Villupuram

News October 30, 2024

நவ.3ஆம் தேதி கிரிக்கெட் அணி தேர்வு

image

விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 40 வயதுக்கு உள்பட்டோருக்கான கிரிக்கெட் அணி தேர்வு, விக்கிரவாண்டி சூர்யா கல்லூரியில் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறுகிறது. இதில், பங்கேற்க விரும்புவர்கள் பிறப்புச் சான்று, ஆதார் அடையாள அட்டை சமர்ப்பிக்க வேண்டும் என விழுப்புரம் மாவட்ட கிரிக்கெட் சங்க இணைச்செயலாளர் ரமணன் தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு 80958 99655, 95550 30006 தொடர்பு கொள்ளலாம்.

News October 30, 2024

விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார் கலெக்டர்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், ‘2024 – ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரத்தை’ முன்னிட்டு ஊழல் மற்றும் லஞ்சத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணி இன்று தொடங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் பழனி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் அரசு பள்ளி மாணவிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர். இதில், லஞ்ச ஒழிப்பு காவல் துணை கண்காணிப்பாளர்,காவல் ஆய்வாளர் உட்பட பலர் இருந்தனர்.

News October 30, 2024

அமாவாசை, பௌர்ணமி விழா ஏற்பாடுகள்

image

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் அமாவாசை விழா, திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோயில் பௌர்ணமி திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இக்கூட்டத்திற்கு, கலெக்டர் பழனி தலைமை தாங்கி பேசினார். மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் வரும் 2ஆம் தேதி அன்று அமாவாசை திருவிழாவும், 15ஆம் தேதி திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோவில் பௌர்ணமி விழா நடைபெறும்.

News October 30, 2024

விழுப்புரத்திற்கு வரும் உதயநிதி: எதற்கு தெரியுமா?

image

துணை முதல்வர் உதயநிதி, விழுப்புரம் மாவட்டத்திகு வருகை தர உள்ளார். 2 நாட்கள், நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். திருவெண்ணைநல்லூரில் முன்னாள் திமுக தலைவர் கலைஞர் உருவச் சிலையை திறந்து வைக்கிறார். அதற்கு அடுத்து விழுப்புரத்தில் ஒரு நூலகத்தை திறந்து வைக்கிறார். அதனைத் தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகளை விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செய்து வருகிறது.

News October 30, 2024

வீட்டில் வெடிபொருள் பதுக்கிய இருவர் கைது

image

மயிலம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மணி மகன் கணேசன் என்பவர் தனது வீட்டில் அனுமதியின்றி வெடிபொருட்கள் வைத்திருப்பதாக மயிலம் போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் அவரது வீட்டில் நேற்று மேற்கொண்ட சோதனையில் 6,380 நாட்டு வெடிகள், 330 வானவெடிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, போலீசார் கணேசனையும், அவரது தந்தை மணியையும் (59) கைது செய்தனர்.

News October 30, 2024

விழுப்புரத்தில் பெண் வாக்காளர்கள் அதிகம்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், நேற்று அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. ஆட்சியர் பழனி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பிறகு, இந்தப் பட்டியலின்படி மாவட்டத்தில் 8,34,285 ஆண் வாக்காளர்கள், 8,57,251 பெண் வாக்காளர்கள், 223 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தமாக 16,91,759 வாக்காளர்கள் உள்ளனர் என தெரிவித்தார். இதில், பெண் வாக்காளர்களே அதிகம்.

News October 30, 2024

விழுப்புரம் வழியாக மானாமதுரைக்கு சிறப்பு ரயில்

image

தீபாவளியை முன்னிட்டு, தாம்பரத்தில் இருந்து மானாமதுரைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து இன்று (அக்.30) மாலை 5 மணிக்கு புறப்பட்டு நாளை காலை 3.45 மணிக்கு மானாமதுரை வந்து சேரும். மானாமதுரையில் இருந்து நாளை (அக்.31) காலை 11.45 மணிக்கு புறப்பட்டு இரவு 11.45 மணிக்கு தாம்பரம் சென்றடையும். விழுப்புரம், கடலூர் வழியாக இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க

News October 30, 2024

தீபாவளி பண்டிக்கைக்கு விலையில்லா வேட்டி, சேலை

image

விழுப்புரம் மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் முதியோர் மற்றும் இதர உதவித்தொகைபெறும் 61,69,691 பயனாளிகளுக்கு இந்த ஆண்டுக்கான தீபாவளி பண்டிக்கைக்கு உரிய விலையில்லா வேட்டி, சேலை சம்மந்தப்பட்ட நியாயவிலைகடை மூலம் வழங்கப்படுகிறது. எனவே, பயனாளிகள் சம்மந்தப்பட்ட நியாயவிலைக்கடை அல்லது கிராம நிர்வாக அலுவலகத்தில் பெற்றுகொள்ளலாம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News October 30, 2024

மாநாடு அன்று டாஸ்மாக்கில் விற்பனை அமோகம்

image

தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற்ற 27ஆம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு மதுபானக்கடைகளில் மொத்தமாக 5 கோடியே 75 லட்சத்து 76 ஆயிரத்து 830 ரூபாய்க்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது. மாநாடு நடைபெற்ற அன்றைய தினம் மட்டும் 1 கோடியே 63 லட்சத்து 2 ஆயிரத்து 190 ரூபாய்க்கு மது கூடுதலாக விற்பனை ஆகியுள்ளது.

News October 30, 2024

விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (29.10.2024) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.