Villupuram

News October 5, 2024

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

image

செஞ்சி வேலந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அலாவுதீன் இருவரும், குறைந்த விலைக்கு தங்கம் தருவதாகக் கூறி இப்ராஹிம் என்பவரை ஏமாற்றியுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் இருவரையும் கைது செய்த நிலையில், இவர்களது தொடர் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி. பரிந்துரையின் பெயரில், ஆட்சியர் பழனி உத்தரவின்படி போலீசார் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

News October 5, 2024

ஆரோவில்லுக்கு வந்த வெளிநாட்டு தூதர்கள்

image

விழுப்புரம் மாவட்டம் வானூர் அடுத்த ஆரோவில் பகுதியிலுள்ள சர்வதேச நகரத்துக்கு பல்வேறு நாடுகளின் தூதர்கள், உயர்நிலை ஆணையர்கள் நேற்று வந்தனர். அனைவரையும் வரவேற்ற ஆரோவில் அறக்கட்டளையின் துணைச் செயலரும், இயக்குநருமான சுவர்ணாம்பிகா, ஆரோவில்லின் செயல்பாடுகள் குறித்தும், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார். தொடர்ந்து, அனைவரும் மாத்திா்மந்திா் தியானத்தில் பங்கேற்றனா்.

News October 5, 2024

சென்னை – தூத்துக்குடி ஆயுத பூஜை சிறப்பு ரயில்

image

சென்னை – தூத்துக்குடி இடையே, ஆயுத பூஜை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. வரும் 8ஆம் தேதி (செவ்வாய்) இரவு 11:45 மணிக்கு, சென்னை சென்ட்ரலில் இருந்து (06186) புறப்பட்டு விழுப்புரம், தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை வழியாக தூத்துக்குடிக்கு மறுநாள் மதியம் 12:30 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கமாக, 9ஆம் தேதி (புதன்கிழமை) மதியம் 3:30 தூத்துக்குடியில் புறப்பட்டு சென்னைக்கு மறுநாள் காலை 5:55க்கு சென்றடையும்.

News October 5, 2024

விழுப்புரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை

image

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று மாலை கனமழை கொட்டித் தீர்த்தது. விக்கிரவாண்டி, பொன்னங்குப்பம், செஞ்சி, காந்தி பஜார், தேசூர்பேட்டை, பீரங்கிமேடு, மேலச்சேரி, ஈச்சூர், ஈயக்குனம், நெகனூர் புதூர், தேசூர், சொக்கநந்தல், கெங்கவரம், அப்பம்பட்டு, பாடிபள்ளம், பெரியமூர், பங்களாபேட்டை, தேவதனாம்பெட்டை, பள்ளியம்பட்டு, சேரானூர், சிட்டாம்பூண்டி, மீனம்பூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்தது. உங்க ஏரியாவில்?

News October 5, 2024

அரசு மருத்துவக் கல்லூரியில் இடஒதுக்கீட்டில் வேலை

image

அரசு மருத்துவக் கல்லூரியில் 7.5% இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளிகளில் பயின்ற 6 மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ மாணவராக சேர வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர்களுக்கான சேர்க்கை ஆணைகள் நேற்று (வெள்ளிக்கிழமை) வழங்கப்பட்டன. அரசுப் பள்ளிகளில் +2 பயின்று, நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலை மருத்துவப்படிப்புக்கு இடம் வழங்கப்படுகிறது.

News October 5, 2024

திருச்சி தாம்பரம் சிறப்பு ரயில் விழுப்புரம் வழியாக

image

வண்டி எண்கள்: 06190 மற்றும் 06191 திருச்சிராப்பள்ளி – தாம்பரம் அதி விரைவாகவும், தாம்பரம் – திருச்சிராப்பள்ளி விரைவு வண்டியாகவும் இயங்கும் சிறப்பு ரயில். வரும் 11/10/2024 முதல் 31/12/2024 வரை, வாரந்தோறும் திங்கள், வியாழன் தவிர்த்து ஏனைய ஐந்து நாட்களில் செவ்வாய்,புதன்,வெள்ளி,சனி, ஞாயிற்று கிழமைகளில் இயங்கும். இது தஞ்சாவூர்
கும்பகோணம்,சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர்,
விழுப்புரம் வழியாக செல்லும்

News October 4, 2024

தாம்பரம் – கொச்சுவேலி சிறப்பு ரயில்

image

தாம்பரம் – கொச்சுவேலி சிறப்பு ரயில் (06035) அக்.11ஆம் தேதி முதல் டிச.27ஆம் தேதி வரை (வெள்ளிதோறும்) இரவு 7.30 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு காலை 11.30 மணிக்கு கொச்சுவேலிக்கு செல்லும். மறுமார்க்கமாக, அக்.13ஆம் தேதி முதல் டிச.29ஆம் தேதி வரை கொச்சுவேலி – தாம்பரம் (06036) சிறப்பு ரயில் ஞாயிறுதோறும் மதியம் 3:25க்கு புறப்பட்டு 4:50 க்கு சென்னை வந்தடையும். ஷேர் பண்ணுங்க

News October 4, 2024

பேருந்தில் வழி அனுப்பிவைத்த மாவட்ட ஆட்சியர்

image

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில், மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் அண்மையில் நடைபெற்று வந்தன. இதில், வெற்றி பெற்றவர்கள் சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வதற்காக இன்று புறப்பட்டனர். அவர்களை, மாவட்ட ஆட்சியர் சி.பழனி, வழி அனுப்பி வைத்தார்.

News October 4, 2024

அதிகாரத்தை உறுதிப்படுத்த வேண்டும்: ராமதாஸ்

image

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “விழுப்புரம் ஆனாங்கூரில் பழங்குடி இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் சங்கீதாவை சிலர் இருக்கையில் அமரவிடாமலும், கோப்புகளில் கையொப்பமிட விடாமலும் தடுப்பதாகக் கூறப்படுகிறது. பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான அதிகாரத்தை தமிழக அரசு உறுதிப்படுத்த வேண்டும்” எனக் கூறினார்.

News October 4, 2024

வல்லத்தில் சிப்காட் சார்பில் வேலைவாய்ப்பு முகாம்

image

திண்டிவனம் சிப்காட்டில் அமைந்துள்ள உலகத்தரம் வாய்ந்த காலணிகள் தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனத்தில், இளைஞர்கள் பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. செஞ்சி அடுத்த வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வரும் 6ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 9 மணி முதல் 1 மணி வரை மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில், ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்த இளைஞர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!