India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் மாவட்டம் ஆனங்கூர் ஊராட்சி மன்றத் தலைவர் சங்கீதா, நேற்று முன்தினம் (அக்.2) சாதிய பாகுபாடு இருப்பதாகக் கூறி கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து விழுப்புரத்தில் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பழனி ஆனாங்கூரில் சாதிய பாகுபாடு இன்றி சமத்துவத்துடன் ஊராட்சி நிர்வாகம் நடப்பதாக விளக்கம் அளித்து நேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில், மணம்பூண்டியில் 6 சென்டி மீட்டர் மழையும், விழுப்புரம் நகரில் 5 சென்டி மீட்டர் மழையும், முண்டியம்பாக்கம், செம்மேடு, அனந்தபுரம் உள்ளிட்ட இடங்களில் தலா 2 சென்டி மீட்டர் மழையும், கோலியனூர், வல்லம், வளவனூர், நேமூர் ஆகிய இடங்களில் தலா ஒரு சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஷேர் பண்ணுங்க
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதம் ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், பல்வேறு திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெறுபவர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பிக்க இயலாது. எனவே, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழறிஞர்கள் ஆட்சியரகத்திலுள்ள தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாக பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் பழனி அறிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க
விழுப்புரம் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்கு பட்டாசு விற்பனை செய்வதற்கு தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விருப்பமுள்ளவர்கள் அரசு பொது இசேவை மையத்தில் உரிய ஆவணங்களுடன் சென்று இணைய வழியில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. அரசு உத்தரவின்படி தற்காலிக பட்டாசு உரிமம் அரசு பொது இசேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரர்கள் தொழில் தொடங்க ஒரு கோடி ரூபாய் வரை வங்கி கடன் பெற வழிவகை சுயதொழில் செய்ய விரும்பும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் படைப்பணியின் போது மரணமடைந்த படைவீரர்களின் கைம்பெண்கள் உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நலஅலுவலகம் விழுப்புரம் அவர்களை 10.10.2024க்குள் அணுகி பயன் அடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.
காந்தி ஜெயந்தியையொட்டி, தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த 114 நிறுவனங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் மீனாட்சி தலைமையிலான குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதில், 64 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டதால், அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விழுப்புரம் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தின் மழைப்பொழிவு: விழுப்புரம் 53 மில்லி மீட்டர், கோலியனூர் 10 மில்லி மீட்டர், வளவனூர் 9 மில்லி மீட்டர், முண்டியம்பாக்கம் 23 மில்லி மீட்டர், நேமூர் 9 மில்லி மீட்டர், கஞ்சனூர் 5 மில்லி மீட்டர், செஞ்சி 3 மில்லி மீட்டர், செம்மேடு 23 மில்லி மீட்டர், வல்லம் 10 மில்லி மீட்டர், அனந்தபுரம் 20 மில்லி மீட்டர், மனம்பூண்டி 63 மில்லி மீட்டர் என சராசரியாக 11 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியம் சார்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறப்பு விற்பனை அங்காடியை நேற்று ஆட்சியர் தொடங்கி வைத்தார். பின்னர், கடந்த ஆண்டு கதர் விற்பனை இலக்கு 60 லட்சமாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், நிகழாண்டு 78 லட்சம் இலக்காக நிர்ணயிக்கப்பட்டார். மேலும், கதர், பாலியஸ்டர், பட்டு புடவை ரகங்களுக்கு 30% தள்ளுபடி வழங்கப்படுகிறது எனக் கூறினார்.
தமிழக வெற்றிக் கழகம் சார்பில், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் வரும் 27ஆம் தேதி மாநில மாநாடு நடைபெறு உள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நாளை பந்தல் அமைக்கும் பணி தொடங்க இருப்பதால், காலை 4 மணி முதல் 6 மணி வரை பந்தக்கால் நடும் விழா நடைபெற உள்ளது. இதில், புஸ்ஸி ஆனந்து கலந்து கொள்ள உள்ள நிலையில், நடிகர் விஜய்யும் பங்கேற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விழுப்புரம் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் செயலாளர் பொறுப்பில் இருந்து சுகுமாரன் விலகுவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கட்சியின் பல்வேறு பணிகளை தான் செய்து வந்ததாகவும், கட்சி போட்டியிட்ட எல்லா தேர்தலிலும் சிறப்பாக பணியாற்றியதாகவும் கூறியுள்ளார். ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்கிற முறையில் தான் தோன்றித்தனமாக சீமானின் பேச்சு வருத்தம் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.