Villupuram

News October 7, 2024

விழுப்புரம் காவல்துறை பொதுமக்களுக்கு அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் பண்டிகை காலத்தில் ஆன்லைன் செயலி மூலம் குறைந்த விலை பொருட்கள், பரிசு கூப்பன் மற்றும் பரிசுகள் தருவதாக வரும் போலி விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள். பணத்தை இழந்து வாடாதீர்கள். விழிப்போடு இருக்க வேண்டும், இவைகளை ஒதுக்க வேண்டும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

News October 7, 2024

சென்னை எழும்பூர் ரயில் புதுச்சேரி-முண்டியம்பாக்கம் இடையே ரத்து

image

புதுச்சேரியில் இருந்து அக்டோபர் 9 மற்றும் 11ம் தேதிகளில் காலை 5.35 மணிக்கு புறப்படவுள்ள சென்னை எழும்பூர் ரயில் (வண்டி எண் 16116) புதுச்சேரி – முண்டியம்பாக்கம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது. எனவே ரயிலானது முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.40க்கு புறப்பட்டு சென்னை சென்றடையும், என ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

News October 7, 2024

விழுப்புரத்தில் இன்று 471 மனுக்கள் பெறப்பட்டன

image

மக்கள் குறைதீர் கூட்டத்தில் முதியோர் ஓய்வூதியத் தொகை, கல்விக் கடன், வீட்டுமனைப் பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித் தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம் ஆகியவை கோரி 471 மனுக்கள் (மாற்றுத் திறனாளிகளிடம் பெறப்பட்ட மனுக்கள்: 26) வரப்பெற்றன. அவை அனைத்தையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிந்துரைத்து மேல் நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கினார்.

News October 7, 2024

விழுப்புரத்தில் புதிய அருங்காட்சியகம்?

image

விழுப்புரம் மாவட்டத்தில், செஞ்சிக்கோட்டை, திருவக்கரை தேசிய கல்மர பூங்கா மற்றும் சிறப்புமிக்க வரலாற்று பழ மையான கோவில்கள் குறித்த கல்வெட்டுகள் அமைந்துள்ளன. மாவட்டத்தில், சின்னங்களைப் பாதுக்காக்க, அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்நிலையில், 2022ம் ஆண்டு தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில், 5 கோடி ஒதுக்கப்பட்ட பணிகள் தொடங்கப்பட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

News October 7, 2024

விழுப்புரம் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

நிகழாண்டு தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு விற்பனை செய்ய தற்காலிக உரிமம் வழங்கப்படவுள்ளது. எனவே, விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் அரசுப்பொது இ-சேவை மையங்களில் இணையவழியில் விண்ணப்பிக்கலாம். நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பம், உரிமம் கோரும் இடத்துக்கான பத்திர நகல், வாடகை கட்டடமாக இருப்பின் வாடகை ஒப்பந்த பத்திரம், மனு தாரரின் முகவரிக்கான ஆதாரம்,வீட்டு வரி ரசீது, ஆகியவற்றுடன் விண்ணப்பிக்கலாம்.

News October 7, 2024

விழுப்புரம் அருகே நாளை மின்தடை

image

விழுப்புரம்,பூத்தமேடு துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக விழுப்புரம், வண்டி மேடு, பிடாகம், கப்பூர், ஆநன்னாடு, பாப்பன்குளம்,சோழகனூர், அய்யாங்கோவில்பட்டு, சோழாம்பூண்டி, அய்யூர்அகரம், எடப்பாளையம், கொய்யாதோப்பு, ஆரியூர், வெங்காந்தூர், P.மேட்டுப்பாளையம், அதனூர் (ஒரு பாகம்), பூத்தமேடு, ஓரத்தூர் ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படும்.

News October 7, 2024

விழுப்புரம் மாவட்ட காவல்துறை இரவு ரோந்து

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவிப்பு. விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (06.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள். அவசர காலத்திற்கு, ஏதேனும் உதவிக்கு, புகார்களுக்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவித்துள்ளது

News October 6, 2024

விழுப்புரம்: அரசை சாடிய ராமதாஸ்

image

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்திற்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் வழங்கப் பட்டிருக்கிறது என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட விவரங்களுக்கு, இரு மாதங்களுக்கு முன் இன்னொருவருக்கு வழங்கப்பட்ட அரைகுறையான, மோசடியான விவரங்களை வழங்கி திமுக அரசு ஏமாற்றியிருக்கிறது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது சமூக வலைத்தளத்தில் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

News October 6, 2024

விழுப்புரம்:விஜய் மாநாட்டுக்கு புதிய சிக்கல்?

image

விஜய்யின் முதல் அரசியல் மாநாட்டுக்கு 150க்கும் அதிகமான ஏக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மாநாட்டுக்கு சுமார் 3 லட்சம் பேர் வரை வந்து செல்வார்கள் என்று போலீசார் கணித்துள்ளனர். தற்போது பார்க்கிங்கிற்கு 44 ஏக்கர் நிலம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் 3 லட்சம் தொண்டர்கள் வரும்போது அந்த இடம் என்பது வாகன நிறுத்தத்திற்கு போதுமானதாக இருக்காது என போலீசார் கருதுகின்றனர்

News October 6, 2024

திண்டிவனம் நகராட்சிக்கு புதிய கமிஷனர்

image

திண்டிவனம் நகராட்சி கமிஷனராக பணிபுரிந்து வந்த தமிழ்ச்செல்வி, கடந்த ஜூலை மாதம் விருதுநகர் நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, திருப்பத்துார் நகராட்சியில் பணிபுரிந்து வந்த சத்தீஷ்குமார், திண்டிவனம் நகராட்சி கமிஷனராக பணியிடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், நாமக்கல் மாவட்டம், கொமாரபாளையம் நகராட்சி கமிஷனராக பணிபுரிந்து வந்த குமரன் திண்டிவனம் நகராட்சி கமிஷனராக நேற்று பொறுப்பேற்றார்.

error: Content is protected !!