India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகில் மாநில மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், வி.சாலையில் இன்று மாலை த.வெ.க. மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் நிறுத்தக்கூடிய இடத்தினை, விழுப்புரம் உதவி கண்காணிப்பாளர் ரவீந்திரகுமார் குப்தா, விக்கிரவாண்டி டி.எஸ்.பி நந்தகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மரகதபுரத்தைச் சேர்ந்தவர் கோபு (18). இவர், அதேப் பகுதியை சேர்ந்த தனது நண்பருடன் பைக்கில் சென்றுள்ளார். திருப்பசாவடிமேடு அருகே கார் மீது பைக் மோதியதில் கோபு படுகாயமடைந்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த மக்கள், திருப்பச்சாவடிமேடு பகுதியில் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் பேச்சு வார்த்தைக்கு பின் மறியலை கைவிட்டனர்.
விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில், மாவட்டத்தில் இன்று (அக்.12) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட காவல் அதிகாரியை அழைக்கலாம். அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் குறித்த விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் காணலாம். ஷேர் பண்ணுங்க.
கவரப்பேட்டை ரயில் விபத்து குறித்து, விழுப்புரம் எம்.பி. சு.வெங்கடேசன் தனது X பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். “6 நாட்களுக்கு ஒரு விபத்து நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு விபத்தின்போதும் நடைபெறுவது ஆய்வுகள் மட்டுமே. ஆய்வின் முடிவுகளைக் கொண்டு தீர்வுகளை உருவாக்குவது எப்போது? பதட்டத்தை நோக்கி தள்ளும் சூழலில் இருந்து மீள ரயில்வே துறை என்ன தான் செய்யப்போகிறது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக அரசைக் கண்டித்து, பாமக சார்பில் வரும் 20ஆம் தேதி மாலை திண்டிவனத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றுகின்றனர். இந்தக் கூட்டத்தில், பாமக மற்றும் அதன் சார்பு இணை அமைப்புகளின் அனைத்து நிலை நிர்வாகிகளும், பொதுமக்களும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட பஞ்சமி நிலங்களின் விவரங்களை அரசு அமைத்த உயர்நிலைக்குழு வெளியிட வேண்டும் என விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த அறிக்கையில், தமிழ்நாடு அரசு அமைத்த உயர்நிலைக்குழு, எந்தெந்த மாவட்டத்தில் எவ்வளவு பஞ்சமி நிலம் அடையாளம் காணப்பட்டுள்ளது என்ற விவரத்தை வெளியிடவேண்டும். அந்த நிலங்களைக் கையகப்படுத்தி தகுதியானவருக்கு தர வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் 15ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட முழுவதும் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்தது. பின்னர், மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து, விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், திண்டிவனம், மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் பணிபுரிய, ஒரு மாவட்ட வள பயிற்றுநர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். சமூகவியல், சமூகப்பணி போன்றவற்றில் முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்று, குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். 30 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஒரு இளங்கலை பட்டம் பெற்று இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
திண்டிவனம் அரசு மருத்துவமனை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக குறுகிய இடத்தில் போதுமான கட்டமைப்பு வசதியின்றி செயல்பட்டு வந்தது. தமிழக அரசின் மருத்துவ மேம்பாட்டு திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு, பிப்ரவரி 5ஆம் தேதி திண்டிவனம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து ரூ.60 கோடி செலவில் மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டும் பணி ஜோராக நடைபெற்று வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (அக்.11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
Sorry, no posts matched your criteria.