Villupuram

News October 6, 2024

கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை நிலவரம்

image

விழுப்புரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மி.மீ.): விழுப்புரம்-59, முண்டியம்பாக்கம்-62, வளத்தி-50, சூரப்பட்டு- 48, வளவனூர், கெடார் தலா- 45, கோலியனூர்- 43, கஞ்சனூர், மரக்காணம் தலா- 36, முகையூர்- 34, செஞ்சி- 31, அனந்தபுரம்- 24, அவலூர்பேட்டை- 22, மணம்பூண்டி- 19, திருவெண்ணெய்நல்லூர்- 13.50, அரசூர்- 13, வல்லம்- 11, செம்மேடு- 10, நேமூர்- 32, திண்டிவனம்- 8, வானூர்- 3 மழை பதிவாகியுள்ளது.

News October 6, 2024

ஏரிகளில் வண்டல் மண் எடுக்க அனுமதி: கலெக்டர்

image

அனைத்து விவசாயிகளும் தங்களது விவசாய நிலங்களை செம்மைப்படுத்தவும், மண்பாண்டம் செய்யும் தங்களது கிராமம் அமைந்துள்ள தாலுகாவிற்கு உட்பட்ட நீர்வளத்துறை மற்றும் ஊரகவளர்ச்சித்துறை கட்டுபாட்டில் உள்ள ஏரிகள், குளங்களில் வண்டல் மண், களிமண் ஆகியவற்றை இலவசமாக எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், ஏரிகளின் நீர்மட்டத்தை அதிகரித்து உதவுமாறு மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

News October 6, 2024

பிற கட்சிகள் ஆட்சிக்கு வர முடியாது: சி.வி.சண்முகம்

image

தமிழகத்தில் திமுக, அதிமுகவைத் தவிர பிற கட்சிகள் ஆட்சிக்கு வர முடியாது என்று விழுப்புரம் மாவட்ட அதிமுக செயலர் சி.வி.சண்முகம் எம்.பி. தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் தெற்கு மற்றும் வடக்கு நகரம் சார்பில் நிர்வாகிகள், செயல்வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. “அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட உயர்ந்த பதவிக்கு வர முடியும். ஆனால், திமுகவில் அப்படி இல்லை” என விமர்சித்துள்ளார்.

News October 6, 2024

சொத்து வரி செலுத்தினால் 5% ஊக்கத்தொகை

image

விழுப்புரம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரியை வரும் அக்.31ஆம் தேதிக்குள் செலுத்தினால், 5% ஊக்கத்தொகை வழங்கப்படும் என விழுப்புரம் நகராட்சி ஆணையர் வீரமுத்துக்குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், தங்கள் சொத்துவரியை முதுமையாக செலுத்தி, ஊக்கத்தொகையை பெறுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். ஷேர் பண்ணுங்க

News October 6, 2024

சாலை அமைக்கப்பட்டு வருவதை முன்னாள் அமைச்சர் ஆய்வு

image

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சிங்கவரம் அருள்மிகு ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோவிலுக்கு புதிய சாலை அமைக்கப்பட்டு வருவதை நேற்று முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் R.விஜயகுமார், செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி மஸ்தான், மற்றும் திமுக நிர்வாகிகள் இருந்தனர்.

News October 5, 2024

விழுப்புரத்தில் இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News October 5, 2024

ரயில் நிலையத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

image

விருதுநகரைச் சேர்ந்த மணிகண்டன், கடந்த மார்ச் மாதம் வீட்டிலிருந்து வெளியேறி விழுப்புரம் ரயில் நிலையத்தில் தங்கியிருந்தார். இந்த நிலையில், கடந்த 29ஆம் தேதி திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். பின்னர், விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விழுப்புரம் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 5, 2024

த.வெ.க. மாநாடு வாகனங்கள் பார்க்கிங்கில் எஸ்.பி. ஆய்வு

image

விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில், வரும் 27ஆம் தேதி த.வெ.க. மாநில மாநாடு நடைபெற உள்ளது. மாநாடு நடக்கும் பகுதியில், வாகனங்கள் நிறுத்த தேர்வு செய்யப்பட்ட இடங்களில் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச் நேற்று ஆய்வு செய்தார். பிரமாண்டமாக நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பந்தல்கால் நடுதல் நேற்று காலை கட்சியின் பொதுச்செயலாளர் முன்னிலையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மாலையில் அப்பகுதியில் எஸ்.பி. ஆய்வு செய்தார்.

News October 5, 2024

பனை விதைகள் நடும் விழா கலந்தாலோசனை கூட்டம்

image

விழுப்புரம் மாவட்டத்தில், அனைத்து கிராம ஊராட்சிகளிலும் பெருவாரியாக பனை விதைகள் நடும் விழா நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இதுதொடர்பான கலந்தாலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் வரும் 8ஆம் தேதி காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், விவசாய பெருமக்களின் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், கலந்து கொள்ளுமாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 5, 2024

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

image

செஞ்சி வேலந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் மற்றும் கிருஷ்ணகிரியைச் சேர்ந்த அலாவுதீன் இருவரும், குறைந்த விலைக்கு தங்கம் தருவதாகக் கூறி இப்ராஹிம் என்பவரை ஏமாற்றியுள்ளனர். இதுதொடர்பாக போலீசார் இருவரையும் கைது செய்த நிலையில், இவர்களது தொடர் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி. பரிந்துரையின் பெயரில், ஆட்சியர் பழனி உத்தரவின்படி போலீசார் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

error: Content is protected !!