Villupuram

News October 2, 2024

காந்தி ஜெயந்தி: மதுபான கடைகள் இயங்காது

image

தமிழ்நாடு மதுபான சில்லரை வணிக விதிகள் மற்றும் அரசாணையின்படி, காந்தி ஜெயந்தியன்று அனைத்து அரசு டாஸ்மாக் மதுக்கடைகள், தனியார் மதுபானக் கடைகள், மதுபானக்கூடங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டுமென நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே, காந்தி ஜெயந்தியையொட்டி இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபானக் கடைகள், அரசு டாஸ்மாக் மதுபானக்கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக்கடைகள் இயங்காது.

News October 2, 2024

த.வெ.க. முதல் மாநாடுக்கு பூமி பூஜை

image

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், வரும் 4ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 4:30 மணி முதல் 6 மணி வரை மாநாட்டுக்கான பூமி பூஜை நடைபெற உள்ளது என்ற அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பூமி பூஜைக்கு, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில, மாவட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

News October 2, 2024

டேக்வாண்டோ: பதக்கங்களை வென்ற விழுப்புரம் மாணவிகள்

image

கோவாவில் நடைபெற்ற உலக அளவிலான டேக்வாண்டோ விளையாட்டு போட்டியில், 7 நாடுகள் கலந்து கொண்டன. இந்தப் போட்டியில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றனர். சொந்த ஊர் திரும்பிய அவர்களை, பொதுமக்கள் வரவேற்று வாழ்த்தினர். இப்போட்டிக்கு உறுதுணையாக இருந்த பயிற்சியாளர்கள் பாலகணேசன், ஜெகதீஸ்வரன், வேல்முருகன் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்தனர்.

News October 2, 2024

1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த தவ்வைச் சிற்பம் கண்டெடுப்பு

image

செஞ்சி அடுத்த அப்பம்பட்டு கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர்கள் நேற்று கள ஆய்வு செய்து பல்லவர் கால 1,200 ஆண்டுகள் பழமைவாய்ந்த தவ்வைச் சிற்பம் இருப்பதை கண்டறிந்தனர். அது, மூத்ததேவி என அழைக்கப்படும் தவ்வை சிற்பம். இந்த சிற்பத்தை வடமொழியில் ஜேஷ்டா என அழைக்கின்றனர். திண்டின் மீது 2 கால்களையும் தொங்கவிட்ட நிலையில், வலது கரம் அபய முத்திரையுடனும் இடது கரம் செல்வக்குடத்தின் மீதும் வைத்திருப்பது போன்று உள்ளது.

News October 1, 2024

தொழிலாளி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை

image

மயிலம், வெளியனூரை சேர்ந்த முருகன் என்பவரது மனைவி பாக்கியலட்சுமி கலியமூர்த்தி என்பவருடன் திருமணம் தாண்டிய உறவில் இருந்து வந்துள்ளார். இதற்கு தடையாக இருந்த முருகனை கலியமூர்த்தி, சங்கர், பாக்கியலட்சுமி மூவரும் சேர்ந்து கொலை செய்தனர். இவ்வழக்கு விழுப்புரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி, கலியமூர்த்திக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

News October 1, 2024

விழுப்புரம் மின்சார ரயில் இரண்டு நாட்கள் ரத்து

image

இரயில்வே பராமரிப்பு பணிகள் காரணமாக விழுப்புரம் – புதுச்சேரி மின்சார ரயிலும், புதுச்சேரி – விழுப்புரம் மின்சார ரயிலும் வருகின்ற அக்-7 மற்றும் 9-ஆம் தேதிகளில் முற்றிலுமாக ரத்து செய்யப்படவுள்ளது. மேலும் விழுப்புரம்-திருவண்ணாமலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் அக் 6-ஆம் தேதியும், திருவண்ணாமலை-விழுப்புரம் சிறப்பு ரயில் அக் 7-ஆம் தேதியும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News October 1, 2024

மயிலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம்

image

மயிலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயல்வீரர்கள் கூட்டம் மாநிலங்களவை உறுப்பினர் C.Ve.சண்முகம் தலைமையில்,   அக்டோபர் 06-ஆம் தேதி ஞாயிற்று கிழமை, மாலை 3 மணிக்கு நடைபெறவுள்ளது. மயிலம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் R. விஜயன் முன்னிலையில், தீவனூர் GJ திருமண மண்டபத்தில், நடைபெற உள்ள இக்கூட்டத்தில், மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், கிளைக் கழக தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

News October 1, 2024

விவசாயி தற்கொலை: 19 பேர் மீது வழக்கு

image

மேல்மலையனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், விவசாயி மோகன்ராஜ் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். மோகன்ராஜின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, உறவினர்கள் வளத்தி காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, மோகன்ராஜின் தற்கொலைக்கு காரணமான 19 பேர் மீது நேற்று வளத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 1, 2024

ரயில்வே மேம்பாலத்தை விரைந்து முடிக்க ஆர்ப்பாட்டம்

image

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ரயில்வே மேம்பாலத்தை விரைவாக முடிக்க கோரி, அதிமுக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைந்த கண்டமங்கலம் அதிமுக ஒன்றியம் சார்பில் நடைபெற்ற இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வானூர் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் மு.சக்கரபாணி கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில், ஏராளமான அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

News October 1, 2024

விழுப்புரத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்

image

விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அக்.05 ஆம் தேதி அன்று காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. என ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

error: Content is protected !!