Villupuram

News October 3, 2024

தவெக மாநாட்டு பூமி பூஜையில் விஜய் பங்கேற்க வாய்ப்பு

image

தமிழக வெற்றிக் கழகம் சார்பில், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் வரும் 27ஆம் தேதி மாநில மாநாடு நடைபெறு உள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நாளை பந்தல் அமைக்கும் பணி தொடங்க இருப்பதால், காலை 4 மணி முதல் 6 மணி வரை பந்தக்கால் நடும் விழா நடைபெற உள்ளது. இதில், புஸ்ஸி ஆனந்து கலந்து கொள்ள உள்ள நிலையில், நடிகர் விஜய்யும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News October 3, 2024

விழுப்புரம் வடக்கு மாவட்ட நாத.க. செயலாளர் விலகல்

image

விழுப்புரம் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் செயலாளர் பொறுப்பில் இருந்து சுகுமாரன் விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கட்சியின் பல்வேறு பணிகளை தான் செய்து வந்ததாகவும், கட்சி போட்டியிட்ட எல்லா தேர்தலிலும் சிறப்பாக பணியாற்றியதாகவும் கூறியுள்ளார். ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் தான் தோன்றித்தனமாக சீமானின் பேச்சு வருத்தம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

News October 3, 2024

சொத்துவரி செலுத்துவோருக்கு ஊக்கத்தொகை: ஆணையர்

image

விழுப்புரம் நகராட்சிக்கு (2024-25) 2ஆம் அரையாண்டுக்கு சொத்து வரியை வரும் 31ஆம் தேதிக்குள் செலுத்துவோருக்கு 5% ஊக்கத்தொகை வழங்கப்படும். சனிக்கிழமை உட்பட காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பழைய, புதிய நகராட்சி இடத்தில் கணினி வசூல் மையங்கள் செயல்படும். மேலும், tnurbanepay.tn.gov.in என்ற இணைய முகவரி மூலமாகவும் சொத்துவரி செலுத்தலாம் என நகராட்சி ஆணையர் முத்துக்குமார் தகவல் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News October 3, 2024

விழுப்புரம் கடை வீதிகளில் கொலு பொம்மை விற்பனை

image

நவராத்திரி பண்டிகையையொட்டி, விழுப்புரம் கடை வீதிகளில் கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. உருவ பொம்மைகளான விநாயகர், விஷ்ணு, துர்க்கை, அம்மன், மீனாட்சி, முருகன், ஆஞ்சநேயர் மற்றும் குழந்தைகளை கவரும் வகையில் பல்வேறு கார்ட்டூன் பொம்மைகளும் பல வண்ணங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. இதனை பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். நீங்களும் உங்கள் வீட்டில் கொலு வைப்பீர்களா?

News October 3, 2024

விழுப்புரத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

விழுப்புரம் அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வரும் அக்.5ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த நபர்கள் பங்குபெற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு, 94990 55906, 90805 15682, 7010827725 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News October 3, 2024

300 சவரன் கொள்ளை: 2 பேர் கைது

image

சிவகங்கை மாவட்டம் மதகுபட்டியில், பாண்டித்துரை என்பவரின் நகை கடையில் 300 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் 8ஆம் தேதி நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 4 மாதங்களாக 5 தனிப்படை போலீசார் கொள்ளையர்கள் 7 பேரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இந்நிலையில், விழுப்புரத்தைச் சேர்ந்த பழனி மற்றும் வேலாயுதம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

News October 3, 2024

விழுப்புரம் சம்பவம் அதிமுக பொதுச் செயலாளர் கண்டனம்

image

விழுப்புரத்தில் பழங்குடி சமூகத்தை சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரை நாற்காலியில் அமர விடாமல் திமுகவினர் அவமரியாதை செய்யப்பட்டதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் சமூகநீதி என்று பேசிக்கொண்டே சமூக அநீதியை இழைத்திடும் திமுக ஆட்சியின் அலங்கோலங்கள் நாள்தோறும் தொடர்கதையாகி வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News October 2, 2024

ஆனாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் தர்ணா

image

செஞ்சி அடுத்த ஆனாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா இன்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு துணை ஊராட்சி மன்ற தலைவர் தன்னைத் தொடர்ந்து சாதிய வன்கொடுமை செய்வதாக கூறி தர்ணாவில் ஈடுபட்டார். இதனை கண்டித்து முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது சமூக வலைத்தளத்தில் பட்டியலின மக்களை கிள்ளுக்கீரையாக நடத்தும் அவல நிலை திமுக ஆட்சியில் தொடர்கதையாகி வருகிறது என கண்டனம் தெரிவித்துள்ளார்.

News October 2, 2024

திருவண்ணாமலை விழுப்புரம் முன்பதிவில்லா ரயில் ரத்து

image

விழுப்புரத்தில் இருந்து புறப்பட்டு திருவண்ணாமலை செல்லும் முன்பதிவில்லா சிறப்பு இரயில் வருகிற 6-ந் தேதியும், திருவண்ணாமலையில் இருந்து புறப்பட்டு விழுப்புரம் வரும் முன்பதிவில்லா சிறப்பு ரெயில் 7-ந் தேதியும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. திருச்சி கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. ஷேர் செய்யவும்

News October 2, 2024

பாமக நிறுவனரை சந்தித்த மேட்டூர் எம்எல்ஏ

image

மகாத்மா காந்தி ஜெயந்தி நாளில், திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களை, சேலம் மேற்கு பாமக மாவட்ட செயலாளரும் மேட்டூர் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.சதாசிவம் சந்தித்து வாழ்த்துகள் பெற்றார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!