India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (19.08.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
“மக்களுடன் முதல்வர்” திட்டம் முகாம் நாளை (20.08.2024) வானூர் ஊராட்சி ஒன்றியத்தில் திருச்சிற்றம்பலம் ஊராட்சியிலும், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில் முட்ராம்பட்டு ஊராட்சியிலும், மயிலம் ஊராட்சி ஒன்றியத்தில் தீவனூர் ஊராட்சியிலும், மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்தில் நடுக்குப்பம் ஊராட்சியிலும் நடைபெறவுள்ளது.
திண்டிவனம் அடுத்த சிங்கனூர் கிராமத்தில் நேற்று கனகராஜ் என்பவர் இறந்ததை அடுத்து இன்று அவருக்கு (ஆகஸ்ட் 19) இறுதி ஊர்வலம் நடந்துள்ளது. இந்த ஊர்வலத்தின் போது ஆறுமுகம் (51) என்பவர் பட்டாசு வெடித்துள்ளார். அப்போது அவருடைய கையிலேயே பட்டாசு வெடித்து வலது கை விரல்கள் சிதறியுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக ஆக. 29ஆம் தேதி முதல் செப். 2ஆம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. புதுச்சேரி-விழுப்புரம் இடையேயான மெமு ரயில் இரு வழித்தடங்களிலும் செப். 1ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திருவாரூ- விழுப்புரம் செல்லும் ரயில்(06690) செப். 1 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் 808 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி அவர்கள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். உடன் துணை ஆட்சியர் அளவிலான மாவட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி அவர்கள், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை இன்று (19.08.2024) பெற்றுக்கொண்டார். உடன் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) முகுந்தன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவக்கொழுந்து உட்பட பலர் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்களை மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி இன்று (19.08.2024) வழங்கினார். உடன் தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) முகுந்தன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேலு உட்பட பலர் உள்ளனர்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் மு. பரமேஸ்வரி மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்களை இன்று (ஆகஸ்ட் 19) பெற்றுக் கொண்டார். உடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கவேல் உள்ளிட்டோர் இருந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இயங்கும் போதை மீட்பு மையத்தில் உள்ள 1.Counsellor /Psychologist – 1, 2.Psychiatric Social worker – 1, 3.Staff Nurse – 1 ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணி புரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த மாதத்திற்குள் (31-08-2024) விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவெண்ணெய்நல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2024 – 2025ஆம் ஆண்டு முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு மாணவர்களின் தரவரிசை பட்டியல் விவரங்கள் கல்லூரியின் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. இளநிலை அனைத்து பாடப்பிரிவுகள் மற்றும் முதுநிலை அறிவியல் மற்றும் கலை பாடப்பிரிவுகளுக்கான சிறப்பு கலந்தாய்வு நாளை (20.08.2024) காலை 10 மணியளவில் நடைபெறுகிறது என கல்லூரி முதல்வர் இந்திரா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.