்டம் நடைபெறும் இடங்கள்

image

மக்களுடன் முதல்வர் திட்டம் வருகின்ற புதன்கிழமை (28.08.2024) அன்று கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில், கண்டமங்கலம் ஊராட்சியிலும், முகையூர் ஊராட்சி ஒன்றியத்தில் பையூர் ஊராட்சியிலும், ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் பட்டணம் ஊராட்சியிலும், மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒமந்துார் ஊராட்சியிலும், கோலியனுார் ஊராட்சி ஒன்றியத்தில் தென்னமாதேவி ஊராட்சியிலும், நடைபெற உள்ளது.

News August 27, 2024

சிறுமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர்

image

மாம்பாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த தேவிஸ்ரீ என்னும் 10 வயது சிறுமி ஏரியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த செய்தியை அறிந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் சிறுமியின் வீட்டிற்கு நேரில் சென்று சிறுமியின் பூத உடலுக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன், குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். இதில், மாவட்ட, ஒன்றிய பொறுப்பாளர், செயலாளர்கள், கவுன்சிலர்கள் என பலர் உடனிருந்தனர்.

News August 27, 2024

பழங்கால சிற்பத்தை பாதுகாக்க வேண்டும்

image

விழுப்புரம் மாவட்டம் ஆனாங்கூர் கிராமத்தில், திறந்த வெளியில் மிகப்பழங்கால முருகன் சிற்பம், பராமரிப்பின்றி சிதைந்து வருவதாக தகவல் கிடைத்தது. இந்தத் தகவலையடுத்து, விழுப்புரம் வரலாற்று ஆர்வலர் குழுவினர் அதனை நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது, அதனை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்திய அவர்கள், இந்தச் சிற்பம் முற்கால பல்லவர் காலத்தை (கி.பி.6-7ஆம் நூற்றாண்டு) சேர்ந்ததாகும்” என்றனர்.

error: Content is protected !!