India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விழுப்புரம் தொகுதியில் திமுக சார்பில் பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல்/நீக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்பார்வையிடுவதற்கான பார்வையாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில திமுக பொறியாளர் அணி தலைவர் துரை.கி.சரவணனை திமுக தலைமை கழகம் தேர்தல் பார்வையாளராக நியமனம் செய்துள்ளது.
திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் வரி உயர்வு உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை மக்கள் சந்தித்து வருவதாக கூறி அதிமுக சார்பில் மனித சங்கிலில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி, விழுப்புரம் நகரத்தில் தமிழக அரசை கண்டித்து கண்டனங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி அதிமுகவினர் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சீவி.சண்முகம் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் எஸ்.பி., ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், அவர்கள் அளிக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், ஊராட்சி மன்ற தலைவர்கள் அளிக்கும் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியரும் தெரிவித்துள்ளார். எனவே காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட எஸ்.பி., தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி, வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான மேடை அமைக்கப்பட்டு வருகிறது. மாநாடு மேடை, தமிழக அரசின் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் தலைமை செயலகம் வடிவில், 60 அடி அகலத்தில், 170 அடி நீளத்திற்கு 10,200 சதுர அடி பரப்பளவில் அமைகிறது. மேடையில் கட்சி தலைவர் விஜய் மற்றும் வி.ஐ.பி.,க்கள் தங்க, அனைத்து வசதிகளுடன் கூடிய தனித்தனி அறைகள் ஏற்படுத்தப்பட உள்ளது எனக் கூறப்படுகிறது.
பழங்குடியின ஊராட்சி மன்ற தலைவர்கள் சுதந்திரமாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என விழுப்புரம் கலெக்டர் கூறியுள்ளார். “சாதிய பாகுபாடுகள் இதுவரை ஏற்பட்டதில்லை. அப்படியிருந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு வரலாம். உங்களைச் செயல்படவிடாமல் தடுத்தாலும் தெரிவிக்கலாம். இதுவரை அப்படியொரு புகார்கள் வந்ததில்லை. யார் குறிப்பீடு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
திண்டிவனம், வேம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணபிள்ளை. இவர், நேற்று முன்தினம் இரவு திண்டிவனம்-செஞ்சி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் ஒன்று இவர் மீது மோதியது. பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ரோஷணை போலீசார் கார் டிரைவர் ரமேஷை விசாரித்து வருகின்றனர்.
மேல்மலையனூர் அடுத்த செவலபுரை பகுதியைச் சேர்ந்தவர் விஜய் (24). இவர், நேற்று முன்தினம் செஞ்சியில் இருந்து விழுப்புரம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தென் புத்துப்பட்டு அருகே எதிர்பாராத விதமாக அவர் மீது கார் மோதியது. இதில், விஜய் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து, ஆனந்தபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சிற்றம்பலம் கூட்ரோடு அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த ஒரு லாரியில் குட்கா பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது விசாரணையில் அவர்களது பெயர் ரமேஷ் அருள் என தெரிய வந்தது தொடர்ந்து அவர்களிடம் இருந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்து மற்றும் லாரி பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரும் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரத்தில் இருந்து அக்டோபர் 9ம் தேதி காலை 6 மணிக்கு புறப்படவுள்ள மயிலாடுதுறை ரயில் விழுப்புரம் – திருத்துறையூர் இடையே பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே ரயில் திருத்துறையூர் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6.19க்கு புறப்பட்டு மயிலாடுதுறை சென்றடையும், என ரயில்வே நிர்வாகம் நேற்று தகவல் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் புதிய டென்னிஸ் மைதானம் அமைக்கப்பட்டு வருவதை நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து ஆலோசனைகள் வழங்கினார். இந்நிகழ்வில் பல்வேறு தமிழக அரசின் அதிகாரிகள் மாநகராட்சி ஊழியர்கள் பொதுமக்கள் உடனிருந்தனர்
Sorry, no posts matched your criteria.