Villupuram

News October 9, 2024

புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் கொலை

image

கிளியனூர், கொஞ்சிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரகுமார். இவர், நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்ற அவர், நேற்று அதிகாலை கழுத்தில் காயங்களுடன் புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் இறந்து கிடந்துள்ளார். தகவலறிந்து வந்த விழுப்புரம் எஸ்.பி.தீபக் சிவாஜ் மற்றும் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுதொடர்பாக போலீசார் 6 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 9, 2024

விழுப்புரம் எஸ்.பி.-யை சந்தித்து பேசிய புஸ்ஸி ஆனந்த்

image

விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை பகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டிற்கான மேடை அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நேற்று விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாஜை, த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நேரில் சந்தித்து பேசியுள்ளார். மாநாட்டிற்கு மேலும் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து சந்தித்து பேசியதாக தகவல் தெரியவந்துள்ளது.

News October 9, 2024

புகையிலைப் பொருள்கள் விற்பனை: 11 கடைகளுக்கு சீல்

image

விழுப்புரம் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக, நேற்று 11 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினர் சீல் வைத்தனர். அய்யூர் அகரத்தில் உள்ள கடைக்கு சீல் வைத்த உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள், தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனையைத் தடுக்க விழுப்புரம் மாவட்டக் காவல்துறை மற்றும் உணவுப் பாதுகாப்புதுறை அதிகாரிகள் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

News October 9, 2024

விவசாய பிரதிகள் உடன் ஆட்சியர் கலந்தாய்வு

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பனை விதைகள் நடும் விழா தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள், விவசாய பெருமக்களின் பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடனான கலந்தாலோசனைக்கூட்டத்தில், விவசாயிகள் பனை விதைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.சி.பழனி,, அவர்களிடம் இன்று வழங்கினார்கள். உடன் மாவட்ட வன அலுவலர் .சுமேஷ் சோமன், இருந்தனர்.

News October 8, 2024

இன்று இரவு விழுப்புரம் மாவட்ட காவல்துறை ரோந்து

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (08.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் இவர்கள். உங்களது அவசர காலத்திற்கு., புகார்களுக்கு, உதவிக்கு, உங்கள் உட்கோட்ட அதிகாரியை அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என விழுப்புரம் மாவட்ட காவல்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது

News October 8, 2024

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பனை விதைகள்

image

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பனை விதைகள் நடும் விழா தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்கள், விவசாய பெருமக்களி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுடனான கலந்தாலோசனைக்கூட்டத்தில், விவசாயிகள் வழங்கிய பனை விதைமினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.சி.பழனி, பழனி,அவர்கள் வர்கள் இன்று நட்டு வைத்தார்.

News October 8, 2024

விழுப்புரம் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை

image

விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் பொதுமக்களுக்கு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், இணையத்தில் வரும் போலியான லிங் மூலம் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் (அ) மூதலீடு இல்லாமல் வேலை செய்து அதிக லாபம் ஈட்டலாம் என வரும் போலிகளை அனுகி ஏமாறாதீர்கள். பின் உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை இழக்க நேரிடும். மேலும், இது போன்ற சைபர் புகார்களுக்கு 1930 என்ற எண்ணில் அழைக்கவும்” என தெரிவித்துள்ளனர்.

News October 8, 2024

ராமேஸ்வரம் பெரோஸ்பூர் ரயில் வழி மாற்றம்

image

ராமேஸ்வரம் – பெரோஸ்பூர் Humsafar ரயில் பாதை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மண்டபம் ரயில் நிலையத்தில் இருந்து இன்று செவ்வாய் இரவு 11:10 மணிக்கு புறப்படும், வண்டி எண்: 20497. ராமேஸ்வரம் – பெரோஸ்பூர் Humsafar ரயில், விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை எழும்பூர் வழிக்கு பதிலாக, திருச்சி – கரூர் – நாமக்கல் – சேலம் – ஜோலார்பேட்டை – காட்பாடி – பெரம்பூர் (சென்னை) வழியாக திருப்பி விடப்படுகிறது.

News October 8, 2024

மேலும் ஒருவர் நாதக விருந்து விலகல்

image

நாதக வின் விழுப்புரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் கட்சியிலிருந்து விலகியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியில் இருந்தது வரும் நிலையில், தலைமை எங்களுக்கு சரியாக எந்த மதிப்பும் அளிக்காததால், அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் என்னை விலகிக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

News October 8, 2024

விழுப்புரத்தில் த.வெ.க மாநாட்டுப் பணிகள் தீவிரம்

image

விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு மிக பிரமாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை, திருவேற்கட்டை சேர்ந்த பந்தல் அமைப்பாளர்கள் விஸ்வநாதன், ராமநாதன் ஆகியோர் பூமி பூஜை அன்றே இப்பணியை துவங்கினர். 85 ஏக்கர் பரப்பளவில் உள்ள மாநாட்டு திடலில், மேடையானது பைபாஸ் சாலையில் செல்பவர்கள் பார்க்கும் வகையில் கிழக்கு நோக்கி அமைக்கப்பட உள்ளது.

error: Content is protected !!